மும்பை நட்சத்திர ஹோட்டலில் விபச்சாரத்தில் சிக்கிய லீடு நடிகை.. ரூமில் பார்த்தால் அந்த நபரா?

Subscribe to Oneindia Tamil

மும்பை: மும்பையில் நடந்த விபச்சாரத்தில் நடிகை ஒருவர் சிக்கி உள்ளார்.. மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சட்டவிரோத பாலியல் தொழில் நெட்வொர்க்குகள் அடுத்தடுத்து முறியடிக்கப்பட்டு வரும் நிலையில், இப்படியொரு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டத்தை காக்க வேண்டிய வக்கீல் உட்பட இந்த சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டிருப்பது அதைவிட அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தானே மாவட்டம் கல்யாண் பகுதியில் உள்ளது அந்த பிரபலமான ஹோட்டல்.. அங்கே பாலியல் தொழில் நடப்பதாக ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

Mumbai luxury hotel

பெண் வழக்கறிஞர்

இதையடுத்து, போலீசார் சாதாரண உடையில் கஸ்டமர்களை போல அந்த ஹோட்டலுக்குள் நுழைந்து, அதிரடியான சோதனையை நடத்தினார்கள்.. இந்த திடீர் சோதனையில், ஒரு பெண் வழக்கறிஞர் இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.. காரணம், சுமார் 3 மாதங்களாகவே, இந்த சட்டவிரோத தொழிலை நடத்தி வந்ததே இந்த பெண் வழக்கறிஞர் தானாம்.. இதையடுத்து அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

வறுமையில் சிக்கி தவிக்கும் பெண்களை மட்டுமே குறிவைத்து, அவர்களை கட்டாயப்படுத்தி இந்த பெண் வழக்கறிஞர் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இந்த ஆபரேஷனின்போது, அங்கிருந்த 2 பெண்களும் பத்திரமாக போலீசாரால் மீட்கப்பட்டனர். சமூகத்தில் மதிக்கப்படும் ஒரு வழக்கறிஞரே பெண்களை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் தள்ளிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை பாலியல் தொழில்

இதனிடையே, மும்பையின் கிர்காவ் பகுதியில் உள்ள இன்னொரு ஹோட்டலிலும் பாலியல் தொழில் நடப்பதாக சமூக சேவை பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இங்கும் போலீசார் ஒரு போலி வாடிக்கையாளரை அனுப்பி வைத்தனர்.. அங்கும் விபச்சாரம் நடப்பதை உறுதி செய்தனர்.. பிறகு ஹோட்டல் அறைக்குள் அதிரடியாக புகுந்து சோதனையிட்டபோது, திரைத்துறையைச் சேர்ந்த 2 முக்கிய பெண் கலைஞர்கள் காவல்துறையினரால் மீட்கப்பட்டனர்.

அவர்களில் ஒருவர் மராத்தி திரைப்பட உலகில் முன்னணி ஹீரோயினாக வலம் வருபவர் என்றும், இன்னொருவர் பெங்காலி படங்களில் கேரக்டர் ரோல்களில் நடித்துள்ளவர் என்றும் போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.. திரைத்துறையில் போதிய சான்ஸ் இல்லாததால், அந்த சூழலை பயன்படுத்தி இவர்களை இந்த தொழிலில் தள்ளியிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

யாரந்த நபர் - சிக்கிய பெண் வழக்கறிஞர்

மேலும், இந்த விபச்சார கும்பலை இயக்கி வந்த முக்கிய புரோக்கரை போலீசார் சம்பவ இடத்திலேயே கையும் களவுமாக கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர் சினிமா துறையில் மேக்கப் கலைஞராக பணியாற்றுகிறாரார்.. அதனால் பல்வேறு முன்னணி சினிமா பிரபலங்களுடன் நெருங்கிய தொடர்பு மேக்கப் மேனுக்கு இருந்துள்ளது. இதுவும் விசாரணையில்தான் தெரியவந்தது.

இந்த 2 சம்பவங்கள் குறித்தும் மனித கடத்தல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட பெண் வழக்கறிஞர் மற்றும் சினிமா மேக்கப் கலைஞர் ஆகியோரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நெட்வொர்க்குகளுக்கு பின்னால் இருக்கும் பெரிய புள்ளிகள் யார், வேறு ஏதாவது சொகுசு ஹோட்டல் நிர்வாகங்களுக்கு இதில் தொடர்பு இருக்கிறதா மற்றும் பணப் பரிவர்த்தனைகள் குறித்தும் போலீசார் தங்களது விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். திரையுலகைச் சேர்ந்தவர்களே இதில் சிக்கியிருப்பது மும்பை வட்டாரத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+