சின்ன வெங்காயம் ஆரோக்கியம்.. மூல நோய் முதல் நரம்பு தளர்ச்சி வரை குணமாக்கும்..ஏகப்பட்ட ஹெல்த் பலன்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிடலாமா? சின்ன வெங்காயத்தின் நன்மைகள் என்னென்ன? தினமும் சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் ஏற்படக்கூடிய நன்மைகள் என்னென்ன தெரியுமா?

சின்ன வெங்காயம் சுளீரென காரமாக இருப்பதற்கு காரணமே அதிலிருக்கும் "அலைல் புரோப்பைல் டை சல்பைடு" என்ற எண்ணெய்தான். அதனால்தான் வெங்காயம் உரிக்கும்போது நமக்கு கண்ணீர் வருகிறது.

piles patients onion

சின்ன வெங்காயத்தின் மருத்துவ பலன்கள் ஏராளம்.. உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றும் தன்மை இந்த வெங்காயத்துக்கு உண்டு. அதேபோல, வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும் பால் சாப்பிடலாம்.. 2 சின்ன வெங்காயத்தை இடித்து, அரை டம்ளர் தண்ணீரில் கலந்து குடித்துவந்தாலும் நன்மை கிடைக்கும்.

மூல நோய்கள்: மூல நோயாளிகள் தவிர்க்கவே கூடாதது சின்ன வெங்காயம்.. 50 கிராம் வெங்காயச்சாற்றில் சிறிது தண்ணீர் சேர்த்து 15 நாட்களுக்கு குடித்து வரும்போது ரத்த மூலமும் கட்டுக்குள் வரும். அல்லது வெங்காயத்தை துண்டுகளாக்கி, சிறிது இலவம் பிசின், சிறிது கற்கண்டு தூள் சேர்த்து பாலுடன் சேர்த்து சாப்பிட்டாலும் மூலக்கோளாறுகள் நெருங்காது. வெங்காயத்தில் இன்சுலின் நிறைய உள்ளதால் சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க கூடாது.

நரம்பு தளர்ச்சி பாதிப்பை கொண்டவர்கள், வெறும் சின்ன வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.. ஆண்களுக்கு விறைப்பு தன்மை பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்தால், வெங்காயத்தை அப்படியே பச்சையாக சாப்பிட வேண்டும். காரணம், டெஸ்டோஸ்டிரோனின் அளவை இந்த சின்ன வெங்காயம் அதிகரிக்க செய்வதாக ஆய்வுகளில் சொல்லப்பட்டுள்ளன.

நுரையீரல்: ஒருநாளைக்கு 4 வேளை, அரை ஸ்பூன் சின்ன வெங்காயத்தின் சாறு குடித்து சாப்பிட்டு வந்தால் நுரையீரல் வலுவாகும் என்பார்கள். இதனால் நுரையீரலுக்குள் தங்கியுள்ள அழுக்குகள், கழிவுகள், நச்சுக்களும் வெளியேறிவிடும். அதுமட்டுமல்லாமல், சுவாச கோளாறுகளை சீர்செய்யும் சக்தி இந்த சின்ன வெங்காயத்துக்கு உண்டு.. அதனால்தான், ஜலதோஷம், இருமல், காய்ச்சல், நெஞ்சுசளியால் அவதிப்படும்போது, வெங்காய சாறுடன் சம அளவு தேன் கலந்து சாப்பிட சொல்கிறார்கள்.

நெஞ்சுவலியால் அவதிப்படுபவர்கள், வெங்காயத்தை பச்சையாக மென்று சாப்பிட்டால் இருதயம் உறுதியாகும்.
உடல் எடை குறைப்போருக்கு அருமையான சாய்ஸ் இந்த சின்ன வெங்காயம். ஏனென்றால் இதிலுள்ள சாறு கொழுப்பை கரைக்கக்கூடியது. நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் அதிகரிக்கக்கூடியது.

புற்றுநோய்: புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் சின்ன வெங்காயத்தில் அதிகமாக உள்ளன. வெங்காயத்தில் வைட்டமின் E நிறைந்துள்ளதால், கண் சம்பந்தப்பட்ட கோளாறுகளை முன்கூடியே இரும்புச்சத்து நிறைந்த சின்ன வெங்காயம், அனீமியாவை போக்குகிறது. வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர, மாலைக்கண் நோயும் சரியாகுமாம்.,

100 கிராம் சின்ன வெங்காயத்தில் நீர்ச்சத்து, புரதம், கார்போஹைடிரேட். கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்தும், வைட்டமின் B, C, கொழுப்பு, தாது உப்புகள், நார்ச்சத்துக்கள் உள்ளன.. எனவே, மலச்சிக்கல் தொந்தரவு உள்ளவர்கள் வெங்காயத்தை நறுக்கி விளக்கெண்ணெயில் வதக்கி சாப்பிட வேண்டும். பித்த உடம்பால் அவதிப்படுபவர்கள், 4 சின்ன வெங்காயத்தின் தோலை உரித்து, சிறிது வெல்லத்தை சேர்த்து அரைத்து சாப்பிட வேண்டும்.

மூட்டு வலிகள்: வெங்காயச்சாறுடன், கடுகு எண்ணெய் கலந்து கீல் வாயு காரணமாக மூட்டுக்களில் ஏற்படும் வலி நேரத்தில் தடவிவர வலி குணமாகும்.. வெங்காய சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் வாதநோய் குறையும்..

பல் வலி உடையவர்கள் வெங்காயத்தை ஒரு துண்டு எடுத்து பல்வலி உள்ள இடத்தில் வைத்தால் நிவாரணம் கிடைக்கும். சொத்தைப் பற்கள் இருந்தாலும், அங்கே இந்த சின்ன வெங்காயத்தை வைத்தால் பல்லுக்குள் உள்ள புழுக்கள் வெளியே வந்துவிடும்.. வாயில் பாக்டீரியாக்கள், தொற்றுக்கள் இருந்தாலும் முற்றிலும் அழிந்துவிடும். நான்கைந்து புதினா இலைகளுடன் சிறிது வெங்காயமும் சேர்த்து மென்று விழுங்கிவந்தால் வாய் சுகாதாரம் பேணப்படும்.

சரும ஆரோக்கியம்: வெங்காயத்தில் வைட்டமின் A,C,K உள்ளதால், சரும ஆரோக்கியத்துக்கு வெங்காயம் சிறந்தது. புற ஊதா கதிர்களிலிருந்து நம்மை பாதுகாப்பதால், வெங்காய சாற்றினை முகத்தில் ஃபேஸ்பேக் போல போடலாம். ஆனால், முகப்பரு, காயங்கள் இருந்தால் வெங்காய சாறு தடவக்கூடாது. முகப்பரு இருந்தாலும், இந்த சாறு தடவலாம்.

கட்டிகள் இருந்தாலும், சின்ன வெங்காயத்தை தீயில் சுட்டு, சிறிது மஞ்சள், நெய் கலந்து இளஞ்சூட்டுடன் கட்டிகள் மீது வைத்து கட்டலாம். பாம்பு, தேள் கடித்துவிட்டாலும், இந்த சின்ன வெங்காயம்தான் உடனடி மருந்தாகிறது. புகை பிடிப்பவர்கள் வெங்காய சாற்றை நாள் ஒன்றுக்கு மூன்று வேளை வீதம் சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.

தலைவலி: தலைவலி தீர்க்க இந்த சின்ன வெங்காயத்தை அரைத்து பற்று போடலாம். தலைமுடி உதிராமல் இருக்க தேங்காய் எண்ணெய்யில் இந்த இதனை அரைத்து காய்ச்சி பயன்படுத்துவார்கள். வெறும் சின்ன வெங்காய சாற்றை தலையில் 5 நிமிடம் மசாஜ் செய்து வந்தால், தலைக்கு ரத்தம் ஓட்டம் சிறப்பாக கிடைக்கும்.

ரத்தம் உறைதல், அடைப்பை நீக்கி மாரடைப்பு ஏற்படாமல் தடுக்கக்கூடிய தன்மையும் சின்ன வெங்காயத்துக்கு உண்டு.. மண்ணீரல் கோளாறுகளையும் அகற்றுகிறது.. சளியை கரைத்து வெளியேற்றிவிடும் என்பதால், மழைக்காலங்களில் சமையலில் இதை தாராளமாக பயன்படுத்தலாம்.. கெட்டக்கொழுப்பை கரைக்கும். தடுமன், இளைப்பு, வாதம், பித்தக் கிறுகிறுப்பு, ஈரல் கோளாறு போன்ற உபாதைகளையும் குணமாக்கக்கூடிய சக்தி சின்ன வெங்காயத்துக்கு உண்டு

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+