பழம்பாசி மூலிகை.. மூலநோய் முதல் மஞ்சள் காமாலை வரை விரட்டும் பழம் பாசி இலை.. பயனுள்ள பழம்பாசி வேர்கள்
சென்னை: ஊளைச்சதை முதல் பெண்களுக்கு வெள்ளைப்படுதல் குறைபாடுகள் களைவது வரை குணப்படுத்தக்கூடிய மூலிகைதான் பழம்பாசி.. நிலத்துத்தி என்று சொல்லக்கூடிய பழம்பாசி இலை, பழம்பாசி வேர்களின் மருத்துவ குணங்கள் என்னென்ன? இதனை எப்படி பயன்படுத்துவது?
வயல் நிலங்களில் காணப்படும் சின்னஞ்சிறிய செடியே, பழம்பாசி.. சிறிய இலைகளுடன் அடர் மஞ்சள் மலர்களின் மேல்புறம் முட்கள் போன்ற முடிகளுடன் காணப்படும். பழம்பாசி செடியின் வேர், பழம்பாசி இலை என அனைத்துமே மருத்துவ குணங்கள் கொண்டவை.

பழம்பாசி வேர்கள்: பழம்பாசி செடியின் வேர்கள் பெண்களுக்கு சிறந்த மருந்தாகும்.. உடல் சூட்டை தணிக்கக்கூடியது. இந்த வேர்களை லேகியமாக தயாரித்து, பிரசவ நேரத்தில் தருவார்களாம்.
பிரசவம் முடிந்தபிறகும்கூட இந்த வேர்களிலிருந்து கஷாயம் தயாரித்து பெண்களுக்கு தருவார்கள். மருத்துவ சாலைகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு, மெடிக்கல் ஷாப்களில் இந்த கஷாயம் விற்கப்படுகிறது. சுகப்பிரசவம் நடப்பதற்கு இந்த லேகியம் தரப்படுகிறது.
மஞ்சள் காமாலை: பழம்பாசி வேர்களை, மஞ்சள் காமாலைக்கும் மருந்தாக தருவார்கள்.. நரம்புத்தளர்ச்சி, வலிப்பு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பிரச்சனைகளை பழம்பாசி வேர்கள் குணமாக்குகின்றன. ரத்தசோகை தொந்தரவு இருந்தாலும், இந்த வேர்களே மருந்தாகின்றன.
பழம்பாசி வேர்களிலிருந்து எண்ணெய் தயாரிக்கப்படுகிறது.. விளக்கெண்ணை அல்லது நல்லெண்ணையில் இந்த பழம்பேசியின் வேர்களை சேர்த்து கொதிக்க வைப்பார்கள்.. இந்த எண்ணையை, ஆறாத புண்களில் தடவிவரும்போது, எப்பேர்ப்பட்ட ஆறாத புண்களும் விரைந்து ஆறிவிடும்.
பழம்பாசி இலைகள்: அதேபோல, பழம்பாசியின் இலைகளும் குளிர்ச்சி நிறைந்தவை.. உடல் உஷ்ணத்தில் ஏற்படும் தொந்தரவுகளை, இந்த இலைகள் விரட்டியடிக்கின்றன. பழம்பாசி இலைகளை தூளாக்கி, சீரகத்தூள், வெந்தயத்தூள் சேர்த்து கலந்து, தினமும் 2 ஸ்பூன் மோரில் குடித்து வரும்போது, உடல் உஷ்ணம் மொத்தமும் இறங்கிவிடுமாம். சிறுநீர் எரிச்சல், சிறுநீர் கடுப்பு உள்ளிட்ட பிரச்சனைக்கும் இந்த பழம்பாசி பவுடரே போதும்.
வெள்ளைப்போக்கு அதிகமாக இருந்தால், பழம்பாசி இலைகளை சுத்தம் செய்து, சீரகம் சேர்த்து அரைத்து மோரில் கலந்து தினமும் காலையில் குடிக்கலாம். அதீத உடல் உஷ்ணத்தினால், கருத்தரிக்க முடியாமல் போனாலும், பெண்கள் இதனை குடித்து வரும்போது, நல்ல பலன்கிடைக்குமாம்.
மூலச்சூடு: மூல தொந்தரவு உள்ளவர்கள், பழம்பாசி இலைகளை நன்றாக கழுவி, பாலில் சேர்த்து கொதிக்கவிட்டு வடிகட்டி, சிறிது எலுமிச்சம் சாறு, தேன் கலந்து தினமும் 2 வேளை குடிக்கலாம். உடல் சூடு அதிகமாக இருந்தால், பழம்பாசி இலைகளை விழுதாக அரைத்து, தலையில் தேய்த்து குளிக்கலாம். இதனால் உடல் குளிர்ச்சி பெறுவதுடன், சருமத்திலுள்ள சொறி, சிரங்கு, வேர்க்குரு, கட்டிகளும் நீங்கும்.
பழம்பாசியை காயவைத்து இடித்து பவுடராக்கி தினமும் மோரில் கலந்து 2 வேளை குடித்து வரும்போது, ஊளைச்சதைகள் கரைவதுடன், நரம்புத்தளர்ச்சி தொந்தரவு இருந்தாலும் விலகிவிடும்.
பழம்பாசி செடியின் காய்களும், பழங்களும் பல் வலிக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. பற்களில் பூச்சி விழுந்தவர்கள், பல் வலியால் அவதிப்படுபவர்கள், வலி உள்ள பல்லில் இந்த பழத்தை நன்றாக வைத்து அழுத்தவேண்டும். இந்த பழத்தையும், காய்களையும் நன்றாக கடிப்பதின் மூலம் மிகவும் கசப்பு வாய்ந்த அந்தச் சாறு பல்லினுள் இறங்கி பூச்சியை கொன்றுவிடும். அத்துடன் பல் வலியையும் குணப்படுத்தும் என்கிறார்கள்.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications