"கஞ்சி தண்ணீர்".. சாதம் வடிச்சிட்டீங்களா.. ஆச்சரியத்தை கிளப்பும் அரிசி கழுவிய தண்ணீர்.. அடடே "இதுவா"

Subscribe to Oneindia Tamil

சென்னை: நம் பெரியவர்கள் எதை செய்தாலும், அதில் ஆயிரம் அர்த்தம் இருக்கும்.. அதில் ஒன்றுதான் இந்த கஞ்சி தண்ணீர் அல்லது சாதம் வடித்த தண்ணீர்.

நம் முன்னோர்கள், ஆரோக்கியமாக வாழ்ந்ததற்கு, இந்த சாதம் வடித்த கஞ்சி தண்ணீரும் மிக மிக முக்கிய காரணமாகும்.. கடுமையான உழைப்புடன்கூடிய, பழைய சோறு, சாதம் வடித்த கஞ்சி தண்ணீர் போன்றவைகளை சாப்பிட்டே வாழ்நாளை கடத்தியிருக்கிறார்கள்.

health news and Do you know what are the health benefits of Rice water

"சோறு வடித்தல்" என்றே சொல்வார்கள்.. அதாவது குக்கர்களில் அல்லாமல், அரிசியை களைத்து போட்டு, அதை பக்குவமாக வடித்து, அதிலிருந்து பெறப்படும் கஞ்சி தண்ணீரை குடித்து பயன் பெற்றிருக்கிறார்கள்.

சீன உணவு: இதனுடன் பச்சைமிளகாய், சின்ன வெங்காயம், ஊறுகாய், கருவாடுத்துண்டு இவைகளுடன் சேர்த்து சாப்பிடும்போது, அதை "தேவாமிர்தம்" என்றே போற்றுகிறார்கள். நமக்கு மட்டுமல்ல. சீனாவிலும் பாரம்பரிய சாப்பாடு என்றால், அது இந்த கஞ்சி தண்ணீர்தானாம். உண்மையை சொல்லப்போனால், சாதத்தை விட, இந்த தண்ணீரில்தான் நிறைய சத்துக்கள் உள்ளன.. கஞ்சி தண்ணீரை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளை நீங்களே பாருங்கள்:

களைப்பும், அசதியும், சோர்வும், பலகீனமும் உள்ளவர்களுக்கு இந்த கஞ்சி அற்புத உணவாகும்.. அதனால்தான், காய்ச்சலில் உள்ளவர்களுக்கும்சரி, காய்ச்சல் முடிந்து, பலகீனமாக இருப்பவர்களுக்கும் சரி, கஞ்சியை வைத்து தரும்படி டாக்டர்கள் சொல்வார்கள்.. இதனால், அன்றைக்கு முழுமைக்குமான சக்தி நம் உடலுக்குக் கிடைத்துவிடும்.

health news and Do you know what are the health benefits of Rice water

மாவுச்சத்து: கஞ்சி தண்ணீரில் உள்ள நார்ச்சத்து மலமிளக்கியாக செயல்படுகிறது.. எனவே, இத மலச்சிக்கலை தவிர்க்கும்... இதில் நிரம்பியுள்ள மாவுச்சத்து, உணவு செரிமானத்தை சீராக்கும்... இரைப்பைக் குடல் அழற்சியை தடுக்கும். நோயில் படுத்துவிடும்போது, அதனால் ஏற்படும் நீர் இழப்பை தடுக்கக்கூடியது..

வயிற்றுப்போக்கு உள்ளவர்களுக்கும் சிறந்த உணவு கஞ்சி தண்ணீர்தான். குழந்தைகளுக்கு இந்த கஞ்சித் தண்ணீரை தரும்போது, வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும்.. அரிசி கழுவிய தண்ணீர் எப்படி தலைமுடி தொடர்பான பிரச்சனைக்கு தீர்வாக இருக்கிறதோ, அதுபோலவே, சாதம் வடித்த கஞ்சியும், ஏகப்பட்ட பலன்களை தரக்கூடியது.

சருமத்தை பாதுகாக்கவும் இந்த கஞ்சித்தண்ணீர்தான் உதவுகிறது.. இந்த தண்ணீரில் ஓரிசனோல் என்ற பொருள் உள்ளதால், சூரியனின் புறஊதா கதிர்களில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. அதாவது, சருமத்தின் உள்பக்கத்தையும், வெளிப்பக்கத்தையும் சேர்த்து பாதுகாக்கிறது. உடல் சூட்டை நீக்கி, வெப்பத்தை சீரான அளவில் பராமரிக்கும்..

ஆரோக்கியம்: எந்த கஞ்சியாக இருந்தாலும், அது பக்கவிளைவுகள் ஏற்படுத்தாதது.. உடலுக்கு ஆரோக்கியம் தருவதுதான். அதில், இந்த கஞ்சித்தண்ணியும் ஒன்றாகும்.

health news and Do you know what are the health benefits of Rice water

ஒருசில புற்றுநோயின் வளர்ச்சியையும் இந்த கஞ்சித்தண்ணீர் தடுக்கும் திறன் கொண்டவையாம்.. எனவே, புற்றுநோய் உள்ளவர்கள் இதனை குடித்து வந்தால், புற்றுநோயின் வளர்ச்சியை "ஓரளவு" தடுக்கலாம் என்கிறார்கள். கார்போஹைட்ரேட் நிறைய உள்ளதால், உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள், இந்த சாதம் வடித்த கஞ்சி தண்ணீரை தினமும் குடித்து வந்தால், பலன் கிடைக்கும்.

இவ்வளவு பலன்கள் நிறைந்த இந்த அரிசி தண்ணீரை பற்றி, அரசுகளே புரிந்துவைத்துள்ளதால்தான், வறுமை சூழ்ந்த பகுதிகளில், கஞ்சித்தொட்டியை திறந்து வைக்கிறார்கள். அது பலரது பசியையும் போக்கி கொண்டிருக்கிறது..

ஆதி உணவு: வறுமையின் அடையாளமாகவே இந்த கஞ்சி தண்ணீர் பார்க்கப்பட்டாலும், மேல்தட்டு மக்களையும் கவரக்கூடியது..! எவ்வளவுதான் நவநாகரீகம் மாறினாலும்கூட, இன்னும் பல நூற்றாண்டுக்கு நம்முடனே தொடர்ந்து பயணித்தே வரும் இந்த ஆதி உணவு...!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+