கறிவேப்பிலை தண்ணீர் ஆரோக்கியம்.. சர்க்கரை நோயாளியின் அமிர்தம்.. வெயிட் லாஸுக்கு உதவும் ஹெல்த் பவுடர்
சென்னை: கறிவேப்பிலையை பச்சையாகவும் சாப்பிடலாம், சமைத்தும் சாப்பிடலாம்.. ஆனால், ஊறவைத்து சாப்பிடுவதால், இரட்டிப்பு நன்மை கிடைப்பதாக சொல்கிறார்கள். அந்தவகையில், ஊறவைத்த கறிவேப்பிலை நீர் தரும் பலன்களை சுருக்கமாக இங்கே பார்ப்போம்.
கறிவேப்பிலையில், ஆண்டி ஆக்ஸிடென்ட், வைட்டமின் A, B, C, E, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கார்போஹைட்ரேட்டுகள், நார்ச்சத்து, மெக்னீசியம் , தாமிரம் என நம்முடைய உடலுக்கு தேவையான அத்தனை சத்துக்களும் உள்ளன. இதைத்தவிர, கிளைக்கோசைடுகள், ஃப்ளேவோனாய்டுகள் போன்றவை கறிவேப்பிலையில் நிறைந்திருப்பதால் பலவகையில் நன்மையை தருகின்றன.

கறிவேப்பிலை பொடி - சத்துக்கள்
கறிவேப்பிலை சாப்பிடுவது உடல் எடையை வெகுவாக குறைத்துவிடும்.. ஜீரண சக்தியை அதிகப்படுத்துகிறது.. இதய நோய் உள்ளவர்கள் கறிவேப்பிலையை அதிகமாக சாப்பிட வேண்டும்.
கறிவேப்பிலையை நிழலில் காயவைத்து, அதில், சீரகம், மிளகு, கல்உப்பு சேர்த்து அரைத்து வைத்து கொண்டால் போதும்., சாப்பாட்டில் இந்த பொடியை நல்லெண்ணையுடன் கலந்து சாப்பிடும்போது, அத்தனை சத்துக்களும் கிடைக்கும்.
வெறும் வயிற்றில் 10 கறிவேப்பிலையை சாப்பிட்டு வந்தாலே தேவையற்ற கொழுப்பு கரைந்து, குடல் ஆரோக்கியம் பெருகும்.. ரத்த சிவப்பணு அளவு அதிகரித்து, ரத்தமும் சுத்தமாகும். நல்ல கொழுப்புகள் அதிகமாகும். இந்த கறிவேப்பிலையுடன் சிறிது புதினா, எலுமிச்சம் சாறு கலந்து வடிக்கட்டாமல் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், நார்ச்சத்து அதிகமாக கிடைக்கும். தொப்பையும் குறையும். புதினாவுடன் நெல்லிக்காய் சேர்த்தும் அரைத்து குடிக்கலாம்.
கறிவேப்பிலை தண்ணீர்
அதேபோல கறிவேப்பிலை நீர் குடிப்பது கூடுதல் சத்துக்களை கிடைக்க செய்யுமாம்.. ஒரு கைப்பிடி கறிவேப்பிலையை, வெதுவெதுப்பான நீரில் ஊறவைத்து வடிகட்டி குடிக்கலாம்.. வெறும் தண்ணீருக்கு பதிலாக, இந்த கறிவேப்பிலை நீரையே பயன்படுத்தலாம்..
இந்த நீரை குடித்து வரும்போது, தசைகள், நரம்புகள் தளர்வடைவதுடன் மன அழுத்தமும் நீங்க செய்யும்.. நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடனும், சுறுசுறுப்புடனும் வைக்க செய்யும். கறிவேப்பிலை நீரில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள், அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
அவ்வளவும் பலன்தரும். கர்ப்பிணிகளுக்கு கறிவேப்பிலை போல சிறந்த நன்மை வேறு இல்லை.. 2 கிளாஸ் தண்ணீரில் ஒரு கைப்பிடி கறிவேப்பிலையை முதல் நாள் இரவே ஊறவைத்து, மறுநாள் காலை இதனுடன் சிறிதளவு சீரகம், இந்துப்பு சேர்த்து கொதிக்கவைத்து, வடிகட்டி குடித்து வரும்போது தலைமுடி வளரும்.. கறிவேப்பிலை நீரில் டீ தயாரித்து குடிக்கலாம், ஜூஸ் தயாரிக்கும்போதும் பயன்படுத்தலாம்.
சர்க்கரை நோயாளிகள்
இந்த நீர் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.. காரணம், இதிலிருக்கும் இரும்புச்சத்து ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது. ரத்த சர்க்கரை குறைவு பண்புகள் இருப்பதால், சர்க்கரை நோயாளிகள் கறிவேப்பிலையை மென்று சாப்பிட வேண்டும். கணையத்தில் இன்சுலின் உற்பத்தியும் அதிகரிக்கும். இரும்பு, துத்தநாகம் தாமிரம் போன்ற தாதுகள் உள்ளதால் சர்க்கரை அளவைக் குறைத்து நீரிழிவு நோயை கட்டுப்படுத்த செய்கிறது.
கறிவேப்பிலையை சிறிது பன்னீரில் ஊறவைத்து, அதில் சோம்பு சேர்த்து அரைத்து தலையில் தடவினால் ரத்த ஓட்டம் மேம்பட்டு, தலைமுடி வளர்ச்சி பெறும்.. தலைமுடி உதிர்வும் கட்டுக்குள் வரும்.
எனினும், அலர்ஜி உள்ளவர்கள், குழந்தை பெற்றவர்கள், கர்ப்பிணி பெண்கள் கறிவேப்பிலையை டாக்டர்களின் ஆலோசனை பெறாமல் அதிகமாக சேர்த்துக் கொள்ளக்கூடாது...!!












Click it and Unblock the Notifications