உங்க வீட்டில் மீன் வாங்கினால் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம்? உடலுக்கு ஆரோக்கியம் தரும் மீன் எண்ணெய்
சென்னை: கடல் உணவுகள் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடியவை.. அதிலும் மீன் வகைகளை சாப்பிடுவது பல வகைகளில் நன்மை தருகிறது.. எனினும் மீன் வாங்கும்போது சில முக்கிய விஷயங்களை கவனிக்க வேண்டியிருக்கிறது.. அதிலும், கோடை காலத்தைவிட, குளிர்காலங்களில் மீனை வாங்கும்போது 5 முக்கிய விஷயங்களை கவனிக்க வேண்டுமாம். அவைகளை பற்றி இங்கே பார்ப்போம்.
எப்போதுமே மீன் வாங்கினால், அந்த மீன்களில் ஈக்கள் மொய்த்திருக்க வேண்டும். அதுதான் ஃபிரஷ் மீன்களாகும்.. பழைய மீன்கள் என்றால், கெமிக்கல் தெளித்து வைத்திருப்பார்கள்.. இந்த மருந்து வாடைக்கு ஈக்கள் வராது.

மீனை தொட்டு பார்க்கும்போது, சதைப்பகுதி கல் போல கெட்டியாக இருக்க வேண்டும்.. மீனை தொட்டதுமே தோல் உரிந்து வந்தால், அது பழைய மீனாகும்.. மீனின் கண்கள் வெள்ளை நிறத்தில் இருந்தால் அது பழைய மீனாகும்.. மீனின் செவுள், சிகப்பு, ஆரஞ்சு நிறத்தில் இருந்தால் அது ஃபிரஷ் மீனாகும். வெள்ளை கலரில் இருந்தால் தவிர்த்து விடலாம்.
பழைய மீன்கள்
கெட்டுப்போன மீனில் பழைய மீனில் நாற்றம் அதிகமாக இருக்கும்.. மீனின் வால் பகுதியும், கழுத்து பகுதியும் விறைப்பாக இருக்க வேண்டும். எனவே அதிக செதில்கள், முள் அதிகமாக இருக்கும் மீன்களை பார்த்து வாங்க வேண்டும். இவைகளில் ருசி அதிகமாக இருக்கும்.
மீனை கழுவும்போது, அதிலுள்ள பச்சை பொருட்களை முழுமையாக நீங்கும்வரை சுத்தம் செய்ய வேண்டும்.. மீனில் கசப்பு தன்மை இருந்தால், உடலுக்கு தீங்கு ஏற்படும்.. குறிப்பாக, மீன் செதில்களை நன்றாக கழுவ வேண்டும். கல் உப்பு, தயிர், அல்லது மோர் கலந்து சுத்தம் செய்யலாம்.. வழுவழுப்பு மீன்களாக இருந்தால் ராகி மாவை கலந்து சுத்தம் செய்யலாம். இதனால் துர்நாற்றமும் நீங்கும். அதேபோல வினிகர் கலந்து சுத்தம் செய்வதை வழக்கமாக கவைத்து கொள்ள வேண்டும்.
நல்ல கொழுப்பு
மீன்களை சாப்பிடாதவர்கள் அல்லது அலர்ஜி உள்ளவர்கள், மீன் மாத்திரையை மருத்துவர்களிடம் ஆலோசனையை பெற்று சாப்பிடலாம்.. மீன் திசுக்களிலிருந்து பிரித்தெடுக்கப்படும் கொழுப்புதான் மீன் எண்ணெய் ஆகும்.
ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக உள்ள திமிங்கலம், சால்மன், மத்தி போன்ற மீன்களிலிருந்து இந்த மீன் மாத்திரை தயாரிக்கப்படுகிறது.
இந்த மாத்திரை சாப்பிடும்போது, மூளையின் செயல்பாட்டுத் திறன் பெருக்க செய்கிறது, முடக்குவாதம் பிரச்சனையை தடுக்க செய்கிறது.. குழந்தைகளுக்கு எலும்புகள் சம்பந்தமாக ஏற்படும் ரிக்கெட்ஸ் நோயை நீக்குகிறது. கேன்சரை எதிர்த்து போராடுகிறது. நரம்பு பாதிப்பு தீர்கிறது, சருமத்தை ஆரோக்கியமாகிறது, வயிற்று புண்கள் ஆறுகின்றன, உடல் எடை குறைகிறது, ஆண்மை அதிகரிக்க செய்கிறது, மூட்டு வலி, முழங்கால் வலி தீருகிறது. உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் தேங்காது என்கிறார்கள் நிபுணர்கள்,
யாரெல்லாம் தவிர்க்கலாம்
அதுமட்டுமல்ல, EPA என்ற நோய் எதிர்ப்பு திறன் இந்த மாத்திரையில் உள்ளதால், மன அழுத்தத்தை போக்கி, சுறுசுறுப்பை தருகிறது. கர்ப்பிணிகள் சாப்பிட்டால், வயிற்றிலுள்ள குழந்தைக்கு கண்பார்வை தெளிவடைந்து, மூளை வளர்ச்சியும் கூர்மையாக இருக்குமாம்.
எனினும் மருத்துவர்களின் அறிவுரையை பெறாமல் சாப்பிடக்கூடாது,. அதேபோல, ஆபரேஷனுக்கு தயாராகி வருபவர்கள், குறைந்த ரத்த அழுத்த பாதிப்பு, நீரிழிவு பாதிப்பு உள்ளவர்கள், மீன் மாத்திரையை தவிர்க்கலாம்.












Click it and Unblock the Notifications