ஊளி மீனின் ஆரோக்கியம்.. வாரம் 2 முறை ஊளி மீனை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..ஆணின் வரப்பிரசாதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: புரோட்டீன் அதிகம் உள்ள மீன்களில் ஒன்றுதான் ஊளி மீன்கள்.. ஷீலா மன் அல்லது மாவுலா மீன் என்ற பெயர்களில் அழைக்கப்படும் ஊளி மீனில் உள்ள சத்துக்கள் என்னென்ன? ஊளி மீனை வாரம் 2 முறை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்தான் இந்த ஊளி மீன்கள்.. இதனை அடிக்கடி சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் குறைவதுடன், ரத்தக் கட்டிகள் உருவாவதையும் தடுக்கலாம்..

Ooli Meen Ooli Fish barracuda fish

வளரும் குழந்தைகளுக்கு அவசியம்

வளரும் குழந்தைகளுக்கு ஊளி மீனை தருவதால், கண்கள் பாதிப்புகள் அவர்களை நெருங்க விடாமல் செய்யலாம்.. அல்லது ஏற்கனவே கண்கள் சம்பந்தமான பிரச்சனைகள் இருந்தாலும் அவையும் குணமாகும். மூளையும் சிறப்பாக செயல்படும்..

அதுமட்டுமல்ல, ஊளி மீன்களில் கால்சியம் நிறைந்திருப்பதால், எலும்புகள், பற்களுக்கு பலம் தருகின்றன.. இதிலுள்ள பாஸ்பரஸ் எலும்பு வலிமைக்கு தேவையான ஒன்று.. இதிலுள்ள மெக்னீசியம் எலும்பு அடர்த்திக்கு அவசியமான ஒன்று. எனவே, ஊளி மீனில் குழந்தைகளுக்கு புட்டு போல செய்து தரலாம்.

உடல் எடை குறைக்கலாம்

உடல் எடை குறைக்க விரும்புவர்கள், வெறுமனே உப்பு, மிளகு சேர்த்து கிரில் செய்து அல்லது நெருப்பில் வாட்டி சாப்பிட்டால் நல்லது.. ருசியும் அபாரமாக இருக்கும். உடற்பயிற்சி செய்பவர்கள் தவறவிடக்கூடாத மீன் இதுவாகும்.

ஊளி மீன்களை வாரம் 2 முறை சாப்பிடுவதால், ரத்த கட்டிகள் ஏற்படாமல் தடுககலாம்.. உடல் வீக்கத்தை குறைக்கலாம்.. நீரிழிவு நோயாளிகள் சாப்பிடக்கூடிய மீன் இதுவாகும். ஏனென்றால், உடல் களைப்பையும் நீக்கி சுறுசுறுப்பை தருகிறது.

நோய் எதிர்ப்பு மண்டலம்

மீன்களிலேயே மிகவும் குறைவான கொழுப்புச்சத்து இந்த மீனில்தான் உள்ளது.. குறைவான கலோரிகள், நிறைந்த புரோட்டீன் கொண்டவை இந்த ஊளி மீன்கள். 100 கிராம் ஊளி மீனில் சுமார் 20-25 கிராம் புரதம் உள்ளது. இது உடல் திசுக்களின் வளர்ச்சி மற்றும் பராமரிப்புக்கு அவசியமானதாகும். ஊளி மீனின் ஊட்டச்சத்துக்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகின்றன:

ஒமேகா 3 அதிமாக உள்ளதால், உடலிலுள்ள கெட்ட கொழுப்புகளை குறைத்து, நல்ல கொழுப்பை அதிகரிக்கும் திறன் அதிகமாக கிடைக்கிறது. இதனால், இதயநோய், பக்கவாதம் போன்றவற்றை வரவிடாமல் தடுக்கின்றன.. உடலில் உள்ள புண்களை ஆற்றக்கூடிய தன்மை இந்த மீனுக்கு உண்டு.

நரம்பு செயல்பாடுகள்

இந்த மீனிலிருக்கும் வைட்டமின் B 12 சத்துக்கள் நரம்பு செயல்பாட்டை ஊக்குவிக்கிறது.. மனநல கோளாறுகளின் அபாயத்தையும், ஊளி மீன்கள் குறைப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திறன் ஊளி மீன்களுக்கு உண்டு, என்பதால் ஆண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய மீன் ஊளியாகும். மாதவிடாய் காலத்தில் பெண்கள் ஊளி மீனை சாப்பிடுவதால், வலி, சோர்விலிருந்து நிவாரணம் பெறலாம்.

மாதவிடாய் காலத்தில் பெண்கள் ஊளி மீனை சாப்பிடுவதால், வலி, சோர்விலிருந்து நிவாரணம் பெறலாம். அதேபோல, கர்ப்பிணிப் பெண்களுக்கும் ஊளி மீன்கள் நல்லது.. இந்த மீனிலுள்ள B12: சத்துக்கள், குழந்தையின் நரம்பு மண்டல வளர்ச்சிக்கு தேவைப்படுகிறது.

கர்ப்பிணிகள் - ரத்தசோகை - தைராய்டு

அதேபோல, ஊளி மீனிலுள்ள அயோடின் சத்துக்கள், தாய் மற்றும் குழந்தையின் தைராய்டு சுரப்பிக்கு தேவைப்படும்.. ஊளி மீனிலுள்ள இரும்புச்சத்து, ரத்த சோகையை தடுக்க உதவுகிறது. எனவே, கர்ப்பிணிகள் மருத்துவர்களின் ஆலோசனையை பெற்று சாப்பிடுவது நல்லது.

சருமம், தலைமுடி ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது.. எப்படி தெரியுமா? ஊளி மீனின் ஒமேகா-3, தோல் ஈரப்பதத்தை பராமரிக்க செய்கிறது.. தோலின் நெகிழ்வுத்தன்மையை இதிலுள்ள கொலாஜின் மேம்படுத்துகிறது.. வைட்டமின் E சத்துக்கள், தோல் செல்களை பாதுகாக்க செய்கிறது.. செலினியம் சத்துக்கள், UV கதிர்வீச்சின் ஆபத்திலிருந்து காக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+