மீன் வாங்கறீங்களா.. அப்ப இந்த "மீனை" வாங்காதீங்க.. கர்ப்பிணிகள் "தொடவே" கூடாத மீன்கள் எது தெரியுமா?
சென்னை: கடல் உயிரினங்கள் உடலுக்கு நல்லதுதான்.. குறிப்பாக மீன்வகைகள் அனைவரும் சாப்பிடக்கூடியதுதான்.. அதேசமயம், எல்லா மீன்களையுமே, எல்லாருமே சாப்பிடலாமா? முடியாது.. சில சிக்கல்கள் உள்ளன.
காலம்காலமாக, நாம் சாப்பிட்டு வளர்ந்த மீனிலேயே, ரசாயனமும், நச்சுக்களும் உள்ளதென்றால், கேள்விப்படாத புதுபுது மீன்களை எல்லாம் வாங்கி சாப்பிட்டு ரிஸ்க் எடுக்க பலரும் தயாரில்லை.

குழந்தைகள்: அதேசமயம், கொலஸ்ட்ரால் அதிகமாக உள்ள மற்ற இறைச்சியை காட்டிலும் மீன் ஒரு பெஸ்ட் உணவு என்பதை மறுக்க முடியாது.. ஆனால், குழந்தைகளுக்கும், கர்ப்பிணிகளுக்கும் மீன்களை தாராளமாக தந்துவிடக்கூடாது.. காரணம், மீன்களிலும் நச்சுக்கள் இருக்கத்தான் செய்கின்றன.
பூமியின் வடிகால் கடல் என்பதால், அனைத்து விதமான கழிவுகளும் கடலில்போய் சேருகின்றன.. எனவே, நச்சுப்பொருட்களும், பாக்டீரியாக்களும், ரசாயனக் கழிவுகளும் கடலில்தான் கலக்கின்றன.. கடல் நீரில் வாழும் மீன்கள் இவைகளை தங்கள் உடலில் சேர்த்து வைக்கின்றன.. அந்த ரசாயன பொருட்கள் நம் உடம்பில் சேரும்போது, புற்றுநோய், குழந்தையின்மை, உள்ளிட்ட சிக்கல்களை தந்துவிடும்.
விஷத்தன்மைகள்: மீன்களை எவ்வளவு பதப்படுத்தினாலும், எவ்வளவு கொதிநீரில் வேகவைத்தாலும், சில விஷப்பொருட்கள் முழுமையாக நீங்குவதில்லை. அவ்வளவு ஏன்? சில மீன் பண்ணைகளில், வியாபாரத்துக்காக வளர்க்கப்படும் மீன்களுக்கு ஆன்டிபயாடிக் மருந்துகள் தரப்படுவதாக தெரிகிறது.. அதையும் மீன்களை கவனமாக பார்த்துதான் சாப்பிட வேண்டும்.
எனவே, அதிகம் கழிவுகள் கலக்காத குறிப்பாக பாதரசம் இல்லாத மீன்வகைகளை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். அதாவது, பாதரசம் நீரில் கலக்கும்போது அது மெத்தில் மெர்குரி என்று பாக்டீரியாவால் மாற்றப்படுகிறது.,. நீரில் உள்ள மீன்கள் இந்த மெத்தில்மெர்குரியை உறிஞ்சுகின்றன.. நாம் மீன்களை சமைத்தபிறகும்கூட, மீன்களின் உடலில் பாதரசம் காணப்படுகிறது.
பாதரசம்: இந்த பாதரசம் கொண்ட மீன்களை கர்ப்பிணிகள் சாப்பிட்டால், குழந்தைக்கு பாதிப்பு ஏற்படும்.. மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை அதிகளவு பாதிக்கும்.. பார்வை குறைபாடு ஏற்படுத்தும். அதனால்தான், இதுபோன்ற மீன்களை தவிர்க்க வேண்டும் என்கிறார்கள். அதற்கு பதிலாக, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ள மீனை கர்ப்பகாலத்தில் சாப்பிடலாம்.
சுறா, சுரை, வாள்மீன், கிங் கானாங்கெளுத்தி போன்ற பெரிய மீன்களின் உடலில் பாதரசம் அதிக அளவில் இருக்குமாம். கலவா, கொடுவா, கீரை மீன் போன்றவற்றிலும் ஓரளவு இருக்கிறதாம். அதனால் இந்த வகை மீன்களை குறைவாக சாப்பிட வேண்டும், அதாவது மாதம் ஒருமுறை சாப்பிடலாம் என்கிறார்கள். ஆனால், குழந்தைகளும், கர்ப்பிணிகளும் இதை சாப்பிடவே கூடாது.
பாதரசம் அளவு: கெண்டை, பன்னா, கடல் இறால், கொண்டல், போன்ற வகை மீன்களில் பாதரசத்தின் அளவு, ஓரளவு குறைவாக இருக்கிறதாம். அதனால் இதை மாதம் 2 முறை சாப்பிடலாம். அப்போதுகூட, கர்ப்பிணிகள், குழந்தைகள் இதை சாப்பிடவே கூடாது.
சால்மன், சங்கரா, வெளவால், நெத்திலி, விரால், கெளுத்தி, ஆற்று நண்டு, ஏரி நண்டு, காணாங்கெளுத்தி, சிப்பி, காலா, மத்தி, சிறிய இறால், ஊசி கனவா, கரி மீன், கிழங்கா போன்ற சிறிய வகை மீன்களின் உடலில், பாதரசத்தின் அளவு மிக குறைவாகவே இருப்பதால், இதை குழந்தைகளும், கர்ப்பிணிகளும் ஓரளவு சாப்பிடலாம்..
சிறிய மீன்கள்: காரணம், குழந்தைகளின் நரம்பு மண்டல வளர்ச்சியை பாதரசம் பாதிக்கலாம்.. இதில் கர்ப்பிணிகள், கடல் மீன்களை சாப்பிடுவதற்குப் பதிலாக, அவரவர் வசிக்கும் பகுதிகளிலுள்ள ஓடும் நீரிலுள்ள சிறிய மீன்களை சாப்பிடுவது மிகவும் நல்லது. அதிலும் மத்தி மீன் ரொம்ப நல்லது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications