பல்லெல்லாம் வீக்கமா.. ஈறுகளில் ரத்தக்கசிவா.. இந்த 5 சூப்பர் டிப்ஸ் போதுமே.. உங்க பற்கள் பளிச் பளிச்
சென்னை: வெண்மையான பற்கள் என்பது பலருக்கு கனவாகவே இருந்துவருகிறது.. மஞ்சள் கறைகளுடன், ரத்தக்கசிவும் பற்களில் வந்தால், இதை அலட்சியப்படுத்தக்கூடாது என்கிறார்கள்.
பற்களில் ரத்தக்கசிவு இருக்கிறதென்றால், இதற்கு நிறைய காரணங்கள் இருக்கலாம்.. பற்கள் பலவீனமாக இருந்தால் ரத்தக்கசிவு ஏற்படும்... வைட்டமின் குறைபாடுகள் இருந்தாலும், ரத்தக்கசிவு வரலாம்.. ஈறுகளில் தொற்று ஏற்பட்டாலோ அல்லது சரியான பற்களை தேய்க்காமல் விட்டாலோ அல்லது புகையிலை போன்ற காரணங்கள் இருந்தாலும் பற்களில் ரத்தக்கசிவு வரலாம்.

ரத்தக்கசிவு என்றாலே இதை அலட்சியப்படுத்தக்கூடாது.. இதற்கு வீட்டு வைத்தியத்தில் ஒருசில முறைகளை கையாண்டு எளிய முறையில் தீர்க்கலாம்.. அதேசமயம், ரத்தக்கசிவு தொடர்ந்தால், உடனடியாக டாக்டரை சந்தித்தாக வேண்டும்.
முதலாவதாக, உணவுமுறையில் மாற்றம் கொண்டுவந்துவிட்டாலே, ரத்தக்கசிவுகள் நின்றுவிடும். வைட்டமின் C & K குறைபாடுகள் இல்லாதவாறு உணவுகளை சாப்பிட வேண்டும். அந்தவகையில், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, கடுகு கீரை, பசலைக்கீரை, அவகேடோ, ஆரஞ்சு, மிளகு, நெல்லிக்காய் இவைகளை தினமும் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.
பழங்கள்: பழங்களிலேயே மாதுளை மிகவும் சிறந்தது.. காரணம், பாக்டீரியாக்களை அழிக்கும் சக்தி இந்த மாதுளைக்கு உண்டு.. தினமும் 30 மில்லி அளவு, சர்க்கரை சேர்க்காத வெறும் மாதுளை ஜூஸை எடுத்து வாய் கொப்பளித்தாலே, ரத்தம் வடிவது நின்றுவிடும்.. வடிவதைத் தடுக்க முடியும்.
இரவு தூங்கும்போது, ஈறுகளிலும், பற்களிலும், பற்களின் இடுக்குகிகளிலும் தேன் தடவி கொண்டு படுக்கலாம். இப்படி ஈறுகளை சுற்றி, தேன் தடவினால், ஈறுகளில் தொற்றுக்கள் இருந்தாலும் அழித்துவிடும். கற்றாழை ஜூஸ் + சிறிது பேக்கிங் சோடா சேர்த்து வாய் கொப்பளித்தாலும் ரத்தக்கசிவு நின்றுவிடும். ரத்தக்கசிவு வந்ததுமே, வெதுவெதுப்பான நீரில், உப்பு போட்டு வாயை கொப்பளித்தாலே ரத்தக்கசிவு குறைய தொடங்கிவிடும்..
எண்ணெய்கள்: இதற்கு 3 விதமான எண்ணெய்களை பயன்படுத்தி பார்க்கலாம்.. முதலில், நல்லெண்ணெய்யை வாயில் ஊற்றி ஆயில்புல்லிங் செய்தால் கிருமிகள் ஒழியும்..
தேங்காய் எண்ணெய் கொண்டும் வாயில் தேய்த்து மசாஜ் செய்தால் பலன் தரும். அல்லது ஆமணக்கு எண்ணெயில், ஒரு கற்பூரத்தை கலந்து ஈறுகளில் மசாஜ் போல செய்துவந்தாலும், நன்மை கிடைக்கும். அல்லது மஞ்சள் + கடுகு எண்ணெய் கலந்து மசாஜ் செய்தாலும் நுன்மை கிடைக்கும்,. ஆனால், ஆயில் புல்லிங் என்றாலே தேங்காய் எண்ணெய்தான் பெஸ்ட் என்கிறார்கள்.
சிறிது கிராம்பு எண்ணெயை எடுத்து உங்கள் ஈறுகளில் தேய்க்கலாம். அல்லது வாயில் போட்டு மென்றாலும் பற்களுக்கு நன்மை கிடைக்கும். ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்த் கிரீன் டீயை, தினமும் 2 வேளையாவது குடித்து வரலாம்.. உப்புத்தண்ணீரால் வாய் கொப்பளித்து வரலாம்.. மென்மையான பிரஷ்களில் பற்களை துலக்க வேண்டும்.. அதற்காக நீண்ட நேரம் பல் துலக்கக்கூடாது.. இதனால், பற்களின் எனாமல் கெட்டுவிடும்..
கிராம்புகள்: ஒரு சிறிய கரும்புள்ளி போல பற்களின் மேற்பரப்பில் தோன்றினால் அது பற்சிதைவு என்று அர்த்தம்.. சில வகை ரத்த புற்று நோய்களால் ஈறுகளில் ரத்தம் கசியலாம். எனவே, பற்கள் விஷயத்தில் அலட்சியம் காட்டாமல் உடனடியாக மருத்துவரை சந்திக்க வேண்டும்.
(இது பொதுவான தகவல்களை அடிப்படையாக கொண்டது. உங்கள் பிரச்சனைக்கு மருத்துவரை அணுகுவதே சிறந்தது. இந்த தகவலுக்கு "One India Tamil News" பொறுப்பேற்காது)
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications