சின்ன வெங்காயத்தை தேனில் ஊற வைத்து சாப்பிட்டால், இத்தனை பலனா? டெய்லி 2 துண்டு போதுமே.. ஹெல்த் டிப்ஸ்
சென்னை: சின்ன வெங்காயத்தை தேனுடன் ஊறவைத்து சாப்பிடும்போது, அதனால் கிடைக்ககூடிய நன்மைகள் என்னென்ன தெரியுமா? சின்ன வெங்காயம் தேன் சிரப் எப்படி தயார் செய்வது? சின்ன வெங்காயத்தை வெறுமனே சாப்பிடலாமா? சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
"அலைல் புரோப்பைல் டை சல்பைடு" என்ற எண்ணெய் போன்ற பொருள் வெங்காயத்தில் இருப்பதால்தான், நாம் உரிக்கும்போது கண்ணீர் வருகிறது. ஏராளமான மருத்துவ குணங்கள் இந்த சின்ன வெங்காயத்தில் உள்ளது.

100 கிராம் சின்ன வெங்காயத்தில் நீர்ச்சத்து, புரதம், கார்போஹைட்ரேட். கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்தும், வைட்டமின் B, C, கொழுப்பு, தாது உப்புகள், நார்ச்சத்துக்கள் அடங்கியிருக்கிறது. மலச்சிக்கல் தொந்தரவு உள்ளவர்கள் சின்ன வெங்காயத்தை நறுக்கி விளக்கெண்ணெயில் வதக்கி சாப்பிட்டால் தீர்வு கிடைக்கும்.
சின்ன வெங்காயம்:
ஒருநாளைக்கு 4 வேளை, அரை ஸ்பூன் சின்ன வெங்காயத்தின் சாறு குடித்து சாப்பிட்டு வந்தால் நுரையீரல் வலுவாகும்.. இந்த வெங்காயத்தை பச்சையாக மென்று சாப்பிட்டால் இதயம் பலமாகும்.
இந்த வெங்காய சாறு கொழுப்பை கரைக்கக்கூடியது... புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் சின்ன வெங்காயத்தில் நிறையவே உள்ளன. வைட்டமின் E சத்தும் அதிகம் என்பதால், கண் சம்பந்தப்பட்ட கோளாறுகளை முன்கூட்டியே சின்ன வெங்காயம் தடுக்கின்றன.
மண்ணீரல்:
பித்த உடம்பு தொந்தரவு உள்ளவர்கள், 4 சின்ன வெங்காயத்தின் தோலை உரித்து, சிறிது வெல்லத்தை சேர்த்து அரைத்து சாப்பிடலாம்.. ரத்தம் உறைதல், அடைப்பை நீக்கி மாரடைப்பு ஏற்படாமல் தடுக்கக்கூடிய தன்மையும் சின்ன வெங்காயத்துக்கு உண்டு.. மண்ணீரல் கோளாறுகள் நீங்கும். தடுமன், இளைப்பு, வாதம், பித்தக் கிறுகிறுப்பு, ஈரல் கோளாறு போன்ற உபாதைகளையும் குணமாக்கக்கூடிய சக்தி சின்ன வெங்காயத்துக்கு உண்டு.
50 கிராம் வெங்காயச்சாற்றில் சிறிது தண்ணீர் சேர்த்து 15 நாட்களுக்கு குடித்து வந்தால் ரத்த மூலமும் கட்டுக்குள் வரும். நரம்பு தளர்ச்சி பாதிப்பை கொண்டவர்கள், சின்ன வெங்காயத்தை வெறுமனே வதக்கி சாப்பிடலாம். ஆண்களுக்கு விறைப்பு தன்மை தொந்தரவு இருந்தால், இந்த வெங்காயத்தை அப்படியே பச்சையாக சாப்பிட வேண்டும். ஏனென்றால், டெஸ்டோஸ்டிரோனின் அளவை இந்த சின்ன வெங்காயம் அதிகரிப்பதாக ஆய்வுகளில் நிரூபணமாகி உள்ளது.
இரட்டிப்பு பலன்:
இந்த சின்னவெங்காயத்தை தேனில் ஊறவைத்து சாப்பிடுவதால், அதன் பலன்கள் இரட்டிப்பாக நமக்கு கிடைக்கிறது. சின்ன வெங்காயத்தை தோலுரித்து இரண்டாக கீறிக்கொண்டு, அது முழுகும் அளவுக்கு தேனை ஊற்றி 2 நாட்களுக்கு அப்படியே வைத்துவிட வேண்டும். 3வது நாள் சின்ன வெங்காயத்தில் தேன் நன்றாக இறங்கியிருக்கும். இதை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.
இந்த வெங்காயம் - தேன் கலவையில் வைட்டமின் A, B, B2, B3, B5, C, E, J சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும், ஆன்டி- பாக்டீரியல் தன்மை கொண்டுள்ளது. இதை தினமும் காலையில் எழுந்து வெறும் வயிற்றில் தேனில் ஊறவைத்த வெங்காயத்தைச் சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள நச்சுக்களை நீக்கி, ரத்த ஓட்டத்தைச் சீராக்குவதுடன், ரத்தத்தை சுத்தமாக்குகிறது. நீரிழிவு அதிகரிக்காமல் கட்டுப்படுத்துகிறது..
கெட்ட கொழுப்பு:
சின்ன வெங்காயம், தேன் இரண்டிலுமே ஏராளமான ஆன்டி - ஆக்சிடண்ட்டுகள் இருக்கின்றன.. இந்த இரண்டுக்குமே நச்சுக்களை முறிக்கும் தன்மை உள்ளன. இதனால், ஜீரண சக்தியை மேம்படுத்தி, மெட்டபாலிசத்தை அதிகரிக்க செய்கிறது.. செரிமான கோளாறுகளை சரிசெய்வதுடன், தேங்கி கிடக்கும் கழிவுகள் நச்சுக்களை நீக்குகிறது. இதில் கெட்ட கொழுப்பும் கரைந்து வெளியேறுகிறது. நோய் எதிர்ப்பு மண்டலம் பலம் பெறுவதுடன், நெஞ்சு சளி இருந்தாலும் வெளியேற்றிவிடும்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications