ஆட்டுக்கறியை விடுங்க.. கெளுத்தி மீனை வாங்கினால், இப்படி செய்து பாருங்க.. "அந்த" பிரச்சனையும் தீரும்
சென்னை: மீன்கள் என்றாலே மிகச்சிறந்த உணவாக கருதப்படும் நிலையில், கெளுத்தி மீனின் நன்மைகளையும் அறிய வேண்டி உள்ளது.. அப்படி என்னென்ன சத்துக்கள் இந்த மீனில் அடங்கி உள்ளன தெரியுமா?
உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு, இந்த கெளுத்தி மீன்தான் மிகச்சிறந்த உணவு என்கிறார்கள். காரணம். 6.1 கிராம் கெளுத்தி மீனில், வெறும் 122 கலோரி அளவே இருப்பதால், இதை தாராளமாக சாப்பிடலாம்.. மீன்களில் கலோரி குறைவாக உள்ள மீனாக இந்த கெளுத்தி திகழ்கிறது.. இதிலுள்ள புரதச்சத்து உடலுக்கு ஆற்றலை தரக்கூடியவை..
உடல் எடை: கார்போஹைட்ரேட்கள் அவ்வளவாக இல்லை என்பதால், அடிக்கடி இந்த மீனை சாப்பிடலாம். விட்டமின் B12 நிறைந்த கெளுத்தி மீன், உடல் எடை குறைப்போருக்கு மிகவும் நல்லது.

உயர் ரத்த அழுத்தம் பிரச்சனை உள்ளவர்களுக்கு, இந்த மீன் நிவாரணம் தருகிறது.. இந்த மீனில் சோடியம் மிகக்குறைவாகவும், துத்தநாகம், பொட்டாசியம்,கால்சியம் போன்றவை மிதமாகவும் உள்ளதால், உடலுக்கு பாதுகாப்பை தருகின்றன.. மேலும், மாரடைப்பு, மூளை பாதிப்பு, பக்கவாதம் போன்ற பாதிப்புகளையும் குறைகின்றது.. அத்துடன் பார்கின்சன் நோயிலிருந்தும் மீட்கிறது.. வளரும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, புரதங்கள் நிறைந்த இந்த கெளுத்தியை வாரம் ஒருமுறையாவது சாப்பிடலாம்.
இதய நண்பன்: அதேபோல, ஒமேகா 3 கொழுப்பு அமிலம் + ஒமேகா 6 கொழுப்பு அமிலமும் சேர்ந்து உள்ளதால், இதயத்துக்கு பாதுகாவலனாக இந்த கெளுத்தி திகழ்கிறது. இந்த மீன்களை சாப்பிட்டால், உடல் சுறுசுறுப்படையும்..

அதுமட்டுமல்ல, சீல மீன்களில் பாதரசம் அதிக அளவில் கலந்திருக்கும். குறிப்பாக, சுறா, சுரை போன்ற பெரிய மீன்களின் உடலில் பாதரசம் அதிக அளவில் இருக்கும். இந்த மீன்களை அடிக்கடி சாப்பிடாமல் எப்போதாவது சாப்பிடலாம், ஆனால் குழந்தைகளும், கர்ப்பிணிப்பெண்களும் கண்டிப்பாக சாப்பிடுவதை தவிர்த்துவிடவேண்டும்.
சங்கரா : அதேசமயம், சங்கரா, வெளவால், நெத்திலி, விரால், ஆற்று நண்டு, ஏரி நண்டு, காணாங்கெளுத்தி, சிப்பி காலா, மத்தி, சிறிய இறால், ஊசி கனவா, கரி மீன், கிழங்கா போன்ற சிறிய வகை மீன்களின் உடலில் பாதரசத்தின் அளவு மிக குறைவாகவே இருக்கிறதாம். அதனால், இந்த சிறிய வகை மீன்களை குழந்தைகளும், கர்ப்பிணிப் பெண்களும் ஓரளவு சாப்பிடலாம். இதில் இந்த கெளுத்தி மீன்களும் அடக்கம்.












Click it and Unblock the Notifications