"எனது உயிரை விட.. பயணிகள் உயிரே முக்கியம்!" விமானத்தை காப்பாற்றிய இந்திய பைலட் மோடியிடம் உருக்கம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஃப்ளைதுபாய் விமானத்தில் துணை விமானி கத்தியால் தாக்கியபோதும், பயணிகளின் உயிரை காப்பாற்ற காக்பிட் கதவை திறந்து பெரும் விபத்தை தவிர்க்க உதவிய இந்திய விமானி கேப்டன் சுமித் மச்சாருடன் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது சம்பவத்தை நினைவுகூர்ந்த சுமித் மச்சார் உணர்ச்சிவசப்பட்டார். மேலும், காயமடைந்த போதிலும் பயணிகளை காப்பாற்றவே காக்பிட் கதவை திறந்ததாக பிரதமரிடம் குறிப்பிட்டார்.

நடுவானில் பறந்து கொண்டு இருந்த ஃப்ளைதுபாய் விமானத்தில் துணை விமானி விபத்தை ஏற்படுத்த முயன்றார். அப்போது படுகாயமடைந்திருந்த இந்திய விமானி, பயணிகள் உதவியோடு சதி திட்டத்தை முறியடித்தனர். இதில் படுகாயமடைந்த இந்திய விமானி ஸ்மித் இப்போது துபாயில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருடன் பிரதமர் மோடி இன்று வீடியோ காலில் பேசினார்.

PM Modi Speaks to Flydubai Pilot flydubai India

பயணிகள்

அப்போது பைலட் ஸ்மித், "எனக்கு உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டிருந்தன. ஆனால், நான் எப்படியாவது எழுந்து காக்பிட் கதவை திறந்தாக வேண்டும் என்பது எனக்கு தெரியும். எப்படியாவது கதவை திற என்று எனக்கு நானே சொல்லி கொண்டேன். என்னை நானே கட்டாயப்படுத்தி கொண்டேன் என்று கூட சொல்லலாம். காயம் மோசமாக இருந்தாலும் பயணிகளை பாதுகாக்க வேண்டும். அவர்களுக்கு எதுவும் ஆகக்கூடாது என்பதே எனது நோக்கமாக இருந்தது" என்றார்.

பிரதமர் மோடி

சுமித் மச்சாரிடம் பேசிய பிரதமர் மோடி, உயிருக்கு போராடி கொண்டு இருந்தபோதும் அவர் பயணிகளின் உயிரை காப்பாற்றுவதையே முதன்மையாக கருதியதாக பாராட்டினார். பிரதமர் மோடி மேலும், "உங்கள் உடலில் மோசமான காயம் இருந்தது. நீங்களே உயிருக்கு போராடிக்கொண்டிருந்தீர்கள். அந்த நேரத்தில் உங்கள் உயிரை பற்றி நீங்கள் கவலைப்படவில்லை. விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளின் உயிரை பற்றியே சிந்தித்தீர்கள்" என்று மோடி தெரிவித்தார். மேலும், சுமித் மச்சாரின் துணிச்சல் 140 கோடி இந்தியர்களின் மரியாதையை உயர்த்தியுள்ளதாகவும், அவரை நினத்து பெருமைப்படுவதாகவும் பிரதமர் கூறினார்.

நன்றி

சுமித் மச்சாருக்கு நாட்டின் முழு சப்போர்ட்டும் இருப்பதாக பிரதமர் மோடி உறுதியளித்தார். அவர் மேலும், "இந்தியா உங்களை வரவேற்க ஆவலுடன் காத்திருக்கிறது. நேற்று உங்கள் உடல்நலத்துக்காக நாடு முழுவதும் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன" என்று மோடி கூறினார். மேலும், சுமித் மச்சாருக்கு சிகிச்சை அளித்த சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரக அரசுகளுக்கும் பிரதமர் நன்றி தெரிவித்தார். மேலும், "உங்களுக்கு எப்போது என்ன உதவி தேவைப்பட்டாலும், ஒரே ஒரு கால் செய்யுங்கள். எப்போதும் நான் இருக்கிறேன்" என்றும் உறுதியளித்தார்.

சுமித் மச்சாரின் செயலை பாராட்டிய மோடி, உலகுக்கு அகிம்சை என்றால் என்ன என்பதை நீங்கள் காட்டியுள்ளீர்கள் என்றும் கூறினார். சமூக வலைத்தளங்களில் இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு கருத்துகள் வெளியானதை குறிப்பிட்ட பிரதமர், "வேறு எதாவது நடந்திருந்தால் இந்தியாவை பற்றி கேள்வி எழுந்திருக்கும். ஆனால், நீங்கள் மிக பெரிய செயலை செய்து அனைவரையும் காப்பாற்றியுள்ளீர்கள்" என்று சுமித் மச்சாரிடம் தெரிவித்தார்.

என்ன நடந்தது

புதன்கிழமை துபாயில் இருந்து டெல் அவிவ் நோக்கி சென்ற ஃப்ளைதுபாய் விமானத்தில் துணை விமானி சுமித் மச்சாரை கத்தியால் தாக்கப்பட்டார். பைலட்டை தாக்கியது வேறு யாரும் இல்லை. ஓமன் நாட்டை சேர்ந்த துணை விமானி தான். அந்த துணை விமானி விமானத்தை விபத்துக்குள்ளாக்க முயன்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அந்த ஓமன் விமானி இப்போது கைது செய்யப்பட்டு விசாரணையில் இருக்கிறார். அதேநேரம் அவரது பெயர் உள்ளிட்ட விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

சுமார் 34,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போயிங் 737 விமானம், 30 விநாடிகளுக்குள் சுமார் 14,000 அடி உயரம் சரிந்தது. அசாதாரண சத்தங்களை கேட்ட பயணிகள் மற்றும் விமானக் குழுவினர் காக்பிட்டுக்குள் விரைந்து சென்று துணை விமானியை கட்டுப்படுத்தினர். படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் இருந்த பைலட் ஸ்மித் தனது கடைசி சக்தியை பயன்படுத்தி காக்பிட் கதவை திறந்துள்ளார்.

அவரது இந்த செயலே விமானத்தை காப்பாற்றியுள்ளது. பிறகு விமானத்தில் இருந்த இரு ஓய்வு விமானிகள் சவுதி அரேபியாவின் தபுக் நகரில் விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கினர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சுமித் மச்சார், விரைவில் குணமடைந்து நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+