செவ்வாழையின் செம்மைகள்.. சத்துக்களின் சுரங்கம்.. கண்களுக்கு பயனுள்ள செவ்வாழை செவ்வாழைத்தோல் பெஸ்ட்
சென்னை: செவ்வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தாலே ஆயுள் கூடும் என்பார்கள்.. உள்ளுறுப்புகளுக்கு பல்வேறு சத்துக்களை தரக்கூடிய செவ்வாழைகள், கண்களுக்கும், சருமத்துக்கும் பேருதவி புரிகிறது. அந்தவகையில் செவ்வாழை தரும் நன்மைகள் ஒருசிலவற்றை பார்ப்போம்.
செவ்வாழையில் வைட்டமின் C, வைட்டமின் B6, வைட்டமின் B1, B2, இரும்பு சத்து, நார்சத்து, பொட்டாசியம், பீட்டா கரோட்டின், புரதம், கால்சியம், மக்னீசியம், கோலின், ஃபோலேட், கரோட்டினாய்டுகள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் போன்றவை இந்த செவ்வாழையில் உள்ளது.

சத்துக்கள்: இதில் வைட்டமின் A சத்துக்கள் அதிகமாகவே உள்ளன.. எனவே,தான் மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செவ்வாழை சிறந்த தீர்வை அளிக்கக்கூடியதாக இருக்கும் என கூறப்படுகிறது.
தினமும் 100 கிராம் செவ்வாழையை சாப்பிட்டு வருபவர்களுக்கு கண் சம்பந்தப்பட்ட கோளாறுகள் ஏற்படுவதில்லை. இந்த பழத்தில் நியூட்டின் (Nutein), ஸியான்தினின் (zeaxanthin), பீட்டா கரோட்டின், வைட்டமின் A உள்ளதால், மாலைக்கண் நோய், கண் எரிச்சல், கண் வலி , கண்களில் உள் அடுக்குகளில் உள்ள தசைகள் பிரச்சனை உள்ளிட்ட பார்வை குறைபாடுகளை நெருங்க விடுவதில்லை.
கண் பார்வை: கண் பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும். கண் பார்வை குறைய ஆரம்பித்த உடன் தினசரி செவ்வாழை பழத்தை சாப்பிட பார்வை தெளிவடையும். அதிலும், மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இரவு உணவுக்கு பிறகு தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வர மாலைக்கண் நோய் குணமாகும் என்பார்கள்.
செவ்வாழையை போலவே, செவ்வாழையின் தோலிலும் அதிக சத்துக்கள் உள்ளன.. வைட்டமின்கள் A, B, C, மற்றும் பைட்டோ நியூட்ரியன்ட்கள் நிறைந்த பல்வேறு ஊட்டச்சத்துக்கள் செவ்வாழையின் தோலில் உள்ளதால், கீழே வீசிவிடாமல் கண்களுக்கும் பயன்படுத்தலாம்..
செவ்வாழை தோல்: செவ்வாழையிலுள்ள லியூட்டின் மற்றும் சியாக்ஸான்தின் போன்ற சத்துக்கள் கண்கள் சேதமடைவதை தடுக்கிறது.. இதிலுள்ள வைட்டமின் A, ரொடாப்ஸின் போன்ற புரதம், மங்கலான பார்வையையும் கூர்மையாக்குகிறது. கண்களின் மீது இந்த தோல் அல்லது செவ்வாழைப்பழத்தை சிறிது வெட்டி வைக்கலாம். இதனால் கண்களும் குளிர்ச்சி பெறும், கண்ணில் நீர் வடிவதும் நின்றுவிடும்.
அடிக்கடி செவ்வாழைப் பழம் சாப்பிடுவதால் சருமத்தில் ஏற்படும் வடுக்கள் துளைகள் சரியாகின்றன. மேலும் இந்தப் பழத்தில் 75 சதவிகிதம் நீர் மற்றும் ஆன்டி ஆக்ட்சிடெண்ட் உள்ளதால், சருமத்திற்கு தேவையான நீர்ச்சத்தை தருகிறது,
பொதுவாக வாழைப்பழத் தோல்கள் அனைத்துமே சருமத்துக்கு நன்மை தரக்கூடியவை. சருமத்தில் உள்ள சுருக்கங்களையும் குறைக்கும் தன்மை வாழைப்பழ தோலுக்கு உண்டு.. சோரியாசிஸ் அதாவது தடிப்புத் தோல் பிரச்சனை உள்ள இடத்தில் வாழைப்பழத் தோலை தடவினால் நிவாரணம் கிடைக்கும். அத்துடன், ஈரப்பதத்தை அளித்து நமைச்சலையும் தடிப்புத் தன்மையையும் நீக்கும்.
சரும பொலிவு: அப்படியிருக்கும்போது, வாழைப்பழங்களிலேயே அதிக சத்தானதாக கருதப்படும் செவ்வாப்பழத் தோலை, மிக்ஸியில் அரைத்து முகத்திற்கு தடவி வரலாம். இதனால் முகம் பொலிவு பெறுவதுடன், குளிர்ச்சியாகவும் இருக்கும்.. முகப்பரு வடுக்கள் மீது இந்த தோலை தேய்த்தால் வடுக்கள் நீங்கும், சருமம் மிருதுவாகும்... பருக்கள், மரு இருந்தாலும், பழுத்த வாழைப்பழத் தோலை அதன் மேல் வைத்து, ஒரு இரவு முழுவதும் அப்படியே இருக்க விட வேண்டும்.
அல்லது இந்த தோலை சிறிது நேரம் ப்ரிட்ஜில் வைத்து, முகத்தில் வைத்து லேசாக மசாஜ் செய்யலாம்.. சருமத்திலுள்ள கரும்புள்ளிகளும் இதனால் நீங்கும்..
தினமும் ஒரு பழம்: தினசரி 1 செவ்வாழை சாப்பிடும் போது பல் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். உடலுக்கு தேவையான கால்சியம் சத்து செவ்வாழையில் நிறைந்துள்ளதால், எலும்புகளை வலுவடைய செய்கிறது. 21 நாட்களுக்கு தொடர்ந்து செவ்வாழை சாப்பிட்டு வரும் போது ஆடிய பல் கூட கட்டியாகும் என கூறப்படுகிறது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications