மீனை மாதிரியே..மீன் எண்ணெய்யின் எண்ணற்ற நன்மைகள்.. மீன் மாத்திரையை "இவங்க" தொடவேக்கூடாது..ஜாக்கிரதை
சென்னை: பொதுவாக மீன் எண்ணெய் மாத்திரைகள் உடலுக்கு நன்மை தரக்கூடியவைதான்.. எனினும், இந்த மீன் எண்ணெய்யை அனைவருமே சாப்பிடக்கூடாது. அதிலும் மருத்துவரின் அனுமதி இல்லாமல் மாத்திரை எடுத்து கொள்ளக்கூடாது என்கிறார்கள்.
ஒமேகா 3 அதிகமுள்ள, சால்மன், மத்தி போன்ற மீன் வகைகளில் இருந்துதான், இந்த மீன் எண்ணெய் எடுக்கப்படுகிறது.. திமிங்கலம் போன்ற பெரிய மீனிலிருந்தும் தயாரிப்பார்கள். திமிங்கலத்தை பெரும்பாலும் நாம் சமைக்க மாட்டோம். அதனால்தான், வைட்டமின் மாத்திரைகள் இந்த மீனிலிருந்து தயாரிக்கப்படுகின்றன.

மீன் மாத்திரை: இந்த மீன் மாத்திரையை சாப்பிடுவதால், இதய நோய்களின் அபாயம் குறைகிறது.. கொலஸ்ட்ரால் குறைகிறது.. மன அழுத்தம் நீங்குகிறது.. மூட்டுகளில் வலி, முடக்குவாதம் சரியாகின்றன.. கால்சியம் பிரச்சனை தீர்கிறது.. புற்றுநோய் செல்கள் அண்டாது.. குடல் பகுதி ஆரோக்கியமாக மாறுகிறது.. சுவாச பிரச்சனைகளுக்கு மீன் எண்ணெய் தீர்வை தருகிறது.. குறிப்பாக, ஆஸ்துமா பிரச்சனையை இந்த மீன் எண்ணெய் தீர்க்கிறது.
நரம்புகளில் உண்டாகும் பாதிப்பையும் சரிசெய்கிறது.. தினமும் 1 மீன் எண்ணெய்யை எடுத்து கொண்டால், உடல் எடை குறைய உதவியாக இருக்கும்.. சருமம் பளபளக்கும்.. கண்பார்வையும் கூர்மை பெறும்.. வயிற்றிலுள்ள புண்கள் ஆறும்.. செரிமானம் சீராகும்.
ஆண்களுக்கு நல்லது: அதுமட்டுமல்ல, ஆண்களுக்கு பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறதாம் இந்த எண்ணெய்.. மீன் எண்ணெயை தினமும் சாப்பிடுவதன் மூலம், ஆண்மை அதிகரித்து தாம்பத்திய வாழ்க்கை மேம்படுவதாகவும், அதன் மூலம் குழந்தை பேறு பெரும் வாய்ப்பையும் அதிகரிக்க முடியும் என்றும் விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.
இப்படி ஏகப்பட்ட நன்மைகள் தந்தாலும்கூட, அளவுக்கு மிஞ்சினால் எல்லாமே ஆபத்துதானே.. அந்தவகையில், இந்த மீன் எண்ணெய் மாத்திரையை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது தெரியுமா? அதேசமயம், மீன் மாத்திரையை யாரெல்லாம் சாப்பிடலாம் தெரியுமா?
இதய நோயாளிகள்: இதயத்துக்கு நன்மை தரக்கூடியது என்பதால், மீன் எண்ணெயை நேரடியாக எடுத்துக்கொள்ள முடியாதவர்கள், மீன்களையே சாப்பிடலாம். பெரும்பாலும் இதயப்பிரச்னை உள்ளவர்களுக்கு மட்டுமே இந்த மீன் மாத்திரையை டாக்டர்கள் பரிந்துரைப்பார்கள்.. சமீபத்தில்கூட, இதய நோய்களுக்கான அமெரிக்க அமைப்பு (American Heart Association) வாரத்தில் 2 முறையாவது மீன் வகைகளை சாப்பிடும்படி அறிவுறுத்தியிருந்தது.
அதேசமயம், நிறைய மீன் மாத்திரைகள் சாப்பிட்டால், வயிறு தொடர்பான கோளாறுகள் வந்துவிடும்.. அதேபோல, ஆபரேஷன் செய்துகொள்ள தயாராகி வருபவர்களும், மீன் எண்ணெய்யை அதிகம் எடுத்து கொள்ளக்கூடாது.. காரணம், ஆபரேஷன் நடைபெற்ற இடத்தில் ரத்தக்கசிவு வருமாம்..
சர்க்கரை நோயாளிகள்: குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்களும் டாக்டரின் அனுமதியை பெற்று சாப்பிட வேண்டும்.. அதேபோல, அதிகளவு ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உட்கொள்வது, நீரிழிவு நோயாளிகளில் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும் என்று ஆராய்ச்சிகள் சொல்கின்றன.. குறிப்பாக, டைப் 2 நீரிழிவு நோயாளிகள் ஒமேகா 3 சப்ளிமெண்ட்ஸ்களை எப்போதுமே, டாக்டரின் ஆலோசனையை பெறுவது நல்லது.
நிறைய மீன் எண்ணெய் சாப்பிட்டால், தூக்கமின்மை, மனச்சோர்வு போன்ற பிரச்சனைகளும், ஈறுகள் மற்றும் மூக்கு ரத்தப்போக்குக்கு வழிவகுக்கும் என்றும் சொல்கிறார்கள்.
யார் யார் சாப்பிடலாம்: எந்தவித நோயும் இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பவர்கள், ஒருநாளில் ஒன்றரை டீஸ்பூன் மட்டுமே இந்த எண்ணெய்யை சாப்பிடலாம்.. குழந்தைகளுக்கு எலும்புகள் சம்பந்தமாக ஏற்படும் நோயான ரிக்கெட்ஸ் நோயை போக்குவதற்கு இந்த மீன் எண்ணெய் தரப்படும் என்றாலும், அதையும் டாக்டர்களின் பரிந்துரையில்தான் தரவேண்டும்.












Click it and Unblock the Notifications