வெறும் "இதை" மட்டும் குடிங்க.. ஒரே கல்லுல டபுள் மாங்காய்.. விர்னு குறையுமாம் வெயிட்.. சர்வரோக நிவாரணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: உடல் எடை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.. அதுவும் இந்த தண்ணீரை வெறும் வயிற்றில் குடிக்கும்போது, இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்கிறார்கள்.

உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், சாதம் + காய்கறிகள் போதும்.. இந்த காய்கறிகளுடன் ஏதாவது ஒரு கீரை இருந்தால் இன்னும் சிறப்பு. அதேபோல, பழங்களை சாப்பிடும்போது, ஆப்பிள், ஆரஞ்சு, அத்திபழம் போன்ற பழங்கள்தான், உடல்எடை குறைக்க துணைபுரியும். கூடுமானவரை ஒமேகா 3 உள்ள மீன்களை அதிகம் சேர்த்து கொள்ளலாம்.

Health Fantastic Fennel Seed Water and Fennel Seed Water is the Super Healthy tip for weight loss

தண்ணீர்: உணவுப்பழக்கத்தில் எவ்வளவு கட்டுப்பாடுகள் இருந்தாலும், உடற்பயிற்சிகள் அதிகமாகவே செய்தாலும்கூட, அனைத்துக்கும் அடித்தளமாக உதவுவது தண்ணீர்தான்..

உடலிலுள்ள நச்சு கழுவுகள் வெளியேற, காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது முக்கியம்.. உடல் எடை குறைய ஆரம்பிப்பதே இந்த இடத்தில் இருந்துதான்..!!

இதில் சோம்பு தண்ணீர் மிகப்பெரிய உதவியை உடல்எடை குறைப்போருக்கு செய்கிறது.. சோம்பில் துத்தநாகம், பாஸ்பரஸ், செலினியம் மற்றும் மாங்கனீசு போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இந்த சோம்பில் உள்ளன.. மற்றும் நார்ச்சத்து, தாதுக்கள் நிறைந்த பொருள்தான் இந்த சீரகம்.. ஆயுர்வேத மருத்துவத்திலேயே, உடல் பருமனை குறைக்க இந்த பெருஞ்சீரகம் எனப்படும் சோம்பு தண்ணீர்தான் பரிந்துரைக்கப்படுகிறது.

சோம்பு நீர்: இரவு தூங்கும்முன்பு, ஒரு ஸ்பூன் சோம்பை, ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு ஊற வைக்க வேண்டும். மறுநாள் வெறும் வயிற்றில் இந்த தண்ணீரை குடிக்க வேண்டும். அல்லது, இந்த தண்ணீரை அப்படியே, சோம்பு டீ-யாக போட்டு குடிக்கலாம். இதன் நன்மைகள் என்னவென்று தெரிந்தாலே, அது எந்த அளவுக்கு உடல்குறைய உதவி புரிகிறது என்பதை நம்மால் அறிய முடியும்.

சோம்பு தண்ணீர் குடித்தால், உடலில் உள்ள கலோரிகள் மற்றும் கொழுப்புக்களை குறைத்து உடல் எடை குறைய உதவுகிறது... ரத்தத்தில் உள்ள அதிகப்படியான யூரிக் ஆசிட்டுகளை வெளியேற்றி, ரத்தத்தை சுத்திகரிக்கிறது.. வயிற்றை சுற்றியுள்ள தேவையற்ற சதைப் பகுதி கரைந்து, தொப்பை குறைந்து சரியான உடல்வாகை தருகிறது. மெட்டாமெலிசத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் சோம்பில் நிறைய உள்ளன.

மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அடிவயிற்றுவலிக்கு, சுடுநீரில் சோம்பு போட்டு கொதிக்க வைத்து குடித்தால் தீர்வு கிடைக்கும்.. எப்போது அசைவ உணவு சாப்பிட்டு முடித்ததுமே, சிறிது சோம்பை மென்று சாப்பிட்டு வந்தால் வாய் துர்நாற்றங்கள் நீங்கும்.. பற்களும் சேதமாகாது... கர்ப்பப்பை சார்ந்த குறைபாடுகள், வயிற்றுப்புண், இருமல், மந்தம், மூச்சிரைப்பு, மூக்கில் நீர் வடிதல் அனைத்துக்குமே சோம்பு உதவுகிறது. சிறுநீரகங்களில் பிரச்சனை ஏற்படுவதை தடுக்கிறது..

பலவீனம்: வயிற்றை நீண்ட நேரத்திற்கு முழுமையானதாக வைத்திருக்கும்.. பசி தெரியாது..நார்ச்சத்து அதிகம் உள்ளது.. கண் பார்வை தெளிவடையும்.. வயிற்று உப்புசத்தை தணிக்கும்.. கண்களின் பலவீனத்தை நீக்கும்.. சரும பிரச்சனைகளுக்கும் நிவாரணம் தருகிறது.. தோல் நிறம் மினுமினுப்பு கூட்டும்.. ஒருபக்கம் உடல் எடை குறையும், இன்னொரு பக்கம் சரும அழகும் கூடும்.. இந்த சோம்பு பசியை அடக்கக்கூடியது.. நிம்மதியான தூக்கத்தை பெறமுடியும்..

தண்ணீரில் சோம்பு சேர்த்து கொதிக்க வைத்து, சிறிது வெண்ணெய் கலந்து பாலூட்டும் தாய்மாருக்கு தந்தால், தாய்ப்பால் அதிகம் சுரக்கும்.. இன்று கிராமப்புறங்களில் நடைமுறையில் இது உள்ளதாம்..

யாரெல்லாம் தவிர்க்கலாம்: சிலருக்கு தோல் அழற்சி மற்றும் கொப்புளங்களில், தோலில் வெடிப்பு போன்ற பிரச்சனையை தரலாம்.. அதனால், ஆஸ்துமா போன்ற அலர்ஜி இருப்பவர்கள் இந்த சோம்பு தண்ணீரை குடிக்க வேண்டாம் என்பார்கள். அதேபோல கர்ப்பிணி பெண்கள் சோம்பு தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.

காரணம், சோம்பு கருப்பை சுருக்கத்தை உண்டாக்கிவிடுமாம். ஏதாவது ஒரு நோய்க்காக மருந்து மாத்திரைகளை சாப்பிடுபவர்களும் சோம்பு தண்ணீர் குடிப்பதை தவிர்க்கலாம்.. அதனால் மருத்துவர்கள் ஆலோசனை இல்லாமல் குடிக்க கூடாது.

இனிமேல், தினமும் காலையில் காபி குடிப்பதற்கு பதிலாக சோம்பு தண்ணீரை குடித்து, அன்றைய நாளை நன்கு சுறுசுறுப்புடனும், புத்துணர்ச்சியுடனும் ஆரம்பியுங்கள்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+