நீரிழிவு நோயாளிகள் கேரட், பீட்ரூட் சாப்பிடலாமா? அப்ப வெல்லம்? சத்துக்கள் நிறைந்த தித்திப்பு காய்கள்
சென்னை: கிழங்கு வகைகளை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா? இனிப்பு நிறைந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு சாப்பிடலாமா? எல்லா தித்திப்பும் உடலுக்கு கெடுதல் தரக்கூடியவையா? இனிப்பு சுவை கொண்ட உணவுகள் குறித்து நிபுணர்கள் சொல்வதென்ன?
பீட்ரூட், கேரட் போன்ற வேர்க்காய்களை பொருத்தவரை, இனிப்பு தரக்கூடியவை.. சத்துக்கள் அதிகமாக இருப்பவை.. சர்க்கரை நோயாளிகளுக்கு, சர்க்கரையை குறைப்பதே இந்த, இனிப்பு காய்களின் கீரைகள்தானாம்..
கிழங்குகள்: பீட்ரூட் இலைகள், ரத்த சர்க்கரையை குறைத்து, ரத்த ஓட்டத்தை சீராக்கி, செரிமான கோளாறுகளையும் நீக்குகிறது இந்த இலைகள்.. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய பண்பு இந்த இலைகளுக்கு உள்ளது..

இனிப்பு காய் என்றாலும், தீங்கு விளைவிக்காத இயற்கை சர்க்கரை பீட்ரூட்டில் நிறைந்துள்ளது.. நார்ச்சத்துக்கள், பொட்டாசியம், இரும்புச்சத்து, மெக்னீசியம் போன்றவை அதிகமாக உள்ளதால் டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு பீட்ரூட் மிகவும் நல்லது என்று ஆய்வுகள் கூறுகின்றன. குறிப்பாக, உணவுக்கு முன்பு, பீட்ரூட் சாப்பிட்டால், கூடுதல் பலனை பெறலாம்.
வேர்க்காய்கள்: மற்ற வேர் காய்கறிகளுடன் ஒப்பிடும்போது, பீட்ரூட்டில் மாவுச்சத்து குறைவாக உள்ளது. எனவே சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதனை உட்கொள்ளலாம். இதிலுள்ள நார்ச்சத்து, ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் சீக்கிரம் உயர அனுமதிக்காது. அதனால் சர்க்கரையின் அளவு திடீரென உயராது.
அதுமட்டுமல்லாமல், பீட்ரூட்டில் ஆன்டிஆக்ஸிடன்ட்களான பீட்டாலைன்கள் உள்ளன. இது உடலில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலியைக் குறைக்க செய்கிறது.. அத்துடன், இன்சுலின் உற்பத்தியையும் அதிகரிக்க செய்கிறது.. எனவே சர்க்கரை நோய் உள்ளவர்கள் சர்க்கரை சேர்க்காமல் பீட்ரூட் ஜூஸ் சாப்பிடலாம் என்கின்றனர் நிபுணர்கள்.
கேரட் கிழங்குகள்: அதேபோல கேரட் கிழங்குகளில், A, B6, K1, K, போன்ற அரிய வைட்டமின்களும், பையோடின், பொட்டாசியம் சத்துக்களும் நிறைந்துள்ளன. எனவே, புற்றுநோய் போன்றவற்றை முளையிலேயே தடுத்து அழிக்கக்கூடிய தன்மை இந்த கேரட்டுக்கு உண்டு.. இனிப்பு சுவை கொண்ட இந்த கேரட் கிழங்குகள் சர்க்கரை நோயாளிகளுக்கும் நன்மை தரக்கூடியது.
சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க கேரட் உதவுகிறது. எனினும், கேரட்டை "அளவோடு" சாப்பிட வேண்டும்.. இந்த கிழங்கில் க்ளைசைமிக் குறியீடு குறைவாக இருப்பதால், இதை சாப்பிட்டதும் உடனடியாக ரத்த சர்க்கரை ஏறாது. ரத்த ஓட்டத்தில் சர்க்கரை உறிஞ்சப்படுவதை மெதுவாக்குவதோடு செரிமானத்திற்கு உதவுகிறதாம்.
சர்க்கரை வள்ளிக்கிழங்கு: அதேபோல சர்க்கரை நோயாளிகள் சர்க்கரைவள்ளிக்கிழங்கை சாப்பிடலாமா? என்ற சந்தேகமும் உள்ளது.. இந்த சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரை வள்ளிக்கிழங்கு உண்மையிலேயே அதிக பலனை தருகிறதாம். சர்க்கரை நோயாளிகள் இந்த கிழங்கை சாப்பிடும்போது ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது. ஆனாலும், இதை அதிக அளவில் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்கிறார்கள்.
இளநீர்களையும் நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாம்.. ஆனால், இதில் சர்க்கரையின் அளவு அதிகம் என்று பொய்யான தகவல் பரப்பப்படுகிறதாம்.. பெரிய இளநீராக இருந்தாலும்கூட, அதில் அதிகபட்சமாக 250 ML சர்க்கரைதான் இருக்கும்.. கார்போஹைட்ரேட்டுகளும் குறைவாக இருப்பதால் உடலுக்கு ஆரோக்கியமானதுதான் என்கிறார்கள்.
நீரிழிவு நோயாளிகள்: நீரிழிவு நோயாளிகள் வெல்லம் சாப்பிடலாமா என்றும் சந்தேகம் எழலாம்.. வெறும் 100 கிராம் வெல்லத்தில் 98 கிராம் கார்போஹைட்ரேட் இருக்கிறதாம். ஆனால், அதே அளவு சர்க்கரையில் 100 கிராம் கார்போஹைட்ரேட்டு நிறைந்திருக்கின்றன.. அந்தவகையில் 2 கிராம் மட்டுமே வித்தியாசம் உள்ளதால் நீரிழிவு நோயாளிகள் வெல்லத்தை சாப்பிட வேண்டாம் என்கிறார்கள்.:
வெல்லம் மட்டுமல்லாது, எந்த உணவு பொருளை சாப்பிடுவதானாலும், அதற்கு முன்பு நீரிழிவு நோயாளிகள் தங்களது கிளைசெமிக் அளவை கவனிப்பது கட்டாயமாகும்.
டாக்டர்கள் ஆலோசனை: எல்லா இனிப்பு சுவைகளும் கெடுதல் என்று அர்த்தமில்லை.. எனினும், அளவுக்கு மிஞ்சினாலும் அனைத்துமே நஞ்சுதான்.. எனவே, நீரிழிவு நோயாளிகள் இதுபோன்ற இனிப்பு உணவுகளை சாப்பிடும்முன்பு, மருத்துவர்களின் ஆலோசனையை பெறுவது கட்டாயமாகும்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications