குண்டு குண்டுனு இருக்கீங்களா? அப்ப "இதை" மட்டும் செய்யுங்க.. அடையாளமே தெரியாம மாறிடுவீங்க.. சூப்பர்ல
சென்னை: உடல் எடையை குறைக்க வேண்டுமானால், எத்தனையோ வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டியிருக்கிறது.. ஆனால், எந்த வழிவகையாக இருந்தாலும், அதற்கு அடித்தளமாக அமைவது பச்சை காய்கறிகளும், கீரைகளும், பழங்களும்தான்..!!
சரியான உணவு பழக்கம் மற்றும் உடற்பயிற்சி ஆகிய இரண்டால் மட்டுமே உடல் எடை குறையும் என்பது மறுக்க முடியாத உண்மை.. ஆனால், எந்த உணவை சாப்பிடுவது என்ற குழப்பம் சிலருக்கு வந்துவிடுகிறது. இதற்காகவே சில டிப்ஸ்களும் இணையத்தில் அடிக்கடி உலா வந்தபடியே உள்ளன.
உடல் எடை: இதில் பெரும்பாலும் பரிந்துரைப்பது "கீரை" வகைகள்தான்.. உடல் எடையை விரைவில் குறைக்க வேண்டுமானால் கீரை சாப்பிடலாம். . காரணம், கீரையில் நார்ச்சத்து இருப்பதால் உடல் எடை குறைக்க வெகுவாக உதவுகிறது.. உடல் எடை அதிகமாக இருப்பவர்கள், தினமும் 5 கிராம் கீரையை சாப்பிட்டு வந்தால், வெறும் 3 மாதத்தில் 43 சதவிகிதம் உடல் எடை குறையும் என்கிறார்கள்.

கீரை சூப்: அதுமட்டுமல்ல, ஒரு கப் கீரையில் 7 கலோரிகள் இருக்கின்றன. எனவே, தினமும் கீரை சாப்பிடுவது பல வகைகளில் உதவி புரிகிறது. புரதம், கால்சியம், இரும்புச்சத்து, மக்னீஷியம், பொட்டாஷியம், வைட்டமின் A நிறைந்து காணப்படுகின்றன.. இதில் கலோரிகள் குறைவாக இருப்பதுடன், நிறைய ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்களும் உள்ளன. கொலஸ்ட்ராலை குறைத்து, மறுபடியும் உருவாக்கும் பித்த உப்புகளையும், இந்த கீரை நம் உடலில் இருந்து நீக்குகிறது.
அதிகளவு நார்ச்சத்து உள்ளதால் உடல் எடையைக் குறைக்க முயற்சி செய்பவர்கள் கீரையை அவர்களின் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். குறிப்பாக பாலக்கீரையில் வைட்டமின்கள் ஏ,சி, கே மற்றும் தாதுக்கள், மெக்னீசியம், இரும்பு போன்ற ஊட்டச்சத்துக்கள் நிரம்பி கிடக்கின்றன. உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கட்டுப்படுத்த இந்த கீரை முக்கிய பங்கு வகிக்கிறது. பாலக் கீரை என்றில்லை, எந்த கீரையாக இருந்தாலும், அது உடல் எடை குறைக்க உதவி புரிகிறது.
மதிய உணவு: அடுத்ததாக ப்ரோக்கோலியை அடிக்கடி சமையலில் சேர்த்து கொள்ளலாம்.. ப்ரோக்கோலியில் உள்ள சல்போராபேன் கொழுப்பை எரிக்கும் நொதிகளை உடலில் உற்பத்தி செய்ய தூண்டுகிறது.. நார்ச்சத்தும் அதிகமாக இருக்கும்.. வைட்டமின் சி நிறைய இருக்கிறது.. நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிக்க உதவுகிறது... கொழுப்பை குறைத்து, உடம்பில் இருந்து நச்சுகளை நீக்குகிறது.
அதேபோல, முட்டைக்கோஸ் சாப்பிடலாம்.. இதுவும் கொழுப்பை எரிக்க உதவுகிறது. கலோரிகளில் மிகவும் குறைவாக உள்ள காய் இதுவாகும்.. கால்சியம், பொட்டாசியம், வைட்டமின் ஏ, வைட்டமின் கே மற்றும் மெக்னீசியம் போன்றவை நிரம்பி உள்ளதுடன், மதிய உணவிற்கு கண்டிப்பாக எடுத்து கொள்ள வேண்டிய முக்கிய உணவாகும்.
கொழுப்புகள்: முட்டைக்கோஸ் வேகவைத்த தண்ணீரை அல்லது சூப்பாக செய்து குடித்தால், உடல் எடை குறைக்க நினைப்போருக்கு அவ்வளவும் நன்மை தரும்.. உள்ளுறுப்புகளில் படிந்திருக்கும் கழிவுகளை நீக்குகிறது இந்த முட்டைக்கோஸ்.. கலோரிகள் குறைவாக உள்ளதால், கொழுப்புகள் சேராமல் தடுத்து உடல் எடையைக்குறைப்பதற்கு உதவும்.
வயிற்றில் தேங்கியுள்ள கொழுப்புக்களை கரைத்து உடல் எடையை குறைக்கும் கீரைகளில் முதன்மையானது முருங்கைக்கீரை என்கிறார்கள்.
முருங்கைக் கீரையை 1 கப் தண்ணீர் ஊற்றி, நன்றாக அரைத்து, வடிக்கட்டி வைத்து கொள்ள வேண்டும்.. அதில், அரை ஸ்பூன் எலுமிச்சம் சாறு + தேன் கலந்து வெறும்வயிற்றில் காலையில் குடித்து வந்தால், அவ்வளவும் உடல் எடை குறைக்க உதவும்.. குடலை சுத்தம் செய்து, ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. கலோரிகளை வேகமாக கரைத்து, உடல் பருமனை குறைக்க உதவுகிறது.
சிக்கன் சூப்: அதேபோல, பருப்பு மற்றும் பூசணிக்காயை ஒன்றாக சேர்த்து சூப் செய்து சாப்பிட்டாலும் உடல் எடை குறைவதாக சொல்கிறார்கள்.. சிக்கன் சூப் உடல் எடையை குறைக்க உதவும்.. ஆக மொத்தம் காய்கறிகளும், கீரைகளும் தட்டில் தினமும் இடம்பெற கட்டாய உணவாகும்..!!












Click it and Unblock the Notifications