"நுங்கு நுங்கு".. ஆச்சரியத்தை பாருங்க.. இது தெரியாம போச்சே.. கர்ப்பிணி பெண்களே, ப்ளீஸ் விட்றாதீங்க
சென்னை: நுங்குவின் பொதுவான பயன்பாடுகள் குறித்து பொதுவான பலன்கள் அனைவருக்கும் தெரியும் என்றாலும், பெண்களுக்கு நுங்கு அருமருந்தாக அமைந்துள்ளது என்கிறார்கள்.. அந்த அளவுக்கு அதில் மருத்துவ பலன்கள் நிறைந்துள்ளதாம்.
நிறைய பேர் இதைப் பெரிதாக கண்டுகொள்வதில்லை... ஆனால், கட்டாயம் சாப்பிட வேண்டிய பழம்.. எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம். காலநேரம் கிடையாது. இதில் உள்ள மருத்துவ நன்மைகளை பாருங்கள்.

கோடை காலத்தில் ஏற்படும் அம்மை நோய்களை தடுப்பதில் நுங்கு சிறப்பாக செயல்படுகிறது.. அம்மை நோய் பாதித்தவர்களும் நுங்கு சாப்பிடலாம் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டிவிடும்...
உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்துவதில் நுங்கு வல்லமை கொண்டது... உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது. அதிலும், பனை நுங்கிற்கு கொழுப்பை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்கும் ஆற்றல் உண்டு. பனை நுங்கில் உள்ள நீரானது வயிற்றை நிரப்பி பசியை தூண்டுவதோடு, மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு இரண்டிற்குமே மருந்தாக பயன்படுகிறது.
எடையிழப்பு: நுங்கில் வைட்டமின் பி, இரும்பு, துத்தநாகம், பொட்டாசியம், பாஸ்பரஸ், கால்சியம் போன்ற ஊட்டச்சத்துகள் இருந்தாலும், இந்த பழத்தில் குறைந்த கலோரி மற்றும் அதிக நீர்ச்சத்து இருக்கிறது.. அதனால்தான் நுங்கை சாப்பிட்டவுடன், வயிற்றை நீண்டநேரம் நிரப்புகிறது.. எடை இழப்பு முயற்சியில் இருப்பவர்கள் இதனை அதிகம் சேர்த்து கொள்வதற்கு இதுதான் அடிப்படை காரணம் என்கிறார்கள்..
வயிற்று கோளாறுகளை சரி செய்வதில் நுங்கு நல்ல பலனை தரும். மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு ஆகிய இரண்டு பிரச்சனைகளுக்கும் நுங்கு சாப்பிடலாம். வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரை குடித்த பிறகு, இரண்டு அல்லது மூன்று நுங்குகளை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் காணாமல் போகும்.. குடல் புண்ணை குணமாக்கிவிடும். உடல் சூட்டினால் கடுமையாக அவதிப்பட்டு நீர்ச்சத்தை இழந்து வேதனைப்படுபவர்களுக்கு, நுங்கு அருமருந்து. இதை சாப்பிடும் போது தாகம் தணியும்.
நீர்ச்சத்து: ரத்த சோகை இருப்பவர்கள் நுங்கு சாப்பிட்டால் நல்ல பலனை காண்பார்கள். வயிற்றில் குழந்தைகளை சுமக்கும் கர்ப்பிணிகள் நுங்கு சாப்பிட்டால் அவர்களுடைய செரிமானம் துரிதமாகும். கர்ப்பிணிகள் நுங்கு சாப்பிட்டால், செரிமானம் அதிகரிப்பதுடன், மலச்சிக்கல் மற்றும் அசிடிட்டி போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். கோடைகால வேர்க்குருவை நீங்க செய்யும். நுங்கை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நீர்ச்சத்து அதிகமாகும்.
வெயிலினால் உண்டாகும் சோர்வு நீங்கி புத்துணர்வு கிடைக்கும். வெயில் காலங்களில் ஏற்படும் கொப்புளங்களையும், தோல் நோய்களயும் நுங்கு தடுக்கும். பெரியோர்கள், இளம் நுங்கினை மேல்தோல் நீக்காமல் சாப்பிடுவது மிகவும் நல்லது. மேலும் இந்த நுங்கின் நீரை தடவினால் வேர்க்குரு மறையும். கல்லீரல் பிரச்னை, அஜீரணக் கோளாறு ஆகிய பிரச்னைகளுக்கு நுங்கு நல்லது. நுங்கில் "அந்த்யூசைன்" என்னும் ரசாயனம் இருப்பதால், பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் கட்டிகள் வருவதைத் தடுக்கும்.
கருப்பட்டி, வெல்லம்: வெயில் காலத்தில் ஏற்படும் அம்மை நோய்கள் வருவதைத் தடுத்து, உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும். பதநீரில் இருந்து தயாரிக்கப்படும் கருப்பட்டியுடன் சுக்கு சேர்த்துச் சாப்பிட்டால், நன்றாகப் பசி எடுக்கும். சுக்கு, மிளகு, கருப்பட்டி சேர்த்து, குழந்தை பெற்ற பெண்கள் சாப்பிட்டால், தாய்ப் பால் நன்கு சுரக்கும். குழந்தைக்கும் நல்ல ஊட்டச்சத்து கிடைக்கும்.
மேலும், இந்த பழத்தில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் சரியான வளர்சிதை மாற்றத்தை பராமரிக்கிறது.. அத்துடன், வெள்ளைப்படுதல் காரணமாக சிரமங்களை சந்திக்கும் பெண்களுக்கும், சரும பாதுகாப்புக்கும் நுங்கு சிறந்த அருமருந்தாக உள்ளதால், நுங்குவை தவிர்க்க வேண்டாம் என்கிறார்கள் நிபுணர்கள். மார்பக புற்றுநோய்க்கு அதிக அளவில் பெண்கள் ஆளாகி வருவதாக ஆய்வுகள் வெளியாகி பகீரை கிளப்பி வருகின்றன..
மருத்துவ குணம்: இதற்கும் நுங்குவின் மருத்துவ குணம் உதவுகிறதாம். அதாவது, மார்பக புற்றுநோய் வராமல் தடுக்க உதவும் ஆன் தோசயனின் என்னும் வேதிப்பொருள் நுங்கில் இருக்கிறதாம்.. இந்த ஆன் தோசயனின் என்ற வேதிபொருளானது புற்றுநோய் செல்கள் மற்றும் அது உருவாக்கும் கட்டிகளின் வளர்ச்சியை தடுக்க உதவுவதாகவும், அதனால், பெண்கள் அதிக அளவு நுங்கு சாப்பிட்டால் போதிய பலனை அடைய முடியும் என்கிறார்கள்.
கர்ப்பிணிகள்: முக்கியமாக, கர்ப்பிணி பெண்களுக்கு இது அருமருந்தாகும்.. கர்ப்பிணி பெண்களின் செரிமான செயல்முறைக்கு நேரடியாக உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி கர்ப்பகாலத்தில் மிக முக்கியமானது, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவது மட்டுமல்லாமல், அமைப்பை சுத்தமாகவும் செயல்பட உதவுகிறது. இதில் பொட்டாசியம் அதிகமாக உள்ளது.. கர்ப்ப காலத்தில் மலச்சிக்கல் வருவது இயல்பு. இது சங்கடமான உணர்வை உண்டு செய்யும். அதே நேரத்தில் இது வீக்கத்தை கட்டுப்படுத்துவதில் சிறந்த தீர்வாக இருக்கும்.
கர்ப்பகாலத்தில் சீரான இரத்த ஓட்டத்துக்கு உதவுகிறது. பிரசவித்த பெண்கள் தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்களுக்கும் ஏற்றதாக அறியப்படுகிறது. பாலில் இருந்து குழந்தை பெறும் ஊட்டச்சத்து மதிப்பை அதிகரிக்கிறது. நுங்கு பக்கவிளைவுகளை உண்டு செய்யாது. ஆனால் எப்போதும் புதிய சுத்தமானவற்றை வாங்கி சாப்பிட வேண்டும். மிதமான அளவு நல்லது. இருந்தாலும், ஆனால் மருத்துவரின் பரிந்துரையின் பெயரில் சரியான அளவை திட்டமிடுங்கள். காலை உணவுக்கு பிறகு எடுத்துகொள்ளுங்கள். நண்பகல் வேளைக்கு பிறகு தவிர்க்க வேண்டும் என்கிறார்கள் நிபுணர்கள்.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications