யூரிக் அமிலத்தை குறைக்கும் வெற்றிலை.. வெயிட் லாஸுக்கு நாலஞ்சு இலை போதும்.. வெற்றிலைகளின் ஆரோக்கியம்
சென்னை: வெற்றிலைகளின் மருத்துவ பலன்கள் ஏராளம் இருக்கின்றன.. இதில், உடல் எடையை குறைக்க வெற்றிலையை எப்படி பயன்படுத்துவது? யூரிக் அமிலத்தை குறைக்க வேண்டுமானால், வெற்றிலையை எப்படி பயன்படுத்த வேண்டும்? என்பதை பார்ப்போம்.
வெற்றிலையை பொறுத்தவரை, வெப்பத்தை தரக்கூடியவை. மூளை, இதயம், கல்லீரல், மண்ணீரல் போன்ற உடலுறுப்புகளுக்கு பலத்தை தரக்கூடியவை. கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் C, தயாமின், நியாசின், ரிபோஃப்ளேவின், கரோட்டின் போன்ற சத்துக்கள் வெற்றிலையில் உள்ளன..

நரம்பு மண்டலம்: நரம்பு மண்டலத்துக்கு உறுதியை தரக்கூடியவை. பாலூட்டும் பெண்களின் தாய்ப்பால் சுரப்பியாக உதவுகிறது வெற்றிலைகள்.. வாய் துர்நாற்றத்தை நீக்கி, வயிற்றிலுள்ள வாயுவை வெளியேற்றக்கூடியவை.
ஆண்களின் விறைப்பு பிரச்சனைக்கு மருந்தாகின்றன வெற்றிலைகள். ஒரு கைப்பிடி வெற்றிலையை தண்ணீர் சேர்க்காமல் இடித்து வெறும் சாறு மட்டும் எடுத்து, தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் விறைப்பு பிரச்சனை சரியாகும்.. இந்த வெற்றிலையிலுள்ள அமிலங்கள், விரைவில் விந்து வெளியேறுவதையும் தடுக்கக்கூடியது..
இளம் கொழுந்து: உடல் கொழுப்பை எரித்து, வளர்சிதை மாற்ற விகிதத்தை வெற்றிலைகள் பெருக்குகின்றன.. இளம் கொழுந்து வெற்றிலையுடன் 5 மிளகு சேர்த்து, வெறும் வயிற்றில் தொடர்ந்து 8 வாரங்கள் மென்று தின்று வரும்போது, உடல் எடை குறைய துவங்கும்.. அல்லது, 2 வெற்றிலை, 2 மிளகு, 5 உலர்திராட்சை மூன்றையும் இரவு தூங்குவதற்கு முன் மென்று தின்று வரலாம்.
அதேபோல, உடலிலுள்ள யூரிக் ஆசிட் தொந்தரவை குறைக்க இந்த வெற்றிலைகளை பயன்படுத்தலாம். காரணம், வெற்றிலையில் பாலிபினால்கள், அத்தியாவசிய எண்ணெய்கள் போன்ற கலவைகள் உள்ளன.. இந்த கலவையானது, அலர்ஜி எதிர்ப்பு பண்புகளை கொண்டது.. உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க இந்த கலவை உதவுகிறது. வெற்றிலையை தொடர்ந்து சாப்பிடும்போது, வீக்கத்தை குறைக்கலாம்.. இதனால் கீல்வாதத்தின் தீவிரமும் குறையும்.
யூரிக் அமிலம்: வெற்றிலையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், யூரிக் அமில அளவைக் குறைக்கிறது.. உடல் செல்கள் சேதமடையாமலும் பாதுகாக்கிறது.. வெற்றிலையில் சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்தும் கலவைகள் உள்ளன... இந்த கலவைகள் உடலிலுள்ள யூரிக் அமிலத்தை அகற்ற பேருதவி புரிகிறது.. குறிப்பாக, யூரிக் அமிலத்தை சிறுநீர் மூலம் வெளியேற்ற அனுமதிக்கிறது. இதனால் மூட்டுகள், திசுக்களில் படிக உருவாவதற்கான ஆபத்தையும் குறைக்கிறது.
4 வெற்றிலையை சுத்தமாக கழுவி, 2 கப் தண்ணீரில் போட்டு கொதிக்க விடவேண்டும். பாதியாக சுண்ட வைத்து, வடிகட்டி அதில் வெதுவெதுப்பான நீரையும் கலந்து குடித்தால் போதும். எனவே, டாக்டர்களின் ஆலோசனையை பெற்று மருந்தாக உட்கொள்வதே சிறந்த ஆரோக்கியமாகும்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications