வெறும் 2 இலை போதும்.. ஓவர்நைட்டில் "தலையில்" நடக்கும் ஆச்சரியம்.. இயற்கையின் தங்கபஸ்பம்.. விடாதீங்க
சென்னை: அந்த காலத்திலேயே செம்பருத்தி பூவுக்கென்று, முக்கியத்துவம் அதிகமாக இருந்தது.. அதனால்தான் சித்தர்கள் இதனை இயற்கையின் தங்கபஸ்பம் என்று சொல்கிறார்கள்.. அந்த அளவுக்கு மருத்துவமும், மகத்துவமும் நிறைந்ததுதான் இந்த செம்பருத்தி.
பெரும்பாலும் தலையில் யாரும் இதை வைக்க மாட்டார்கள்.. ஆனால், வழிபாட்டுக்கு பயன்படுத்துவார்கள்.. அதேபோல, செம்பருத்தி செடி தரும் நன்மைகள் அபாரமானது. செம்பருத்தியின் வேர் முதல் இலை, பூ என எல்லாமே மருத்துவ சக்தி வாய்ந்தது.

தலைக்கு ஷாம்பு: செம்பருத்தி குளிர்ச்சியானது.. அதனால்தான், தலைக்கு பயன்படுத்தும் சீயக்காய் முதல் ஷாம்பு வரை மூலப்பொருட்களாக பயன்படுத்துகிறார்கள்.. இந்த பூவின் இதழ்களையும், செம்பருத்தி இலைகளையும் சேர்த்து காய்ச்சி தலைமுடிக்கு தடவுவார்கள். இதனால், முடி கொட்டுவது நிற்பதுடன், தலைமுடியும் அதிகமாக வளர துவங்கும்.. கண்களுக்கும் குளிர்ச்சி கிடைக்கும்.
அதுமட்டுமல்ல, செம்பருத்தி இலையை மட்டுமே கூழ்போல அரைத்து, தலைக்கு தடவி குளித்தாலே போதும்.. மிகச்சிறந்த பெஸ்ட் ஹேர் கண்டிஷனர் இந்த செம்பருத்தி இலை.. ஒருவேளை, தலையில், பேன்கள் தொல்லை இருந்தால், செம்பருத்தி பூக்களை, தலையில் வைத்துக் கொண்டு தூங்கினால் போதும்.. செம்பருத்தி வாடைக்கு, பேன்கள் ஓடோடிவிடும்.
இதயநோய்கள்: இதயநோய்க்கு அருமருந்தாவது இந்த செம்பருத்திப்பூக்களே.. வெறும் வயிற்றில் செம்பருத்தி பூக்களின் இதழ்களை மென்று தின்று வரலாம் அல்லது இந்த இதழ்களை மட்டுமே வைத்து, ஜூஸ் போட்டு குடிக்கலாம்.. இதனால், இதய நோய்கள் நம்மை அண்டாது.. அத்துடன் இதயநோய்களும் குணமாகிவிடும்.. அல்லது செம்பருத்தி பூக்களை காய வைத்து பொடி செய்து வைத்துக் கொண்டு சாப்பிட்டால், இதய பலவீனம் அகலும்.
பெண்களுக்கு அதிகமான உதிரப்போக்கு இருந்தால், செம்பருத்தி இதழ்களை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் தீர்வு கிடைக்கும்.. கருப்பை கோளாறுகளும் நீங்கும்.. செம்பருத்தி பூக்களை பேஸ்ட் போல அரைத்து, வெறும் வயிற்றில், 7 நாட்களுக்கு சாப்பிட்டால் போதும்.. மாதவிடாய் பிரச்சனை சீராகும்.. அல்லது செம்பருத்தி பூக்களை நிழலில் உலர்த்தி, பவுடர் செய்து, காலையிலும், மாலையிலும் 7 நாட்கள் சாப்பிட்டாலும் தீர்வு கிடைக்கும்..
பூவின் இதழ்கள்: காமத்தை பெருக்கக்கூடிய சக்தி இந்த செம்பருத்திக்கு உண்டு.. அதேபோல, செம்பருத்தி இலை அல்லது பூக்களை ஏதேனும் ஒரு விதத்தில் உணவாக சாப்பிட்டு வரும்போது, உடல்சூடு தணிந்து, சிறுநீர் வழியாக நச்சுக்கள் வெளியேறும். ரத்த அழுத்தம் பிரச்சனை உள்ளவர்கள், இந்த பூவின் இதழ்களை நீரில் கொதிக்க வைத்து குடித்தாலே நிவாரணம் கிடைக்கும்.
இந்த பூக்களை வைத்து டீ போட்டு குடிக்கலாம்.. ஒரு பாத்திரத்தில் நான்கைந்து செம்பருத்தி பூக்களை போட்டு, நன்றாக கொடிக்க வைத்து, வெல்லம் அல்லது நாட்டுச்சர்க்கரை சேர்த்து குடிக்கலாம். இதனால் உடலிலுள்ள பித்தம் நீங்கும்... உடல் சூடும் தணியும்..
செம்பருத்தி பொடி: ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள், செம்பருத்தி இதழ்களை மட்டும் விட்டுவிடக்கூடாது.. செம்பருத்தி பூக்களை பொடி செய்து வைத்து கொண்டாலும் பலன் தரும். இதனால், உடலில் ரத்தசோகையும் நீங்கும். ரத்த கொலஸ்ட்ரால் அளவும் குறைகிறது... அதாவது, 22% வரை கொலஸ்ட்ரால் அளவை இது குறைக்கிறதாம். இதனால், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாகும்..
(இது பொதுவான தகவல்களை அடிப்படையாக கொண்டது. உங்கள் பிரச்சனைக்கு மருத்துவரை அணுகுவதே சிறந்தது. இந்த தகவலுக்கு "One India Tamil News" பொறுப்பேற்காது)












Click it and Unblock the Notifications