தினந்தோறும் ஒரு நெல்லிக்காய் லட்டு.. கொத்து கொத்தாக முடி கொட்டுதா? கொய்யா விதை, மாதுளை விதை சிறப்பு
சென்னை: தலைமுடி கொட்டுவதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன.. அந்த காரணம் என்ன என்பதை ஆராயாமல், தலைமுடி வளர்ச்சிக்கு என்ன வழிமுறைகளை செய்தாலும் போதுமான பலன் தராது.. அதேசமயம், தலைமுடி உதிர்தலுக்கு எத்தனை காரணங்கள் இருந்தாலும், அடிப்படையாக கடைப்பிடிக்க வேண்டியது சத்தான உணவு + முறையான தூக்கம் + நிறைய தண்ணீர் + அமைதியான மனநிலைமை.. இந்த நான்கையும் கடைப்பிடித்தாலே, தலைமுடி உதிர்தலை ஓரளவு தவிர்த்துவிடலாம்.
ஹார்மோன் குறைபாடுகள் தலைமுடி உதிர்தலுக்கு காரணமாகவும் இருக்கலாம்.. ஹார்மோன்கள் சரியாக இருந்தால்,, முடிகள் அடர்த்தியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.. இரும்புச்சத்து, கால்சியம் சத்துக்கள் குறைந்திருந்தாலும் தலைமுடி கொட்ட வாய்ப்புண்டு.

தலைமுடி உதிர காரணங்கள் என்னென்ன
உடலில், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு இருந்தாலும் முடி கொட்டலாம். அளவுக்கு அதிகமான மன அழுத்தம் இருந்தாலும் தலைமுடி கொட்டலாம்.. சமீப காலமாக இளம் பெண்களை தாக்கி வரும் பிசிஓடி எனப்படும் கருப்பை நீர்க்கட்டி பிரச்சனை இருந்தாலும் தலைமுடி உதிரும்.. உஷ்ண உடம்பாக இருந்தாலும் தலைமுடி கொட்டலாம். சிலவகை மருந்துகளை எடுத்து கொள்வதும் இதற்கு காரணமாக இருக்கலாம். எனவே மருத்துவர்களை அணுகி முறையான சிகிச்சை பெறுவதே தீர்வாக இருக்கும்.
அதேபோல, உணவு விஷயத்திலும் சற்று கவனம் செலுத்தினாலே போதும். இரும்புச்சத்து, ஜின்க், கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள் போன்றவைகள் அடங்கிய உணவுகளை தவிர்க்காமல் சாப்பிட வேண்டும். கீரைகள், விதைகள், காய்கறிகள், பழங்கள் அடங்கிய உணவாக இருக்க வேண்டும்.. கீரைகளில் முதன்மையானது முருங்கைக்கீரை, கரிசலாங்கண்ணி கீரையாகும். இவை இரண்டும் உணவில் இருந்தாலே, தலைமுடி அதிகமாக வளர துவங்கும்.
மாதுளை, கொய்யா
பழங்களில் கொய்யா மாதுளை, தலைசிறந்த பழமாகும்.. நார்ச்சத்து அதிகமாக உள்ளதால், விதைகளுடன் சாப்பிட வேண்டும். இந்த விதையிலிருந்து தலைமுடிக்கு எண்ணெய் தயாரிக்கிறார்கள் என்றால் பார்த்து கொள்ளுங்கள்.. மாதுளம் விதைகளிலிருந்தும் எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. இந்த 2 பழங்களையும் விதைகளுடன் ஜூஸ் தயாரித்து குடிக்கலாம்.
கொய்யாவை, ஆப்பிள், அன்னாசியுடன் சேர்த்தும் ஜூஸ் தயாரித்து குடிக்கலாம்.. இவைகளில் எந்த பழம் ஜூஸாக அரைத்தாலும், அதில், சிறிது எலுமிச்சையை கலந்து கொள்வது கூடுதல் பலன்தரும்.
பலன் தரும் நெல்லிக்காய்
நெல்லிக்காய் தவிர்க்க முடியாத காயாகும்.. ஆக்சிஜனேற்ற பண்புகளை கொண்டதால், பொடுகு, அரிப்பு, முடி உதிர்வது, பலவீனமான தலைமுடி , நரைமுடிக்கும் தீர்வை தரக்கூடியது நெல்லிக்காய்.. வெறும் நெல்லிக்காயை சாப்பிடுவதுடன், அதனுடன் கற்றாழையும் சேர்த்து ஜூஸ் போல குடிக்கலாம். அல்லது நெல்லிக்காயுடன் சிறிது கறிவேப்பிலை சேர்த்து அரைத்து ஜூஸ் குடிக்கலாம். கறிவேப்பிலையை தனியாக சாப்பிடாமல், புதினா, கொத்தமல்லி, சேர்த்து துவையல் போல அரைத்து சாப்பிடலாம்..
நெல்லிக்காய் லட்டு செய்து பிள்ளைகளுக்கும் தரலாம்.. இதற்கு நெல்லிக்காய்களை கழுவி இட்லி தட்டில் ஆவியில் 10 நிமிஷம் வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் ஆறவைத்து, துருவிக் கொள்ள வேண்டும்.
நெல்லிக்காய் லட்டு
இப்போது, ஒரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் நெய், பாதாம், பாதாம், பருப்பினை சேர்த்து வறுக்க வேண்டும். துருவிய நெல்லிக்காயும் சேர்த்து வதக்கி, சிறிது நாட்டுச்சர்க்கரை சேர்த்து 5 நிமிடம் கிளறி, ஏலக்காய், சுக்கு சேர்த்து இறக்கிவிடலாம்.
வேண்டுமானால் இதில் நட்ஸ்களை சேர்த்துக்கொள்ளலாம். இதனை சூடாக இருக்கும்போதே லட்டு போல பிடிக்க வேண்டும். இதில், தினந்தோறும் ஒன்று சாப்பிட்டுவந்தாலே தலைமுடி அபாரமாக வளர்ச்சி பெறும். இதனால் தலைமுடி வளர்ச்சி மட்டுமல்ல, எதிர்ப்பு சக்தி பெருகி, ரத்தசோகையும் அண்டாது.
தலைமுடி உதிர்வு அதிகமாக இருந்தால், பொன்னாங்கண்ணி கீரையை உபயோகிக்கலாம்.. இந்த கீரையின் சாறுஎடுத்து அதனுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து, மெழுகு பதம்வரும்வரைக்கும் காய்ச்ச வேண்டும்.. இதனை வடிகட்டி வைத்து கொண்டு, தலையில் தேய்த்து குளித்து வந்தால் தலைமுடி உதிர்வது உடனடியாக நிற்கும்.
-
ஹார்முஸை பத்திரமாக கடந்த முதல் இந்திய டேங்கர் திஷா.. அமைதி ஒப்பந்தம் வந்தவுடனேயே நடந்த மாற்றம்! -
60 எச்சரிக்கை.. 8 முறை விமானம் மூலம் வார்னிங்.. அமெரிக்கா தாக்குதலில் இந்தியர்கள் பலியானது எப்படி? -
100% எத்தனால் எரிபொருள்.. கிரீன் சிக்னல் கொடுத்த மத்திய அரசு! பெரிய பிரச்சனை.. மக்களே உஷார்! -
இந்தியாவே இந்த 4 மாநிலத்தை தான் நம்பியிருக்கு.. உபி, பீகார் நிலைமை ரொம்ப மோசமா இருக்கே..! -
அலறும் சீனா - பாகிஸ்தான்.. இந்தியாவிடம் இனி வாலாட்ட முடியாது.. கைக்கு வந்த LRLACM ஏவுகணை.. வெற்றி -
டாக்டர் சீட்டு இல்லையா? இனி சிரப் வாங்கவே முடியாது.. மத்திய அரசு புதிய கட்டுப்பாடு.. பின்னணி -
இந்தியாவில் டெலிகாரம் செயலிக்கு தடை.. ஜூன் 22 வரை யூஸ் செய்ய முடியாது! நீட் லீக் விவகாரத்தில் அதிரடி -
கரப்பான் பூச்சி நிறுவனரை தாக்கிய ஆர்எஸ்எஸ் அமைப்பினர்? திப்கே பகிரங்க குற்றச்சாட்டு.. என்ன நடந்தது -
வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர் -
இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினருக்கு மட்டும் தடை.. AI வைத்து அமெரிக்கா ஆடும் கேம்? பின்னணி -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு! -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்!












Click it and Unblock the Notifications