Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொழு கொழு எண்ணெய் "நல்லெண்ணெய்".. சர்க்கரை நோயாளிகள் சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா.. ஒரே அதிசயம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அனைத்து எண்ணெய்களையும்விட, மிகச்சிறந்த எண்ணெய் நல்லெண்ணெய்தானாம்.. இதற்கு என்ன காரணங்கள் சொல்லப்படுகின்றன தெரியுமா?

எள்ளுடன் தேவையான சரக்குகளை பொடித்து,செக்குகளில் ஆட்டி எடுக்கும்போது ஒருவித நெய் உண்டாகும்.. எள் நெய் என்பதே காலப்போக்கில் மருவி எண்ணெய் ஆனது. (எள் + நெய் = எண்ணெய்) ஆகிவிட்டது.

வாதம்: நல்லெண்ணெயில் சீசேமோல் என்ற பொருள் நிறைய உள்ளது.. இந்த பொருள் இதயத்திற்கு மிகவும் நல்லது. உடல் இயக்கத்துக்கு இந்த எண்ணெய் உதவுகிறது.. வாதம், பித்தம், கபம் போன்றவற்றை சரிசமமாக வைக்க நல்லெண்ணெய் உதவுகிறது.. ஒருவேளை வாதம் அதிகமாகிவிட்டால் ஏராளமான உடல்நலக்கோளாறுகள் வரும்.. இந்த வாதத்தை குறைப்பதில் முக்கிய பங்கு வகிப்பது நல்லெண்ணெய்தான்.

health benefits of sesame oil and Nallennai Oil Good for preventing cancer

எந்த பொருளுடன் சேர்த்து சமைக்கிறோமோ, அந்த பொருளின் ருசியை அதிகப்படுத்தும் பண்பு, நல்லெண்ணெய்க்கு உள்ளது.. நல்லெண்ணெயில் உள்ள அதிகப்படியான மக்னீசியம், இன்சுலின் சுரப்பை தடுக்கக்கூடியது.. அத்துடன், உடலில் நீரிழிவு வருவதைத் தடுக்கக்கூடியது..

கெட்ட கொழுப்பு: நல்லெண்ணெயில் உள்ள லெசித்தின் என்ற பொருளும், லினோலிக் என்ற அமிலமும் இருப்பதால், ரத்தத்தில் உள்ள அதிகப்படியான கெட்ட கொழுப்பை கரைத்து, நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க செய்கிறது.

நல்லெண்ணெயில் ஈஸ்ட்ரோஜென் உள்ளதால், எலும்பு தேய்மானத்தை தடுக்கிறது.. மாரடைப்பு வந்தவர்கள் டாக்டர்களின் ஆலோசனையை கேட்டு, அதன்பிறகு இந்த எண்ணெய்யை பயன்படுத்துவது நல்லது.. ஆனால், அனைவருமே, நல்லெண்ணெயை உணவில் சேர்க்கும்போது, இஞ்சி, பூண்டு, மிளகு ஆகியவற்றை எல்லாம் நிறைய சேர்த்துக்கொண்டால் கூடுதல் நல்லது..

இந்த நல்லெண்ணெயில் முட்டையில் இருக்கும் புரோட்டீனுக்கு சமமான அளவில் புரோட்டீன் இருக்கிறதாம்.. இதனை உணவில் சேர்த்து சாப்பிடும் போது, குடலியக்கம் சீராகும்.. செரிமான பிரச்சனைகள் நீங்கும்.. தினமும் சிறிது நல்லெண்ணெய்யை வெறும் வயிற்றில் குடித்துவந்தால், ஆஸ்டியோபோரோசிஸ் என்ற எலும்புப்புரையின் தாக்கம் குறையும்.. எலும்புகளும் ஆரோக்கியம் பெறும்..

குளிர்ச்சி: உடல் சூட்டினால் அவஸ்தைப்படுபவர்கள், நல்லெண்ணெயை சிறிது குடித்தால், உடல் வெப்பம் தணியும்.. மூட்டு வலியில் அவதிப்படுபவர்கள், நல்லெண்ணெய்யை உணவில் சேர்த்து பலன் பெறலாம்.. நல்லெண்ணெயில் இருக்கும் மக்னீசியம், ரத்த அழுத்தத்தைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும். அதிலும் நீரிழிவு நோயாளிகளுக்கு, உயர் இரத்த அழுத்தம் இருந்தால் அவர்கள் நல்லெண்ணெயை சாப்பிடுவது நல்ல பலனைத் தரும்.

யார் யார் தவிர்க்கலாம்: இந்த எண்ணெய், கல்லீரலில் கொழுப்பு சேர்க்கும் என்பதால், ஃபேட்டி லிவர் பிரச்னை இருப்பவர்கள் நல்லெண்ணெய்யைத் தவிர்ப்பதே நல்லது.. அதேபோல மலச்சிக்கல் இருப்பவர்களும் நல்லெண்ணெய்யைக் குறைவாக சாப்பிட வேண்டும். அளவுக்கு மீறி நல்லெண்ணெய்யை சமையலில் சேர்த்துக்கொண்டால் அஜீரணம் வரும்..

இப்படி சமையலில் நல்லெண்ணெய்யை பயன்படுத்தி அதன்மூலம் பல நன்மைகளை பெறலாம்.. மற்றொருபுறம், புற அழகுக்கும், சிகிச்சைக்கும் இந்த நல்லெண்ணெய் தேவைப்படுகிறது. தினமும் காலையில் எழுந்து நல்லெண்ணெயால் வாயை கொப்பளித்தால் (Oil Pulling), பற்களில் தங்கியிருக்கும் சொத்தைகள் நீங்குவதோடு, பற்கள் பளிச்சென்றிருக்கும். பல் வலி, ஈறு பிரச்சனைகள் போன்றவை நீங்கி வாய் ஆரோக்கியமும் மேம்படும்.

தினம்தோறும் 5 நிமிடங்கள் செக்கு நல்லெண்ணெய்யால் வாய்க்கொப்பளித்தால், முகத்துவாரங்களில் இருக்கிற உமிழ்நீர் சுரப்பி உள்ளிட்ட நொதிகள் சரியாக செயல்பட ஆரம்பிக்கும்.

இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாகும்... முகத்தில் பொலிவு ஏற்படும். ஒட்டிய கன்னங்களிலும் சதைப்பிடிப்பு ஏற்படும். சரும அழகுக்கு நல்லெண்ணெய் மிகச்சிறந்த தீர்வாக உள்ளது.. சருமத்தில் கொலாஜெனின் வளர்ச்சியை இந்த எண்ணெய் ஊக்குவிக்கும்.. மூட்டுவலி உள்ளவர்கள், நல்லெண்ணையில் மசாஜ் செய்து வந்தால், வீக்கமும், வலியும் குறையும்.

பொடுகு தொல்லை: நல்லெண்ணையை தலைக்கு தேய்த்துக் குளித்து வந்தால், கண் வலி, கண்ணில் நீர் வடிதல் போன்றவை நீங்கும்... முடிக்கு ஆரோக்கியம் தரும்.. பொடுகு தொல்லையும் காணாமல் போகும்... தூக்கமின்மையால் அவஸ்தைப்படுபவர்கள், அல்லது கம்ப்யூட்டரிலேயே எந்நேரமும் பணிபுரிபவர்கள், வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் தேய்த்து குளித்து வந்தால் நலம் பயக்கும்..

தினமும் 1 டீஸ்பூன் நல்லெண்ணெயுடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, பஞ்சில் தொட்டு, பருக்கள் உள்ள இடத்தில் தடவி ஊற வைத்து கழுவினால், பருக்கள் குறையும்.. குதிகால் வெடிப்பு இருப்பவர்கள், நல்லெண்ணெயை ரோஸ் வாட்டருடன் கலந்து தினமும் இரவில் படுக்கும் முன்பு குதிகாலில் தடவினால் போதும்.. வெடிப்புகள் மெல்ல நீங்கும்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+