Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வெறும் "இந்த தண்ணி" போதும்.. சர்ருன்னு வெயிட் குறையும் பாருங்க.. குட்டி விதையில் "பெரிய ஆச்சரியம்"

Subscribe to Oneindia Tamil

சென்னை: நம்முடைய கிச்சனில் மட்டுமல்ல, நம்முடைய தினந்தோறும் சமையலில் கட்டாயம் இடம்பெறுவது மல்லி விதை.. அல்லது தனியா விதை அல்லது கொத்தமல்லி விதை.. இதன் மருத்துவ குணங்கள் அனைத்தையும் பட்டியலிட்டு சொல்லிவிட முடியாது. ஓரளவு மட்டும் இப்போது பார்ப்போம்.

வைட்டமின்A, B1, இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், கார்போஹைட்ரேட், புரோட்டீன், செம்பு, துத்தநாகம், இரும்பு போன்ற தாதுக்கள் என பல்வேறு சத்துக்கள் இந்த கொத்தமல்லி விதையில் அடங்கி உள்ளன. நினைவாற்றலை அதிகரிக்க செய்கிறது.. நரம்பு மண்டலத்தை உறுதிப்படுத்துகிறது..

Health Benefits of Coriander Seeds and what are the Amazing Uses of Coriander Seeds

மல்லி விதைகள்: மல்லி விதைகள் குடல் இயக்கத்தை மேம்படுத்துகிறது.. நீரிழிவு எதிர்ப்பு பண்புகளை கொண்டது.. அதனால், இன்சுலின் வளர்ச்சியையும் ஊக்குவிக்கிறது. அலர்ஜி, கண் தொற்று போன்றவற்றை குணப்படுத்துகிறது. ரத்த சோகை நோயையும் தீர்த்து, ரத்த அழுத்தத்தையும் குறைக்க உதவுகிறது. இதனால் இதயத்துக்கு மிகவும் பாதுகாப்பான உணவாக இந்த மல்லி விதை உதவுகிறது..

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், இந்த விதையை பயன்படுத்தலாம்.. காரணம், கெட்ட கொழுப்பை குறைத்து, நல்ல கொழுப்பை அதிகரிக்க செய்யும் திறன் இந்த விதைக்கு உண்டு. தேவையற்ற கொழுப்புகளை கரைக்க உதவுவதால், உடல் எடை இழப்பில் பேருதவி புரிகிறது இந்த விதை.

சருமத்துக்கு நல்லது: சருமத்துக்கு மிகவும் நல்லது இந்த கொத்தமல்லி விதைகள்.. முகத்தில் எந்தவகையான தழும்புகள், பருக்கள் இருந்தாலும், அதை போக்கக்கூடியது இந்த மல்லி விதை..

இரைப்பை சம்பந்தப்பட்ட கோளாறுகளையும் இந்த விதை தீர்க்கிறது.. குறிப்பாக, அஜீரணம், வாயுத்தொல்லை, வயிற்று வலி, வயிறு எரிச்சல், வயிறு பொருமல் என அனைத்தையுமே இந்த மல்லி விதை நீக்கும். நுரையீரல் சம்பந்தப்பட்ட ஆஸ்துமா, சளி தொந்தரவு போன்ற தொந்தரவுகளையும் இந்த மல்லி விதை நீக்கும்.

எப்படி பயன்படுத்தலாம்: வெறும் குழம்பில் வாசனைக்கு மட்டுமே மல்லியை பயன்படுத்தி கொண்டிருக்கிறோமே தவிர, உண்மையிலேயே இதை முறையாக பயன்படுத்தினால் நிறைய நன்மைகளை பெறலாம்.

இந்த விதையை லேசாக வறுத்து பொடியாக்கி எடுத்து வைத்து கொண்டால், பல பிரச்சனைகைளை இந்த பொடி தீர்த்துவிடும்.. அதேபோல, இந்த பொடியில் டீ போட்டு குடிக்கலாம்.. இந்த பொடியை சுக்குப்பொடியுடன் சேர்த்து டீ போட்டுக் குடித்தால், வாய்வு தொல்லை விலகும்.. வயிறு, நுரையீல், பிரச்சனைகள் அத்தனையும் பறந்துவிடும். வயிற்றுப்போக்கு, குமட்டல் போன்றவற்றுக்கும் தீர்வு கிடைக்கிறது. உடலிலுள்ள நச்சுகளை சிறுநீர் மூலம் வெளியேற்ற உதவுகிறது.

Health Benefits of Coriander Seeds and what are the Amazing Uses of Coriander Seeds

நீரிழிவு மருந்துகள்: ஆனால், ரத்த சர்க்கரை அளவு உள்ளவர்கள், நீரிழிவு மருந்துகளை உட்கொள்பவர்கள், இந்த கொத்தமல்லியை தவிர்க்க வேண்டும் என்கிறார்கள்.. காரணம், ரத்தத்தில் இருந்து சர்க்கரையை நீக்க உதவும் நொதி செயல்பாடுகளை இந்த விதைகள் ஊக்குவிப்பதாக சொல்கிறார்கள்.

ஆனால், 10 கிராம் அளவு தனியாவை தண்ணீரில் இரவு ஊறவைத்து, காலையில் அந்த தண்ணீரை அருந்தினால் நீரிழிவு கட்டுப்பாட்டுக்குள் வரும் என்கிறார்கள். ஆனால், இதை மருத்துவர்களின் ஆலோசனையை பெற்று செய்வது நல்லது.

தனியா டீ தயாரிப்பது எப்படி: இந்த தனியாவில் டீ போட்டு குடிக்கலாம்.. 20 அல்லது தனியாவை இரவு முழுக்க ஊறவைத்து காலையில் அந்த தண்னீரில் தேவையான அளவு தேயிலை, சுக்கு லேசாக சேர்த்து கொதிக்கவைத்து, நாட்டுச்சர்க்கரை அல்லது தேன் கலந்து வெறும் வயிற்றில் குடித்தாலே போதும்.. உடலிலுள்ள வாயுக்களை அகற்றுகிறது.. பித்தம் நீங்கும். ஹார்மோன் சமநிலையாகிறது.

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், இந்த விதையை பயன்படுத்தலாம்.. காரணம், கெட்ட கொழுப்பை குறைத்து, நல்ல கொழுப்பை அதிகரிக்க செய்யும் திறன் இந்த விதைக்கு உண்டு. தேவையற்ற கொழுப்புகளை கரைக்க உதவுவதால், உடல் எடை இழப்பில் பேருதவி புரிகிறது இந்த விதை.

சருமத்துக்கு நல்லது: சருமத்துக்கு மிகவும் நல்லது இந்த கொத்தமல்லி விதைகள்.. முகத்தில் எந்தவகையான தழும்புகள், பருக்கள் இருந்தாலும், அதை போக்கக்கூடியது இந்த மல்லி விதை.. கரப்பான், காளான்படை முதலான தோல் நோய்களுக்கும் மல்லி விதை எண்ணெய் தீர்வு தருகிறது.

கொத்தமல்லி விதைகளை நீரில் இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த தண்ணீரை மட்டும் வடிகட்டி குடிக்க வேண்டும்.. இதனால், வெள்ளைப்படுதல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம். அல்லது 3 கிராம் கொத்தமல்லி பொடியை 150 மிலி கொதிக்கும் நீரில் போட்டு கொதிக்க வைத்து, குடிக்கலாம். வயிற்றுப்போக்கை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழித்து, வயிற்றுப் போக்கு பிரச்சனையில் இருந்து விடுவிக்கும் தன்மை உடையது.

1.2 கிராம் கொத்தமல்லி விதைகள் அல்லது அரை டீஸ்பூன் மல்லி பொடியை 150 மிலி நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, 15 நிமிடம் கழித்து, தேன் கலந்து வெதுவெதுப்பான நிலையில் குடித்தாலே போதும். மாதவிடாய் கால பிரச்சனைகள் தீரும்..
கண்கள் தொடர்பான பிரச்சனைகள் அரிப்பு, அழற்சி, கண் சிவத்தல் இப்படி பல பிரச்சனைகள் நீங்கும்..

கண்களுக்கு நல்லது: கொத்தமல்லி விதைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த தண்ணீரில் கண்களை கழுவி வந்தாலும், கண்கள் புத்துணர்ச்சி பெறும். கொத்தமல்லி விதைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, வடிகட்டி தேன் கலந்து குடித்தால், அனிமீயா பிரச்சனைகள் தீரும்.. குளிர்காலங்களில் ஏற்படுகிற சைனஸ், அலர்ஜி, சளி போன்ற தொந்தரவுகளில் இருந்தும் தப்பிக்கலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+