முருங்கை மரம்.. முருங்கையின் பிசின் தெரியுமா? "அந்த" பிரச்சனையை அடியோடு தீர்க்கும் இயற்கை தங்கபஸ்பம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: முருங்கை மரத்தில், இலை, பூ, காய், பட்டை என ஒவ்வொன்றும் மருத்துவ குணங்களை கொண்டது. அந்தவகையில் முருங்கை பிசினும் ஏகப்பட்ட மருத்துவ அம்சங்களை கொண்டது.

முருங்கை மரத்திலிருந்து வெளிவரும் பொருள்தான் முருங்கை பிசின்.. பார்ப்பதற்கு பிரவுன் கலரில் இருக்கும்.. ரப்பர் போல கெட்டித்தன்மை உடையதாக இருக்கும். முதலில் நீர்த்தன்மையுடன் காணப்பட்டாலும், நாளடைவில் இது இறுகி கெட்டியாகிவிடும். மரத்தின் பட்டைகளிலேயே ஆங்காங்கே இந்த பிசின்கள் ஒட்டிக் கொண்டிருக்கும்.

Health Benefits of Drumstick Resin Do you know Drumstick Resin is the Fantastic Medicine

கால்சியம்: முருங்கைமரத்தில் உள்ள அதிகப்படியான கால்சியம் + சுண்ணாம்புச்சத்து + நார்ச்சத்து போன்றவை அனைத்துமே சேர்ந்து, மரத்திலிருந்து பசை போல வெளியே தள்ளும்.. அதற்குதான் பிசின் என்று பெயர்... வெளியே தள்ளிவிடுவதால், இதை வீணான பொருள் என்று நினைத்துவிடக்கூடாது. தங்கபஸ்பத்திற்கு இணையான சத்துக்கள் இந்த பிசினில் உள்ளது என்கிறார்கள்.

ஏராளமான சத்துக்களும், வேதிப்பொருள்களும், அமினோ அமிலங்களும், தாது உப்புகளும் இந்த பிசினில் அடங்கி உள்ளன.. இந்த பிசின்கள் உடலை வலுப்படுத்தக்கூடியது..

இரும்புச்சத்து உட்பட கால்சியம், வைட்டமின் A, C, பொட்டாசியம், புரதம் இப்படி பல சத்துகள் இதில் இருக்கின்றன. இந்த பிசினை பலவகைகளில், பலவித பிரச்சனைகளுக்கு பயன்படுத்தலாம்.

சிறுநீர் நன்றாக வெளியேறவும்.. காய்ச்சல், ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளுக்கு முருங்கைப் பிசின் சிறந்த மருந்து. முருங்கை பிசினை உடைத்து, நெய்யில் வறுத்து தூள் வைத்து கொண்டால், இன்னும் நல்லது. இந்த பொடியே பல உபாதைகளுக்கு தீர்வு தருகிறது. இந்த பொடியை நெய்யில் வறுத்து, கொதிக்கும் நீரில் இரவில் போட்டு மூடிவிட வேண்டும்... மறுநாள் காலையில் அந்த நீரை வடிகட்டிக் குடித்து வந்தால் உடல் பலம் பெறும்..

Health Benefits of Drumstick Resin Do you know Drumstick Resin is the Fantastic Medicine

விந்தணுக்கள்: அதேபோல, இந்த பொடியை பாலில் கலந்து, கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வந்தால், ஆண்மை அதிகரிக்கும்.. பாலியல் தொந்தரவுகள் பல நீங்கும். விந்தணுக்களை அதிகரிக்கும் ஆற்றல் இந்த பிசினுக்கு அபரிமிதமாகவே உள்ளது. வாயு தொல்லையால் அவதிப்படுபவர்களுக்கு முருங்கைப் பிசின் நிவாரணத்தை தருகிறது. தலைவலி இருந்தாலும், இந்த பிசினை பாலுடன் கலந்து பற்று போட்டால் சரியாகும். காது வலி என்றாலும், இந்த பிசினை காதில் ஒரு சொட்டு விட்டால் போதும்.

முக்கியமாக, உடல் எடை குறைய நினைப்பவர்கள், ஜிம் செல்பவர்கள், இந்த பிசினை பயன்படுத்தலாம். பிசினை ஊறவைத்து மறுநாள் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். அத்துடன், வெறும் பழங்களை காலை உணவாக எடுத்து வந்தால், மிகப்பெரிய மாற்றம் உடலில் தெரிய ஆரம்பிக்குமாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+