கொட்டைக்கரந்தை.. கல்லீரல் வலுப்பெற, தலைமுடி வளர்ச்சிக்கு உதவும் மூலிகை.. அடடே கொட்டைக் கரந்தை இலைகள்
சென்னை: கல்லீரல் பலம் பெறுவது முதல் சரும ஆரோக்கியம், தலைமுடி வளர்ச்சி வரை உதவக்கூடிய கொட்டைக்கரந்தை மூலிகை பற்றி தெரியுமா? இந்த மூலிகையின் விதைகள், பட்டைகளின் பயன்கள் என்னென்ன? பெண்களுக்கு இந்த மூலிகை எவ்வாறு உதவுகிறது? சுருக்கமாக பார்ப்போம்.
2 அடி உயரத்துக்கு வளரக்கூடிய கொட்டைக்கரந்தை தாவரமானது, ஈரமான மண் மற்றும் நெல் வயல்களில் வளரக்கூடியது.. நெல் அறுவடைக்கு பிறகு, வயல்களில் முளைக்கக்கூடியது இந்த செடிகள்.. இதன் பூக்கள், மொட்டை தலை போலவே இருக்கும் என்பதால், மொட்டை கரந்தை என்றும் இதனை சொல்வார்கள்.

கொட்டைக்கரந்தையின் முழுச்செடியையும் கஷாயம்போல தயாரித்து, சீரகப் பொடியும் சேர்த்து குடித்து வரும்போது, வயிறு கோளாறுகள் முழுமையாக நீங்கும். இந்த செடியின் விதைகளை உலர்த்தி, பவுடர் செய்து, ஒரு 1ஸ்பூன் தேனில் குழைத்துச் சாப்பிட்டாலே, குடல் புழுக்கள் வெளியேறிவிடும்.
தேங்காய் எண்ணெய்: இந்த கொட்டைக்கரந்தை இலையிலிருந்து தலைமுடிக்கு எண்ணெய், தைலம் தயாரிக்கிறார்கள்.. இதனால் தலைமுடி உதிராமல், கருகருவென நீண்டு வளரும். இந்த எண்ணெய்யை வீட்டிலும் தயாரிக்கலாம்.. கொட்டைக்கரந்தை இலையிலிருந்து சாற்றையும், தேங்காய் எண்ணெய்யையும் சமமாக காய்ச்சி வடிகட்டி தலைக்கு தேய்த்து வரலாம்.
உடல் உஷ்ணம் முதல் மூலம் வரை அவதிப்படுபவர்களுக்கு கொட்டைக்கரந்தையின் பட்டை மருந்தாகிறது.. இந்த பட்டையை விழுதாக அரைத்து மோருடன் கலந்து சாப்பிட்டுவந்தால், மூலம் குணமாகும். இந்த செடியின் பட்டை, விதைகள் மருந்தாக பயன்பட்டாலும், இதன் இலைகளே பெரும்பாலும் சிகிச்சைகளுக்கு தரப்படுகிறது.
கொட்டைக்கரந்தை: காரணம், இந்த செடியின் இலைகளில்தான் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் ஏராளமான வேதிச்சத்துக்கள் நிறைந்திருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. குறிப்பாக, மெத்தில் சேவிகால், ஆல்பா அயனோன், டிகாடினின், மெத்தாக்சி சின்னமால்டிகைடு, ஸ்பேரான்திம், ஸ்பேரான்தனோலாய்டு, பீட்டா சைட்டோஸ்டீரால், ஸ்டிக்மா ஸ்டீரால், யுடெஸ்மோனலைடு, கிரிப்டோ மெரிடியால் போன்ற எண்ணற்ற சத்துக்கள்தான் கொட்டைக்கரந்தையில் உள்ளன.
நோய் எதிர்ப்பு சக்திக்கு இதனை மருந்தாக பயன்படுத்த வேண்டுமானால், பூவிடாத நிலையிலுள்ள கொட்டைக்கரந்தை செடியை பிடுங்கி நிழலில் உலர்த்தி தூள் செய்து, தினமும் 1 முதல் 2 கிராம் தேனுடன் கலந்து சாப்பிடலாம். இதனால், நமக்கு தொற்று பாதிப்புகள் எளிதில் அண்டாது.. உடல் உறுப்புகளும் பலம் பெறும். இந்த பொடியை 5 கிராம் அளவு கற்கண்டுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்..
பார்வைத்திறன்: இதே பொடியை ஒரு டேபிள்ஸ்பூன் பால், கற்கண்டுடன் சேர்த்து, 6 மாதங்கள் இரவில் சாப்பிட்டு வந்தால் நரம்புகள் பலப்படும்.. பார்வைத்திறனும் அதிகரிக்கும்.
ஒற்றைத் தலைவலி உள்ளிட்ட தலைவலியை குணப்படுத்தும் தன்மை கொண்டதுடன், அஜீரணம், வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி, குவியல்கள், குடல் புழுக்கள் மற்றும் கல்லீரலின் விரிவாக்கம் ஆகியவற்றிற்கு மருந்தாகவும் இந்த மூலிகை சிகிச்சைகளில் பயன்படுத்தப்படுகிறது.
இளநரை மறையும்: மலச்சிக்கல், இருமல், சளி, ஆஸ்துமா, மூச்சிறைப்பு உள்ளிட்ட சுவாச கோளாறுகளுக்கு இந்த கொட்டை கரந்தை மருந்தாகிறது.. கரிசலாங்கண்ணி கீரையை தூள் செய்து கொண்டு, அதனுடன் கொட்டைக்கரந்தை பொடியையும் சம அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டு வரும்போது, இள நரை மறைய துவங்கும்.












Click it and Unblock the Notifications