பனங்கற்கண்டு.. தினமும் இப்படி பனங்கற்கண்டை சாப்பிட்டாலே போதும்.. அந்த கோளாறும் ஓடிரும்.. இனிப்பு பனை
சென்னை: தித்திப்பாக இருப்பதாலேயே ஒரு இயற்கையான பொருள் கெடுதி என்று அர்த்தமில்லை.. அந்தவகையில், பனங்கற்கண்டு, பல பலன்களை அள்ளி தரக்கூடியது.
எப்படி வாழை மரமும், தென்னை மரமும், முருங்கை மரமும் நமக்கு அத்தனை பலன்களை தருகிறதோ, அதுபோலவே பனை மரமும் நம் ஆயுளை காக்கக்கூடிய மரமாகும்.
பதநீர்: பனங்கற்கண்டு - மருத்துவ குணங்கள் நிறைந்த வரப்பிரசாதமாகும்.. மிஸ்ரி என்பார்கள்.. ஆங்கிலத்தில் ராக்கேண்டி என்பார்கள்.. சுத்திகரிக்கப்படாத சர்க்கரைதான் இந்த பனங்கற்கண்டு. அதாவது, சுத்தமான பதநீரை, பெரிய கொப்பைரையில் மிதமான தீயில் சூடேற்றி உற்பத்தி செய்யப்படும்போது கிடைக்கப்பெறுதே இந்த பனங்கற்கண்டு..

அதாவது, சுத்தப்படுத்தாத, கெட்டியான வெல்லத்தை கருப்பட்டி என்று சொல்லப்படுவதுபோல், சுத்தப்படுத்தப்பட்ட படிகங்களாக உருவாகும் சர்க்கரையை பனங்கற்கண்டு என்கிறார்கள். இரும்புச்சத்து, பொட்டாசியம், ஜிங்க், வைட்டமின் பி1,பி2, பி3,
அத்துடன் ஏராளமான வைட்டமின்கள், தாதுக்கள், அமினோ அமிலங்கள் உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன..
இரும்புச்சத்து: கற்கண்டு என்று பெயரில் இருந்தாலும், குறைந்த அளவே இனிப்பு சுவை உடையது.. சர்க்கரை நோயிலிருந்து தப்பிக்க உதவும் மிகப்பெரிய துடுப்புதான் இந்த பனங்கற்கண்டு.. வாதம், பித்தத்தை நீக்குகிறது.. இதிலிருக்கும் இரும்புச்சத்து, உடல் பித்தத்தை நீக்குகிறது.
நுரையீரலுக்கு காவலனாக திகழ்கிறது. அதனால்தான், தொண்டைவலி, தொண்டைப்புண், இருமல் போன்ற பிரச்சனைகளுக்கு தயாரிக்கப்படும் மருந்துகளில் இந்த பனங்கற்கண்டு சேர்க்கப்படுகிறது.
தொண்டை கரகரப்பு: இதனால், ஜலதோஷம் முதல் காசநோய் வரை தீரும். சருமத்துக்கு உற்ற நண்பன் இந்த பனங்கற்கண்டு. பனங்கற்கண்டை வெறுமனே வாயில் போட்டு கொண்டு, அதன் உமிழ்நீரை விழுங்கினாலே, தொண்டைக் கரகரப்பு, சளியும் வெளியேறிவிடும்.. அந்த அளவுக்கு பவர்புல் மருந்தாகும். பாலில் பனங்கற்கண்டை சேர்த்தும் காய்ச்சி குடிக்கலாம்..
உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடிய இந்த பனங்கற்கண்டுகள், வெயில் காலத்தில் அருமருந்தாக அனைவருக்கும் உதவக்கூடியது.. நீர் சுருக்கு, வயிற்றுப்போக்குகளுக்கும் தீர்வாகிறது. சொறி, சிரங்கு போனன்ற சரும நோய்களை அலறி ஓடச்செய்துவிடும்.. பற்களுக்கும், எலும்புகளுக்கும் வலு சேர்க்கிறது.. ஈறுகளில் ரத்தக்கசிவை தடுக்கிறது. உடலில் வலு இல்லையென்றால் அவர்களுக்கு, இந்த பனங்கற்கண்டு உதவுகிறது..

பெண்கள்: கருவுற்ற பெண்களும், பாலூட்டும் தாய்மார்களும் இந்த பனங்கற்கண்டை சாப்பிடும்போது, மலச்சிக்கல் பிரச்சனை நீங்குகிறது. அதுமட்டுமல்ல, கருவுற்ற பெண்களுக்கு ஏற்படும் சில கோளாறுகளையும் இந்த பனங்கற்கண்டு தீர்க்கிறது.
எப்படி பயன்படுத்தலாம்: பனங்கற்கண்டை பசும்பாலுடன், ஏலக்காய் சேர்த்து குடித்து வந்தால், வயிற்றுப்புண்கள் ஆறும்.. வாய்துர்நாற்றமும் தீரும்.. அதிலும், ஆண்களுக்கு இந்த பனங்கற்கண்டை இயற்கையின் வயாக்ரா என்றே சொல்லலாம்.. காரணம், இந்த பாலை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் விந்தணுக்கள் உற்பத்தி அதிகமாகும்...
பனங்கற்கண்டை சீரகத்துடன் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்றால் வாய் துர்நாற்றம் நீங்கும்.. பனங்கற்கண்டை, பாதாம் பருப்பு, சீரகம் சேர்த்து இரவில் படுப்பதற்கு முன்பு சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்கம். பனங்கற்கண்டை, 1 ஸ்பூன் வெங்காய சாறுடன் கலந்து வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் சிறுநீரகக் கற்கள் கரையும்
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications