முரல் மீனின் அவசியம்..நீரிழிவு நோயாளிக்கு ஏற்றதா? மூட்டு வலி நீக்கும் முரல் மீனை எப்படி சாப்பிடலாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: முரல் மீன்கள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை.. ரத்த சோகை, உயர் ரத்த அழுத்தம் மற்றும் மனச்சோர்வு உள்ளவர்களுக்கு நன்மை தரக்கூடியது.. மூட்டுவலியை போக்கக்கூடிய சக்தி இந்த முரல் மீன்களுக்கு உள்ளது.. அந்தவகையில் முரல் மீனில் உள்ள சத்துக்கள் என்னென்ன? முரல் மீனிலுள்ள தீமைகள் என்னென்ன? முரல் மீன் சாப்பிடும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? இவைகளை பற்றி சுருக்கமாக பார்க்கலாம்.

மெலிதான நீலம் மற்றும் பச்சை நிறம் கொண்ட முரல் மீன்களின் எலும்புகளும் பச்சை நிறத்தில் இருக்கும். முதுகு, வால் பகுதியும் ஒரே மாதிரியாக இருக்கும்.. பார்ப்பற்கு மீன், பாம்பு, கடல் குதிரை போல இருக்கும். குறுகிய நீண்ட தாடைகளுடன் கூடிய கூரான பற்களுடன் மூக்கு குறுகி இருக்கும். பற்கள் நீண்டு, மூக்கு கத்தி போல இருக்கும்.

Mural Fish Knee Pain

வித்தியாச தோற்றம்

குறுகிய, நீண்ட தாடையையும், கூரான பற்களையும் கொண்டுள்ளது. இதனை பலரும் "Long Tom" என்பார்கள்.. முரல் மீன்கள் மெல்லிய உடலுடன் கூடியவை. அவை 3 முதல் 95 சென்டிமீட்டர் வரை நீளத்திற்கு வளரக்கூடியவை.

இந்த முரல் மீனில் வைட்டமின் D, புரோட்டீன், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, ஜிங்க், மக்னீசியம், சோடியம், பொட்டாசியம் சத்துக்கள் இருந்தாலும், ஒமேகா-3 அமிலம் அதிகமாக உள்ளன. உடல் வெயிட்டை குறைக்கும் முயற்சிக்கு இந்த மீன் உதவுகிறது. உயர் ரத்த அழுத்தம், மனதில் பதட்டம், சோர்வு, ரத்த சோகை போன்றவற்றுக்கும் முரல் மீன் உதவுகிறது. கீல்வாதம் பிரச்சனைகளும் நெருங்காது.

நீரிழிவு நோயாளிகள்

இதய செயல்பாட்டையும் முரல் மீன்கள் சீராக்குகிறது.. நீரிழிவு நோயாளிகளுக்கும் முரல் மீன்கள் பெஸ்ட் சாய்ஸ்.. இதனால், ரத்தத்திலிருக்கும் சர்க்கரையின் அளவும் குறைகிறது. கால்சியம் நிறைந்த மீன் என்பதால், எலும்புகள் உறுதிக்கும், பற்களின் பலத்துக்கும் உறுதிதரக்கூடியது.. அதேபோல, மூட்டுவலி, முழங்கால் வலியால் அவதிப்படுபவர்கள், முரல் மீன்களை சாப்பிடுவதால் பலன் பெறலாம்.

முரல் மீனில் பாதரசம் போன்ற நச்சுத்தன்மைகள் இருக்க வாய்ப்புள்ளது. எனவே, குழந்தைகள், கர்ப்பிணிகள் இதனை தவிர்க்கலாம்.. சிலருக்கு முரல் மீனில் உள்ள புரதத்தால் அலர்ஜி ஏற்படலாம். பல நாட்கள் பதப்படுத்திய முரல் மீன்களை சமைத்து சாப்பிடும்போது, உணவு விஷம் ஏற்படலாம், முரல் மீனில் கால்சியம் இருந்தாலும், அளவுக்கு அதிகமான கால்சியம், கிட்னியில் கற்களைஉண்டுபண்ணிவிடும்.
தவிர்க்கலாம்

எனவே, தரமான மீன்களை வாங்கி சமைக்க வேண்டும்.. அப்படியே ஃபிரஷ் மீன்களாக இருந்தாலும், குறிப்பிடட அளவு மட்டுமே சாப்பிட வேண்டும். சருமத்தில் அலர்ஜி பிரச்சனை உள்ளவர்கள் கவனமுடன் இதை சாப்பிட வேண்டும். அல்லது தவிர்க்கலாம்.

வழக்கம்போல் இதனை குழம்பு செய்வார்கள் என்றாலும், சிலர் இந்த மீனில் தேங்காய்ப்பால் விட்டு செய்வார்கள்.. யாழ்ப்பாணத்தில் தேங்காய்ப்பால் கலக்காமலேயே சுவையுடன் சமைப்பார்களாம். எனவே எப்போதாவது கிடைத்தாலும்கூட, இந்த மீனை சமையலில் தவறவிட்டுவிடக்கூடாது என்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+