தொள தொளன்னு சதைகள் இருக்கா.. ஜஸ்ட் இந்த "பொடி" மட்டுமே போதும்.. வெயிட் லாஸுக்கு பெஸ்ட் டிப்ஸ்கள்
சென்னை: தொப்பை கரைய வேண்டுமானால், அல்லது தேவையற்ற ஊளைச்சதைகள் குறைய வேண்டுமானால், சில உணவு பழக்கங்களை மாற்றிக் கொண்டாலே போதும். இயற்கையான முறையிலேயே உடல் எடையை மெல்ல குறைக்கலாம். இதற்கு சில பொடிகள் உதவுகின்றன.
வழக்கமாக, உடல் எடை குறைய வேண்டும் என்றால், பச்சை காய்கறிகளும், கீரைகளும், தினம் ஒரு பழமும், போதுமான உடற்பயிற்சியும் மிக மிக அவசியம்.. இவைகளை தவிர்த்துவிட்டு, உடல் எடையை குறைப்பது என்பது கொஞ்சம்கூட சாத்தியம் கிடையாது. அதேசமயம், சின்ன சின்ன விஷயங்களில் நாம் கவனம் செலுத்தினால், உடல் எடை குறைய அவை பெரிதும் துணைபுரியும்.

தொப்பை: தொப்பையை குறைக்க வேண்டுமானால், முதலில் குறைக்க வேண்டியது அல்லது தவிர்க்க வேண்டியது உப்புதானாம்.. உப்பு, மைதா, சர்க்கரையை தவிர்த்தாலே பெரிய பாரம் குறைந்துவிடுமாம்.
அத்துடன் சின்ன சின்ன டிப்ஸ்களை தொடர்ந்து முயற்சிக்கும்போது, எடை குறைவதில் நல்ல வித்தியாசம் தெரியும் என்கிறார்கள். தொப்பைக்கு பெரிய எதிரியே இந்த சர்க்கரைதானாம்.. முக்கியமாக, முட்டை, தயிர், பருப்பு வகைகள் இருக்குமாறு காலை உணவு இருந்தால், உடல் எடை குறைவது சுலபமாகிவிடுமாம்.
வெந்தயம்: எனினும் சில பொடிகளை நாம் பயன்படுத்தி வந்தால், பலன் தெரியும் என்கிறார்கள்.. அதில் ஒன்றுதான் வெந்தயம்.. இந்த வெந்தய பொடியை எடுத்து, வெறும் வயிற்றில் தண்ணீருடன் சாப்பிட்டு வரவேண்டும் அல்லது வெந்தயத்தை இரவு ஊறவைத்துவிட்டு, மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.
அடுத்ததாக, ப்ரோக்கோலியில் காபி போட்டு குடிக்கலாம்.. புரோக்கோலி பொடி என்று கடைகளிலேயே விற்கிறார்கள்.. அல்லது, பொடி கடைகளிலும் ரெடிமேடாகக் கிடைக்கின்றன. ஆனால் நாம் வீட்டிலேயேயும் எளிதாகத் தயாரிக்க முடியும். ப்ரோக்கோலியை துருவிக்கொண்டு, வெயிலில் உலர்த்தி காயவைத்து பொடியாக மிக்சியில் அரைத்து வைத்து கொள்ளலாம். பாலில் காபி தூள் கலக்கும்போது, இந்த புரோக்கோலி பவுடரையும் ஒரு ஸ்பூன் கலந்து காபி போட்டு குடிக்கலாம்.
திரிபலா பொடி: திரிபலா பொடியை சாப்பிட்டு வந்தாலும் பலன் கிடைக்கும்.. ஜீரண சக்தியை பெருக்குவதுடன், உடலிலுள்ள கழிவுகளை அகற்றி உடல் எடை குறைய துணை புரிகிறது.. இந்த திரிபலா பொடியை ஒரு ஸ்பூன் எடுத்து, இரவு உணவுக்கு பிறகு வெதுவெதுப்பான நீரில் குடிக்கலாம் அல்லது காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் குடித்து வரலாம்.
உடல் எடை குறைய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ப்ரக்கோலியின் கீரையை பயன்படுத்தலாம். 2 ஸ்பூன் ப்ரக்கோலி பவுடர், அரை கப் ப்ரக்கோலியை பச்சையாக சாப்பிடுவதற்குச் சமமாம். அதனால், டாக்டரின் ஆலோசனையை பெற்று, இந்த ப்ரோக்கோலி பவுடரை பயன்படுத்தினால், உடல் எடை ஆரோக்கியமான முறையிலேயே குறைய தொடங்கும்.
காசினி கீரை: இந்த கீரையில் சூப் செய்து குடித்தாலும், எடை குறையும். அல்லது காசினி கீரையை உலர்த்தி பொடி செய்து, தினமும் இரவு நேரத்தில் வெந்நீரில் கலந்து சாப்பிட்டாலும் உடல் பருமன் குறையுமாம். சுக்குப்பொடியும் எடை குறைப்பதில் பெரிதும் துணைபுரிகிறது.. இதனால், அதிகப்படியான கொழுப்பை கரைகிறது..
கொள்ளு + பார்லி இரண்டையும் வறுத்து பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.. கொள்ளு பொடி 2 ஸ்பூன், பார்லி பொடி 1 ஸ்பூன், இரண்டையும் எடுத்து தண்ணீரில் கலந்து நன்றாக கொதிக்க வைத்து, மிளகுதூள், சீரகதூள், உப்புதூள் கலந்து குடித்தால், உடல் எடை குறைய தொடங்கும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications