செவ்வாழை பழம்.. பளபள சருமம், கருகரு முடி வேணுமா?.. குழந்தை பேறு அள்ளி தரும் அற்புதமான பழம் "செவ்வாழை"
சென்னை: பழங்கள் என்றாலே, நம்முடைய உடலுக்கு மருத்துவ நன்மைகளை தரக்கூடியது.. அதில் சற்று கூடுதல் பலனை தரக்கூடியது செவ்வாழைப்பழம் ஆகும். கறுப்பான தலைமுடி முதல் சுருக்கமில்லாத சருமம்வரை அனைத்துக்கும் தீர்வு தருகிறது இந்த செவ்வாழை.
செவ்வாழை மிக முக்கிய உயிர்சத்துக்களையும், வைட்டமின் C, இரும்பு சத்து, நார்சத்து, பொட்டாசியம், பீட்டா கரோட்டின் என பல்வேறு சத்துக்களையும் கொண்டிருக்கிறது.

நன்மைகள்: இதன் பலன்கள் என்னவென்று பார்த்தால், இதய நோய்கள் நம்மை அண்டவிடாமல், பத்து அடி தள்ளி நிறுத்துகிறது இந்த செவ்வாழை.. பொட்டாசியம் அதிகமாக உள்ள பழம் என்பதால், ரத்த அழுத்தத்தை பராமரித்து, இதயத்தை காக்கிறது. அதேபோல, நுரையீரல் சிறுநீரகங்கள், கல்லீரல், இதயம், குடல், என முக்கிய உடலுறுப்புகளுக்கு நன்மைகளை செய்கிறது. மாலை கண் நோயை தடுத்துநிறுத்துகிறது.. எலும்புகள் வலுவடைய செய்கிறது.
இதிலுள்ள பொட்டாசியம் சிறுநீரகங்களில் கற்கள் வராமல் தடுக்கிறது.. இதிலுள்ள இரும்புச்சத்து, அனிமியாவை விரட்டி, ரத்த விருத்தியை அதிகரிக்க செய்கிறது.. தினமும் ஒரு செவ்வாழை சாப்பிட்டாலே, ரத்தசோகை ஓடிரும்.
கண்களுக்கு இந்த பழம் மிகவும் நல்லது.. தொடர்ந்து செவ்வாழை சாப்பிட்டு வருபவர்களுக்கு மாலைக்கண் உள்ளிட்ட பிரச்சனைகள் அண்டுவதில்லை.. ஒருவேளை, மாலைக்கண் பாதிப்பு இருந்தாலும்கூட, செவ்வாழை பழத்தை சாப்பிட்டு வந்தால், பார்வை கூர்மைபெறும்.
கண் பிரச்சனைகள்: எந்த நேரமும் கம்ப்யூட்டரில் வேலை பார்ப்பவர்கள், இந்த செவ்வாழையை அடிக்கடி சாப்பிட வேண்டும். இதனால், கண்ணில் ஏற்படும் பாதிப்புகளை ஆரம்பத்திலேயே சரிசெய்யப்பட்டுவிடும்.. அல்லது செவ்வாழைப்பழத்தை நறுக்கி, கண்களின் மேல் சிறிது நேரம் வைத்தாலே போதும், கண் எரிச்சலும், நீர் வழிதலும் நின்றுவிடும். தினமும் 100 கிராம் அளவுக்கு செவ்வாழை சாப்பிடுபவர்களுக்கு, வயதான காலத்திலும் கண் பிரச்சனை ஏற்படாதாம்.
செவ்வாழையை பொறுத்தவரை ஆண்களின் வரப்பிரசாதம் என்று சொல்லலாம்.. சில ஆண்களுக்கு நரம்பு தளர்ச்சி ஏற்பட்டு, ஆண்மை குறைபாடும் ஏற்படலாம். இதுபோல பிரச்சனை உள்ளவர்கள், ஒருநாளைக்கு 2 செவ்வாழையை, 48 நாள் சாப்பிட்டுவந்தாலே, நரம்புகள் பலம்பெற்ற, ஆண்மைக்கோளாறுகள் சீராகும்.. அதனால்தான், இந்த செவ்வாழைக்கு "குழந்தை பேறு தரும் பழம்" என்று சொல்வார்கள்.
அதுமட்டுமல்ல, பெண்களுக்கு கருப்பையை பலப்படுத்தும் தன்மை இந்த செவ்வாழைக்கு உண்டு, இதிலுள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள், வைட்டமின் B6 கருவுறுதலின் விகிதத்தை அதிகரிக்கிறது.. முக்கியமாக மிக முக்கியமாக கருமுட்டைகள் சிதையாமல் பாதுகாக்கிறது. குழந்தைபேறு இல்லாத தம்பதிகள்,தினமும் ஒரு செவ்வாழையை சாப்பிட்டு அரை ஸ்பூன் சாப்பிட்டு வந்தால், 40 நாட்களுக்குள் கருத்தரிக்க வாய்ப்புண்டு என்கிறார்கள்.
பல்வலிகள்: பல்வலியால் அவதிப்படுபவர்கள், 21 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வந்தால் தீர்வு கிடைக்கும். தினமும் செவ்வாழை சாப்பிட்டு வருபவர்களுக்கு, குடல் ஆரோக்கியம் காக்கப்படுகிறது.. பொதுவாக வாழைப்பழங்களை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடாது.. ஆனால், இந்த செவ்வாழை, நீரிழிவு நோயை கட்டுப்படுத்தக்கூடியது என்பதால், டாக்டர்களின் ஆலோசனையை பெற்று "அளவோடு" உண்ணலாம்..
செரிமானம்: இந்த பழம் சருமத்துக்கு மிகவும் நல்லது.. இளம்வயதிலேயே சுருக்கங்கள் வருவதையும் தள்ளிப்போடுகிறது.. அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்கள், பொட்டாசியம் சத்தை சேர்த்துக்கொள்ள வேண்டும். சமீபத்தில், அமெரிக்காவில் ஒரு ஆய்வு நடத்தியிருக்கிறார்கள். அதில், அதிக ரத்த அழுத்தம் உள்ள 22 நபர்களுக்கு, இந்த செவ்வாழையை தந்து ஆய்வு செய்துள்ளனர். அவர்களுக்கு ரத்த அழுத்தம் 7 mm Hg அளவிற்கு குறைந்திருந்ததாம்.
ஆனால், உணவு சாப்பிட்டதுமே இந்த செவ்வாழையை சாப்பிடக்கூடாதாம்.. டிபன் சாப்பிடுவதற்கு முன்பு, அல்லது பகல் 11 மணி, மாலை நேரங்களில் சாப்பிட்டால் செரிமானம் எளிதாகும்.












Click it and Unblock the Notifications