மிரட்டும் மஞ்சள் காய்ச்சல்.. இந்த நாடுகளுக்கு செல்வோருக்கு தடுப்பூசி கட்டாயம்! சுகாதாரத்துறை அதிரடி!

Subscribe to Oneindia Tamil

சென்னை : ஆப்ரிக்கா மற்றும் தென் அமெரிக்காவில் மஞ்சள் காய்ச்சல் பரவல் அதிகமாக இருப்பதால், அங்கிருந்து இந்தியா வருபவர்களும், இங்கிருந்து அந்த நாடுகளுக்குச் செல்வோரும் தடுப்பூசி போடுவது கட்டாயமாக்கப்படுவதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசியைப் போடப்பட்ட 10 நாட்களுக்குப் பிறகே இந்த நாடுகளுக்குச் செல்ல மக்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

மஞ்சள் காய்ச்சல் : மஞ்சள் காய்ச்சல் என்பது ஒரு வகை வைரஸ் தொற்றினால் ஏற்படும் காய்ச்சல். டெங்குவைப் பரப்பும் ஏடிஸ் வகைக் கொசுக்களில் ஏடிஸ் ஜேசிப்டி என்றும் ஒருவகை கொசுவால் இந்த மஞ்சள் காய்சச்ல் உண்டாகிறது. மழை மற்றும் குளிர் காலங்களில் இந்த மஞ்சள் காய்ச்சல் அதிகம் பரவ வாய்ப்பு உண்டு. இந்த காய்ச்சலை பெரிதாகக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் சில கடுமையான பிரச்சனைகளைக் கூட ஏற்படுத்திவிடக் கூடும்.

 Health department order to check arrivals for yellow fever vaccination

மஞ்சள் காய்ச்சலுக்கென்று தனிப்பட்ட சிகிச்சை எதுவும் கிடையாது. கொரோனா, டெங்கு போன்ற வைரஸ் தொற்று சிகிச்சையைப் போன்று தான் இந்த மஞ்சள் காய்ச்சலுக்கும் அதன் அறிகுறிகளை அடிப்படையாகக் கொண்டு சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. மஞ்சள் காய்ச்சல் பரவுவதைத் தடுக்க தடுப்பூசியும் போடப்படுகிறது.

இந்த நாடுகளில் தீவிரம் : இந்நிலையில், ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்கா நாடுகளில் மஞ்சள் காய்ச்சல் நோய் பரவல் தீவிரமடைந்து வருகிறது. சூடான் நாட்டில் ஏற்பட்டுள்ள உள்நாட்டுப் போர் காரணமாக அங்குள்ள இந்தியர்கள் மீட்கப்பட்டு இந்தியாவிற்கு பத்திரமாக அழைத்து வரப்படுகின்றனர். அங்குள்ள தமிழர்களை மீட்பதில் மத்திய அரசுடன் இணைந்து தமிழ்நாடு அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சூடானில் இருந்து வருபவர்கள் மஞ்சள் காய்ச்சலுக்கான தடுப்பூசியை செலுத்தி இருக்கிறார்களா என்பதை சோதனை செய்ய விமான நிலையங்களுக்கு தமிழக பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. சூடானில் தற்போது மஞ்சள் காய்ச்சல் பரவி வரும் நிலையில், அங்கிருந்து வருபவர்களில் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசியை செலுத்தாத பயணிகள் கண்டறியப்பட்டு அவர்களை 6 நாட்கள் வரை தனிமைப்படுத்தி வைப்பதற்கான வழிகாட்டுதல்களை பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

சுகாதாரத்துறை அறிவிப்பு : ஆப்பிரிக்கா மற்றும் தெற்கு அமெரிக்கா நாடுகளில் மஞ்சள் காய்ச்சல் (Yellow Fever) நோய்த்தாக்கம் காணப்படுகிறது. எனவே, மஞ்சள் காய்ச்சல் நோய் பரவலை தடுக்க இந்தியாவிலிருந்து அந்நாடுகளுக்கு செல்வோர் மற்றும் அந்நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வருவோர் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை அறிவுறுத்தியுள்ளது.

மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்திக் கொண்ட பத்து நாட்களுக்கு பிறகே மேற்கண்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள அல்லது மேற்கண்ட நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வர அனுமதிக்கப்படுவர். இது விமான நிலையங்களில் சான்றிதழ் மூலம் கண்காணிக்கப்படுகிறது. தடுப்பூசி செலுத்தும் 3 இடங்களின் விவரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

தடுப்பூசி மையங்கள்: 1. கிண்டியில் உள்ள பன்னாட்டு தடுப்பூசி மையம் மற்றும் கிங் நோய்த்தடுப்பு ஆராய்ச்சி நிலையத்தில் அனைத்து செவ்வாய்க் கிழமைகளிலும் காலை 10 மணி முதல் 12 மணி வரை தடுப்பூசிகள் வழங்கப்படும். [email protected] / www.kipmr.org.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யது தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.

2. துறைமுக சுகாதார நிறுவனம், இராஜாஜி சாலை, சென்னை. திங்கள் மற்றும் புதன் 9.30 மணி முதல்12.30 மணி வரை ( [email protected] [email protected] ) இணையத்தில் பதிவு செய்து தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம்.

3. துறைமுக சுகாதார அதிகாரி, துறைமுக சுகாதார அமைப்பு எண்.பி-20, உலக வர்த்தக அவென்யூ, புதிய துறைமுகம், தூத்துக்குடி.
செவ்வாய் 11 மணி முதல் 1 மணி வரை இணையதள பதிவு முகவரியில் பதிவு செய்து தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் ( [email protected] ). நேரடி பதிவு நேரம்: செவ்வாய் 10.00 மணி முதல் 11.00 மணி வரை செலுத்தப்படும்.

தமிழ்நாட்டில் குடியுரிமை பெற்ற ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்கா நாடுகளுக்கு பயணம் செய்ய விரும்புவோர் மேற்கண்ட இடங்களில் உள்ள தடுப்பூசி மையங்களை அணுகி, தடுப்பூசி செலுத்திக் கொண்டு சான்றிதழ் பெற்று பயணம் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள். மேற்கண்ட மூன்று இடங்களைத் தவிர, தமிழ்நாட்டில் வேறு எந்த இடத்திலும் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்தப்படுவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+