எலும்பு அடர்த்தி குறைவு.. தீவிர வாத நோயை போக்கும் ஆட்டுக்கால் கிழங்கு.. சத்தான முடவாட்டுக்கால் சூப்
சென்னை: மூட்டு வலி, முழங்கால் வலிகளுக்கு மருந்தாக பயன்படும் சைவ ஆட்டுக்கால் கிழங்குகள், வாத நோயின் தீவிரத்தையும் குறைக்கின்றன.. இதற்கு என்ன செய்ய வேண்டும் தெரியுமா? கால்சியம் நிறைந்த முடவாட்டுக்கால் கிழங்கின் நன்மைகள் என்னென்ன?
சீசன் காலத்தில் மட்டுமே கிடைப்பதுதான் இந்த முடவாட்டுக்கால் கிழங்குகள்.. மற்ற நேரங்களில் இந்த கிழங்கின் மேல் பகுதி சுருங்கிவிடும். அப்படி சுருங்கும்போது, இதன் நீர்ச்சத்தும் போய்விடும். எனவே, சீசன் முடிந்ததுமே இந்த கிழங்குகளை பதப்படுத்துவதற்காக மண்ணில் புதைத்து வைப்பார்கள்.

இந்த கிழங்குக்கு வேர்கள் கிடையாது.. பாறைகளில் விளையக்கூடியது.. செம்பு, தங்கம், இரும்பு, கால்சியம், மறறும் பாறைகளிலுள்ள சிலிக்காவை உறிஞ்சக்கூடியவை.
கர்ப்பப்பை : கர்ப்பப்பை சுருங்குதல், சிறுநீரகம் சுருங்குதல், உள்ளுறுப்பு சுருங்குதல், புற்றுநோய் உள்ளிட்டவைகளுக்கும் சிறந்த மருந்தாக இந்த முடவாட்டுக்கால் கிழங்கு உதவுகிறது.. இந்த கிழங்கை பயன்படுத்தி குழந்தைகளை குளிக்க வைத்தால் வாத நோய் விலகிவிடும் என்பார்கள். அதேபோல, இந்த கிழங்கின் மேல் பகுதியை சுத்தம் செய்து, வெந்நீரில் போட்டு குளித்து வந்தால், சரும அலர்ஜி, அரிப்பு, சொறி, சிரங்கு விலகிவிடுமாம்.
முடக்குவாதத்துக்கு இந்த கிழங்கு அருமருந்தாகிறது.. 500 வகைகளுக்கு மேல் முடக்குவாதம் உள்ளதாக கூறுகிறார்கள்.. அனைத்துவிதமான முடக்குவாத நோய்களின் தீவிரத்தையும் இந்த கிழங்கு குறைக்கிறது.
உள்ளுறுப்புகள்: மூட்டு, தசைகளில் பாதிப்புகள் ஏற்பட்டால், உள்ளுறுப்புகளுக்கும் செல்லும் ரத்த ஓட்டமும் தடை செய்யப்பட்டுவிடும்.. எனவே, மூட்டுவலி, முழங்கால்வலி உள்ளிட்ட தொந்தரவுகளுக்கு இந்த கிழங்கு இருந்தாலே தீர்வை காணலாம். ஆனால், முடக்குவாதம் தீவிரமாகிவிட்டதால், அதை கட்டுக்குள் வைக்க முடியுமே தவிர, குணப்படுத்த முடியாது. அந்தவகையில் இந்த ஆட்டுக்கால் கிழங்கை உபயோகித்து வருவதால், கால்சியம் சத்துக்கள் கிடைப்பதுடன், மூட்டுகளும் உறுதியாக இருக்கும்.
ஆட்டுக்கால் சைவம் அல்லது சைவ ஆட்டுக்கால் அல்லது முடவன் ஆட்டுக்கால், அல்லது ஆட்டுக்கால் கிழங்கு என்றெல்லாம் இதற்கு பல பெயர்கள் உண்டு.. கால்சியம், வைட்டமின், பாஸ்பரஸ், புரதம், தாது உப்புக்கள் பல சத்துக்கள் நிறைந்த முடவாட்டுக்கால், முடக்கு வாதத்துக்கும், மூட்டு வலிகளுக்கும், அசதி, தசைபிடிப்புகளுக்கும் மருந்தாகிறது.
எலும்பு அடர்த்தி: கொல்லிமலை, சேர்வராயன் மலை, சதுரகிரி மலை, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் விளையக்கூடிய இந்த கிழங்குகள், எலும்பு அடர்த்திக்குறைவு (Osteopenia) பாதிப்புகளை சரிசெய்யக்கூடியவை. நரம்பு பிரச்சனைகளை தீர்த்து, ஆண்மை கோளாறுகளையும் நீக்கக்கூடியவை. தீவிர காய்ச்சல், செரிமானத்துக்கும் உதவக்கூடியவை.
குழந்தைகளுக்கு வாதம் தாக்கினால், இந்த முடவாட்டுக்கால் கொதிக்க வைத்த தண்ணீரில் குளிக்க வைப்பார்களாம். இதனால், குழந்தைகளின் வாத நோய் விலகிவிடும்.. பெரியவர்களுக்கு கழுத்து வலி, தோள்பட்டை வலி, முதுகு வலி இருந்தாலும், இந்த தண்ணீரில் குளிக்கலாம்..
படவுர் கிடைக்கிறது: பக்கவிளைவுகள் எதுவும் இல்லாத இந்த கிழங்கை, பெரும்பாலும் சூப் செய்து குடிப்பார்கள்.. சிலர் சட்னி, துவையலும் செய்வார்கள். முடவாட்டுக்கால் கிழங்கு கிடைக்காதவர்கள், முடவாட்டுக்கால் கிழங்கு பொடியை பயன்படுத்தலாம். ஆனால், அது முறையாக தயாரிக்கப்பட்டதா? என்பதையும் கவனித்து வாங்க வேண்டும்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications