முதலமைச்சர் விஜய்க்கு விசிக 3 டிமாண்ட் வைத்தது உண்மையா? விளக்கம் கொடுத்த திருமாவளவன்!
சென்னை: தவெக கூட்டணியில் முழுமையாக விசிக இணைய வேண்டும் எனில், திருச்சி கிழக்கில் திருமாவளவன் போட்டியிட தவெக ஓகே சொல்ல வேண்டும், அமைச்சர் பதவியின் இலாகா மாற்றி கொடுக்கப்பட வேண்டும் என விஜய்யிடம், விசிக டிமாண்ட் வைத்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையில் இது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
வெறும் 2 எம்எல்ஏக்களை வைத்திருந்தாலும், விசிகவுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் திமுக கூட்டணியிலிருந்து இன்னும் விசிக முழுமையாக வெளியேறவில்லை. இதற்கு காரணம் 3 டிமாண்ட்கள் என்று சொல்லப்பட்டிருந்தது.

அதாவது, விசிகவுக்கு ஒதுக்கப்பட்ட சமூகநீதித்துறையை மாற்றி கொடுக்க வேண்டும் என்பது முதல் டிமாண்ட். இரண்டாவது டிமாண்ட் திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் திருமாவளவன் போட்டியிட தவெக ஓகே சொல்ல வேண்டும். இதுபோக வாரிய பதவிகளை கேட்கப்பட்டிருப்பதாக தகவல்கள் கசிந்தன. இப்படி இருக்கையில் இந்த டிமாண்ட் உண்மையில்லை என்று திருமாவளவன் விளக்கமளித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, "முதல் நாள் ஊடக சந்திப்பிலேயே இது குறித்து நான் தெளிவாக விளக்கி விட்டேன். இடைத்தேர்தல் எதிலும் நான் போட்டியிடப் போவதில்லை.
அதே நேரம் தவெகவுக்கு நாங்கள் எந்த அழுத்தத்தையும் கொடுக்கவில்லை. அமைச்சர் பதவியில் இலாகாவை மாற்றி தர வேண்டும் என்றோ.. திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என்றோ.. நாங்கள் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை. இவை அனைத்தும் வெறும் யூகங்களாக பரவி வருகின்றன. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, என். ஆனந்த் உள்ளிட்டோர் நேற்று முறைப்படி என்னை சந்தித்து இருந்தார்கள். தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு தரக்கூடிய அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்கள்.
கட்சித் தலைவர்கள் மட்டுமின்றி, அந்த கட்சியை சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், என அனைவரையும் சந்திக்கும் நிகழ்வு ஒன்றை தவெக ஒருங்கிணைக்க இருக்கிறது.
இந்த நிகழ்வில் விஜய், தவெக ஆதரவு கட்சிகளின் தலைவர்களுடன் பேசுவார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. சந்திப்புக்கு பிறகுதான் என்ன பேசினார் என்பது தெரிய வரும்.
தேனீர் விருந்து போல இந்த நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட இருக்கிறது. ஆதரவு தரும் கட்சிகளின் தலைவர்களோடு முதலமைச்சர் சிறிது நேரம் உரையாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. என்ன பேசுவார்கள் என்பது பின்னர் தான் தெரிய வரும்" என கூறியிருக்கிறார்.
முன்னதாக, திமுக குறித்து திருமாவளவன் பாசிட்டிவாக பேசியிருந்தார். இருப்பது என்னவோ தவெக உடன்.. ஆனால் திமுகவுக்கு சப்போர்ட் பண்ணி பேசுவது ஏன்? என்று கேள்விகள் எழுந்திருந்தன. திருமாவளவனின் பேச்சுக்கு பின்னால் திமுகவின் பாசமும், தவெகவுக்கான டிமாண்ட் இருப்பதாகவும் சொல்லப்பட்டது. இப்படி இருக்கையில் தற்போது திருமாவளவன் விளக்கமளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications