பிரண்டை பிஞ்சு.. பிரண்டை சூப் வெக்கறீங்களா? அடிவயிற்று கொழுப்பை கரைக்கும் பிரண்டை.. இதான் பக்குவம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரண்டை துவையல் பற்றி தெரியும்.. பிரண்டை சாறு தெரியுமா? பிரண்டை சூப் தெரியுமா? பிரண்டை வற்றல் தெரியுமா? இந்த பிரண்டையை வேறு எப்படியெல்லாம் சாப்பிடலாம் தெரியுமா?

பிரண்டை என்றாலே, ஆயுளை நீட்டிக்கும் மூலிகை என்று சொல்லலாம். ஆண்மை விருத்திக்கு பேருதவி புரிவது இந்த பிரண்டைதான்.. ஜீரண சக்தியை பெருக்கும்.. பாலில் பிரண்டை மற்றும் உப்பு கலந்து குடித்துவந்தால் ஆண்மை பெருக்கும் என்பார்கள்.. உடலின் பலத்தை கூட்டும்.. உடல் சுறுசுறுப்பு அதிகரிக்கும், ஞாபக சக்தி பெருகும், மூளை நரம்புகளும் பலப்படும்.

Health Medical Uses of Pirandai Do you know Pirandai is the Best Health tips for Weight loss

துவையல்: பிரண்டைத் துவையலை குழந்தைகளுக்குத் கொடுத்து வர எலும்புகள் உறுதியாகும். எலும்பு முறிவு ஏற்பட்டால் உடைந்த எலும்புகள் விரைவாகக் கூடவும் பிரண்டை உதவுகிறது.

பெண்களுக்கு மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் கோளாறுகளை சரிசெய்ய பிரண்டை போல அருமை மருந்து வேறு கிடையாது. 6 ஸ்பூன் பிரண்டையில் சாறு மற்றும் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் கலந்து வெறும் வயிற்றில் ஒரு வாரம் சாப்பிட்டாலே மாதவிடாய் சீராகும்..

பிஞ்சு பிரண்டை: பிரண்டை பிஞ்சாக இருந்தால் அதை பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும். நல்லெண்ணெய்யை சற்று அதிகமாக, அதாவது, பிரண்டை அந்த எண்ணெய்யில் மூழ்கம் அளவுக்கு ஊற்ற வேண்டும். பிறக, பிரண்டையை அதில் சேர்த்து நன்றாக வதக்கி, எண்ணெய்யை மட்டும் வடிகட்டி வைத்துகொள்ள வேண்டும. இந்த எண்ணெய், மூட்டு வலிக்கு மிகவும் நல்லது.

முக்கியமாக, அடிவயிற்று கொழுப்பை குறைப்பதில் இந்த பிரண்டை பெரும்பங்கு வகிக்கிறது. குழந்தை பெற்ற பிறக, பெரும்பாலான பெண்களின் அடிவயிற்றுப்பகுதியில் சதை போட்டுவிடும்.. இதை கட்டுப்படுத்த படாதபாடு பட வேண்டியிருக்கும்.. ஆனால், பெத்த வயிற்றில் பிரண்டையை கட்டு என்று ஒரு பழமொழியே உண்டு.. அடிவயிற்று கொழுப்பை கரைக்கக்கூடியது இந்த பிரண்டை..

பிரண்டை துவையல்: சரி பிரண்டையை எப்படி பயன்படுத்துவது தெரியுமா? பெரும்பாலும் பிரண்டையை துவையல் செய்வார்கள்.. இந்த பிரண்டையை துவையலை சாப்பிடுவதால், வாயுநீர் வெளியேறும்... பிரண்டையை நெய்யில் வதக்கி, கல்உப்பு சேர்த்து சாப்பிட்டு வந்தால், மூலநோயும் தீரும்.. பெருங்குடல் பிரச்சனையை தீர்த்து, புழுக்கள் இருந்தாலும் பிரண்டை வெளியேற்றிவிடும்..
பிரண்டை பொடி என்றே நாட்டுமருந்து கடைகளில் விற்கிறார்கள்.. அதையும் பயன்படுத்தலாம்.. ஆனால், வீட்டிலேயே துவையல் போல செய்து சாப்பிட்டால் பலமடங்கு நன்மை.. அதனால், பிரண்டையாகவே வாங்கி பயன்படுத்தலாம்.

பிரண்டை சட்னி: பிரண்டை தண்டுகளின் மேல் தோல் மற்றும் அதிலுள்ள நார்களை எடுத்துவிட்டு, சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி நெய்யில் வதக்கி தனியாக, எடுத்து கொள்ள வேண்டும். பிறகு அதே வாணலில், காய்ந்த மிளகாய், புளி, உப்பு வதக்கி, இப்போது மொத்தமாக சேர்த்து அரைத்துவிட வேண்டும். கடைசியாக, கடுகு, உளுந்தம்பருப்பு சேர்த்து தாளித்து விடலாம். இதுதான் பிரண்டை துவையல்.

சிலர் இந்த பிரண்டையின் இலையிலும் துவையல் செய்வார்கள்.. பிரண்டை இலையை நன்றாக கழுவி, நறுக்கி கொண்டு, பூண்டு, இஞ்சி, மிளகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து அரைத்து துவையல் செய்வார்கள். மோரில் சிறிது உப்பு போட்டு, அதனுடன் பிரண்டை தண்டுகளை துண்டுகளாக நறுக்கி சேர்த்து உலர்த்தினால், பிரண்டை வற்றல் தயாராகிவிடும்.. இதே வற்றலை எண்ணெயில் அப்பளம் போல பொரித்தும் சாப்பிடலாம்.

பிரண்டை சூப்: பிரண்டையில் சூப் செய்வார்கள்.. பிரண்டையை தோலை நீக்கி சுத்தம் செய்துவிட்டு விழுதாக அரைத்து வைத்து கொள்ளவும். பிறகு, ஒரு குக்கரில், இந்த அரைத்த விழுதை சேர்த்து, அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, கல்உப்பு சேர்த்து 4 டம்ளர் தண்ணீர் விட்டு குக்கரை மூடி விடவும்.

ஒரு விசில் வந்ததும், அடுப்பை நிறுத்திவிட்டு, குக்கரை ஆறவிடவும். பிறகு, பிரண்டையில் உள்ள நீரை மட்டும் வடிகட்டி தனியாக வைத்துக் கொண்டு, குக்கரில் தங்கியுள்ளதை மசித்துவிட்டு, மறுபடியும் அந்த மீண்டும் நீரை கலந்துவிட வேண்டும். கடைசியாக கொத்தமல்லி சேர்த்துவிட்டால், பிரண்டை சூப் தயார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+