Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குளிர்காலங்களில் கீரையை சாப்பிடலாமா? வியப்பூட்டும் கீரைகள்.. அப்ப இதை மட்டும் வாங்கிடுங்க.. அபாரபலன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கீரைகளை பொதுவாக, குளிர்காலங்களில் சாப்பிடக்கூடாது என்பார்கள்.. அப்படியெல்லாம் எதுவுமே இல்லையாம்.. உண்மையை சொல்லப்போனால், குளிர்காலத்தில்தான் சிலவகை கீரைகளை கட்டாயம் சாப்பிட வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள். இதற்கு என்ன காரணம்? குளிர்காலத்தில் சாப்பிட வேண்டிய கீரைகள் என்னென்ன? சுருக்கமாக பார்க்கலாம்.

கீரைகளில் இயல்பாகவே ஏராளமான நார்சத்துகள் உள்ளன. எனவே, ஜீரணத்துக்கு மிகவும் நல்லது. கீரைகளில் இரும்புச்சத்து உள்ளதால், ரத்த விருத்திக்கும், கண் பார்வைக்கும் நல்லது..

spinach green leaves

கீரைகளில் கால்சியம் சத்துக்கள் உள்ளதால், எலும்பு, பற்கள் ஆரோக்கியத்தை வலுப்படுத்த உதவுகின்றன. சர்க்கரை நோயாளிகளின் ரத்த குளுக்கோஸ் கட்டுப்பாட்டை மேம்படுத்தவும், புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கவும், இந்த கீரைகள் அவசியமாகின்றன.

சுவாச கோளாறுகள்: எனினும் மழைக்காலங்களில், குளிர்காலஙகளில் கீரைகளை சாப்பிட்டால் சளி பிடித்துக்கொள்ளும் என்றுகூறி, சிலர் கீரைகளை முற்றிலும் தவிர்த்துவிடுகிறார்கள்.. ஆனால் குளிர்காலத்தில் கீரை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக வைத்திருப்பது மிகவும் முக்கியம்.

கோளாறுகள் அந்தவகையில், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பைட்டோநியூட்ரியன்கள், ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்திருப்பதால், குளிர்காலத்தில் ஏற்படும் உடல்நலம் கோளாறுகளுக்கு எதிர்ப்பு சக்தியாக கீரைகள் செயல்படுகின்றன. குறிப்பாக வைட்டமின் C மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால், சளி மற்றும் தொற்று நோய்களில் இருந்து உடலை பாதுகாக்கிறது. வைரஸ் காய்ச்சல் போன்ற பருவகால நோய்களை எதிர்த்துப் போராடுகிறது.

நன்மைகள்: வெந்தயக்கீரை என்று சொல்லக்கூடிய மேத்தி, கசப்பாக இருந்தாலும், குறைந்த கலோரிகளைக் கொண்டுள்ளது. அஸ்கார்பிக் அமிலம் மற்றும் B கரோட்டின் உள்ளதால், சர்க்கரை நோய் அபாகம், எடை இழப்பை மேம்படுத்துகிறது. அதேபோல, முள்ளங்கி இலைகளிலும், அதிகமான நார்ச்சத்துக்கள் ஊள்ளன. 100 கிராம் முள்ளங்கி இலையில் 16 கலோரிகள் மட்டுமே உள்ளதால், வளர்சிதை மாற்றத்திற்கு இந்த கீரைகள் ஏற்றது.

கடுகு இலைகளை பாசிப்பருப்பு, பூண்டு சேர்த்து கடைந்து சாப்பிடலாம்.. இவை வைட்டமின் C மற்றும் நார்ச்சத்து நிறைந்து, கலோரியும் குறைந்த இந்த கடுகு இலைகளை தாராளமாக உடல் எடை குறைக்க சேர்த்து கொள்ளலாம்.

பசலைக்கீரை: இதில் இரும்புச்சத்து நிறைந்த பசலைக்கீரையும் முக்கியமானதாகும்.. பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் ரத்தசோகையை இந்த கீரை அண்டவிடாது. குளிர்காலத்தில்தான் தலைமுடியும், சருமம் வறண்டு போகும். இதுபோன்ற தொந்தரவுக்கு பசலைக்கீரை உதவுகிறது. கால்சியம் மற்றும் வைட்டமின் K உள்ளதால், எலும்புகள், பற்கள் பலம்பெறுகின்றன.

கீரைகளில் நைட்ரேட்டுகள் உள்ளதால் இதய ஆரோக்கியத்திற்கும் நல்லது, ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது.. குளிர்காலத்தில் கீரை சாப்பிட்டால், தேவையான ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும். செரிமானம் ஆக நீண்ட நேரம் ஆகிவிடும் என்பதால்தான், கீரைகளை இரவு நேரத்தில் சாப்பிடுவதை தவிர்க்க சொல்கிறார்கள். மற்றபடி குளிர்காலத்தில் கீரைகளை சாப்பிடுவது மிகவும் நல்லது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+