Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முடவாட்டுக்கால் கிழங்கு.. 4000 நோய் தீர்க்கும் அதிசயம்.. மூட்டுவலிக்கு சூப்பரான சைவ ஆட்டுக்கால் சூப்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மூட்டுவலி, முழங்கால் வலி முதல் புற்றுநோய், ஆண்மை கோளாறுகள் வரை மருந்தாகும் ஒரே கிழங்குதான் முடவாட்டுக் கிழங்கு.. இந்த சைவ ஆட்டுக்கிழங்கின் பயன்கள் என்னென்ன? இதன் முக்கியத்துவம் என்னென்ன? சுருக்கமாக பார்க்கலாம்.

வேர்கள் இல்லாத இந்த கிழங்குகள் பாறைகளில் விளையக்கூடியது.. செம்பு, தங்கம், இரும்பு, கால்சியம், மற்றும் பாறைகளிலுள்ள சிலிக்காவை உறிஞ்சக்கூடியவை. ஆட்டுக்கால் சைவம் அல்லது சைவ ஆட்டுக்கால் அல்லது முடவன் ஆட்டுக்கால், அல்லது ஆட்டுக்கால் கிழங்கு என்ற பெயர்களும் இதற்கு உண்டு.

Mudavaattukkaal kizhangu saiva aattukkaal

இந்த முடவாட்டுக்கிழங்கில், கால்சியம், வைட்டமின், பாஸ்பரஸ், புரதம், தாது உப்புக்கள் நிறைந்திருக்கின்றன. முடவாட்டுக்கால் கிழங்குகள் நம்முடைய உடலில் கிட்டதட்ட 4000 நோய்களை தீர்க்குமாம்.

மண்ணில் புதைத்து வைத்துவிடுவார்கள்

மலை பிரதேசங்களில், மலைப்பகுதியில் பாறைகளின் இடுக்குகளில் சீசன் கிழங்காக இவை விளையக்கூடியவை. சீசன் இல்லாத நேரங்களில் இந்த கிழங்கின் மேல் பகுதி சுருங்கிவிடுவதுடன், அதிலுள்ள நீர்ச்சத்தும் போய்விடும். அதனால்தான் இதை பதப்படுத்துவதற்காக மணல்களில் புதைத்து வைப்பார்களாம். இது வருடக்கணக்கில் கெடாமல் இருக்கும்.

சிறுநீரகம் சுருங்குதல், உள்ளுறுப்பு சுருங்குதல், புற்றுநோய் என பல்வேறு நோய்களுக்கு முடவாட்டுக்கால் கிழங்கு அருமருந்தாகும். இந்த கிழங்கின் மேல் பகுதியை சுத்தம் செய்து, சுடுநீரில் போட்டு குளித்து வந்தால், சரும அலர்ஜி, அரிப்பு, சொறி, சிரங்குகள் எதுவானாலும் விலகிவிடும்.

நரம்பு பிரச்சனைகளை தீர்த்து, ஆண்மை கோளாறுகளையும் நீக்கக்கூடியவை. இந்த கிழங்கை பயன்படுத்தி குழந்தைகளை குளிக்க வைத்தால் வாத நோய் விலகிவிடும் என்பார்கள்.

எலும்பு, மூட்டுவலி பிரச்சனைகள்

எலும்பு சம்பந்தமான பிரச்சினைகள், நரம்பு, தசைகளில் ஏற்படும் கோளாறுகள், மூட்டுவலி போன்றவற்றிற்கு மிகச்சிறந்த நிவாரணியாக இந்த கிழங்கு விளங்குகிறது. ஆர்தரைட்டிஸ் பாதிப்புகளையும் சரிசெய்யக்கூடியது இந்த முடவாட்டுக்கால் கிழங்கு.500 வகைகளுக்கு மேல் முடக்குவாதம் உள்ளதாக சொல்கிறார்கள். ஆனால் எந்தவிதமான முடக்குவாத நோயாக இருந்தாலும், அதன் தீவிரத்தையும் இந்த ஒரே கிழங்கு குறைத்துவிடும்.

குறிப்பாக, 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த கிழங்கின் சூப்பை சாப்பிட வேண்டுமாம்.. வயதானவர்களுக்கும் எலும்புகளின் பலத்தை அதிகரிக்க செய்யும் சக்தி இந்த கிழங்குகளுக்கு உண்டு.. எலும்பு மூட்டுகளுக்கு இடையேயுள்ள மஜ்ஜையை நன்றாக உறுதியாக வளர்க்கவும் பயன்படுகின்றது.. காய்ச்சல், செரிமான கோளாறுகள், கழுத்து வலி, தோள்பட்டை வலி, முதுகு வலி போன்ற அனைத்துக்குமே, இந்த கிழங்கு மருந்தாகிறது.. பவுடர் வடிவில் இந்த கிழங்கு, மருந்து கடைகளில் கிடைக்கிறது.

இந்த கிழங்கை எப்படி சுத்தம் செய்வது? சூப் எப்படி செய்வது ?

முடவாட்டுக்கால் கிழங்கு மேல் புறத்தில் ஆட்டின் மயிர் கால்களை போல நிறைய நார்கள் இருக்கும்.. அதை தோலுடன் சீவி எடுத்தால், உள்ளே இஞ்சி போன்று கிழங்கு இருக்கும். இந்த கிழங்கை சிறு சிறு துண்டாக நறுக்கி கொள்ள வேண்டும். பிறகு இஞ்சி, பூண்டு, சீரகம், மிளகு, சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, தக்காளி இவை அனைத்தையும் மிக்ஸியில் விழுதாக அரைத்து கொள்ள வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய், பட்டை, கிராம்பு பொரித்து, அதில், அரைத்த விழுதையும், வெட்டி வைத்துள்ள கிழங்கையும், மஞ்சள், பெருங்காயம் உப்பு, சேர்த்து வதக்க வேண்டும். பிறகு தேவையான தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும் .. இறுதியில் கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கினால் சூப் ரெடி.

ஆனால், இந்த சூப்பை மாலை 3 மணி முதல் 4 மணிக்குள் தான் குடிக்க வேண்டுமாம். மலைவாழ் மக்கள் மருத்துவமனைக்கே போகாமல் இருப்பதற்கு காரணமே, பக்க விளைவுகளே இல்லாத இந்த கிழங்குகள்தான்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+