ஆவின் பால் வாங்கும் மக்களுக்கு அதிர்ச்சி.. 4 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்த சலுகையை நிறுத்திய தவெக அரசு

Subscribe to Oneindia Tamil

கோவை: ஆவின் பால் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்பட்டுள்ளது. மாதாந்திர பால் அட்டையில் அளிக்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி நிறுத்தப்படுவதாக கோவை ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. எம்.ஆர்.பி விலையிலேயே மாதாந்திர அட்டைத்தாரர்களுக்கும் இனி விற்கப்படும் என்றும் ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இனிமேல் முகவர்களுக்கு பால் பாக்கெட் அடிப்படையில் இல்லாமல் பெட்டி அடிப்படையில் கணக்கிட்டு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 1 ஆம் தேதி முதல் முகவர்கள் தங்கள் கமிஷன் தொகையை கழித்துக் கொண்டு பணம் செலுத்தும் முறை அமல்படுத்தப்படும் என ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Aavin

மக்களுக்கு மாதாந்திர பால் அட்டையில் அளிக்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி நிறுத்தப்படுவதாக கோவை ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. எம்.ஆர்.பி. விலையிலேயே மாதாந்திர அட்டைத்தாரர்களுக்கும் இனி விற்கப்படும் என்றும், பிரதி மாதம் 11-25 தேதிக்குள் செயலி வழியே பணம் செலுத்தி அட்டையை பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக முன்னாள் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், "கோவை மாவட்டத்தில் ஆவின் பால் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.2 தள்ளுபடியானது ஜுலை 1 முதல் நிறுத்தம் செய்யப்படும் என்ற ஆவின் அறிவிப்பு குறித்த செய்தியானது கடும் கண்டனத்திற்குரியது.

மாதந்தோறும் இந்தச் சலுகையை நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கான நடுத்தர, ஏழை குடும்பங்களுக்கு இது பெரும் சுமையாகும். மக்களின் அத்தியாவசிய தேவையான பாலில் கூட சலுகையை பறிப்பது ஏற்றுக் கொள்ள முடியாததாகும். எனவே, மாதாந்திர அட்டைதாரர்களுக்கான பழைய நடைமுறையையே தொடர ஆவின் நிறுவனம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

திமுக அரசு பொறுப்பேற்ற பின் 2022 ஜனவரி 1 முதல் ஆவின் மாதாந்திர பால் அட்டைதாரர்களுக்கு ரூபாய் 2 முதல் ரூபாய் 3 வரை தள்ளுபடி விலையில் வழங்கியது. சென்னையில் 3 ரூபாய் தள்ளுபடியும் பிற மாவட்டங்களில் 2 ரூபாய் தள்ளுபடியும் வழங்கப்பட்டு வந்தது 4 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கி வந்த தள்ளுபடியை தவெக அரசு பொறுப்பேற்ற 2 மாதத்தில் நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+