ஊற வைத்த வேர்க்கடலை.. எண்ணற்ற நலன்களை தரும் ஏழைகளின் பாதாம்.. ஆரோக்கியம் காக்கும் சத்தான நிலக்கடலை
சென்னை: வேர்க்கடலை ஒரு கைப்பிடி சாப்பிடும்போது கிடைக்கக்கூடிய நன்மைகள் என்னென்ன தெரியுமா? அதேசமயம் ஊறவைத்த வேர்க்கடலையை சாப்பிடும்போது நம்முடைய உடலுக்குள் ஏற்படக்கூடிய மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? சுருக்கமாக பார்ப்போம்.
கலோரி, புரதம், இரும்பு, ஃபோலேட், நியாசின், துத்தநாகம் போன்றவை பாதாமை விட அதிகமாக உள்ளதால்தான், வேர்க்கடலையை ஏழைகளின் பாதாம் என்பார்கள். ஆனால் பாதாமைவிட வைட்டமின் B சத்துக்கள் வேர்க்கடலையில் மிக அதிகம். இறைச்சிக்கு நிகராக சத்துக்கள் வேர்கடலையில் இருக்கிறதாம்.

வேர்க்கடலைகள்: வேர்க்கடலைகள் எப்போதுமே கெட்ட கொழுப்புகளை நீக்கி, நல்ல கொழுப்புகளை அதிகரிக்க செய்யக்கூடியவை. உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு வேர்க்கடலை பெஸ்ட் சாய்ஸ்.. நீண்ட நேரம் பசியைக் கட்டுப்படுத்தி, உடலில் உள்ள கெட்ட கொழுப்பை எரிக்க உதவ செய்வதில் வேர்க்கடலைக்கு முதன்மையான இடமிருக்கிறது.
ஆண்களுக்கு ஆண்மையை அதிகரிக்கவும், உயிரணுக்களை அதிகரிக்கவும் இந்த வேர்க்கடலை உபயோகமாகின்றன.. வைட்டமின் B 1, நியாசின், போலேட், ஓலிக் அமிலங்கள் வேர்க்கடலையில் அதிகமாக உள்ளதால், நரம்பு மண்டலம் சீராக செயல்பட உதவுகிறது.. பித்தப்பை கற்களையும் கரைக்க செய்கிறது. ரத்த அழுத்தம் கட்டுக்குள் வருவதுடன், இதயமும் ஆரோக்கியமாக இயங்குகிறது. கால்சியம் குறைபாட்டை நீக்கி, பெண்களின் நரம்பு மண்டலத்தையும் உறுதிப்படுத்துகிறது.
மிகச்சிறந்த புரதத்தின் ஆதாரமாக விளங்கும் வேர்க்கடலையை, ஊறவைத்து சாப்பிடும்போது இதன் பலன்கள் இரட்டிப்பாகின்றன.. இப்படி வேர்க்கடலையை ஊற வைத்து சாப்பிடுவது, வாயு மற்றும் அமிலத்தன்மை குறைகிறது.
இதய நோய்கள்: நார்ச்சத்து அதிகம் உள்ளதால், செரிமானத்திற்கு உதவுகிறது. இதய நோயிலிருந்து நம்மை காக்கிறது.. இதிலுள்ள மோனோசாச்சுரேட்டட் மற்றும் 3 பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை எரிக்க உதவுகிறது.
ஆன்ட்டி ஆக்சிடென்ட் பண்புகள் நிறைந்த வேர்க்கடலை, உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கிறது. இதனால் மூட்டு வலி போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.. வேர்க்கடலை நீண்ட நேரம் பசியை கட்டுப்படுத்தக்கூடியது.. இதை சாப்பிட்டால் வயிறு நிறைந்த உணர்வு ஏற்படும்.. எனவே, உடல் எடை குறைக்க முயற்சிப்பவர்கள், வேர்க்கடலை சாப்பிடும்போது, மற்ற உணவுகளை நாம் உட்கொள்வதை குறைக்கிறது.
வேர்க்கடலை: ஊறவைத்த வேர்க்கடலை செரிமான சக்தியை மேம்படுத்தும்... குடல் ஆரோக்கியத்தை காக்கிறது.. இதனால், அசிடிட்டி, வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகளில் இருந்தும் நிவாரணம் தருகிறது.. ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் இந்த ஊறவைத்த வேர்க்கடலை உதவுகிறது. இதனால் நாள் முழுவதும், உடலும் மூளையும் சுறுசுறுப்பாக இயங்கும்.
ஊறவைத்த வேர்க்கடலையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராட உதவுகின்றன... அதுமட்டுமல்ல, வேர்க்கடலையில் இரும்பு, ஃபோலேட், கால்சியம் மற்றும் துத்தநாகம் உள்ளால், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை குறைக்க செய்வதாக ஆய்வுகள் கூறுகின்றன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications