பொள பொளன்னு தொங்குதா தொப்பை.. அப்போ "இதை" அவசியம் ட்ரையும் பண்ணுங்க..ஆகச்சிறந்த "தண்ணீர்" மருத்துவம்
சென்னை: உடல் எடை குறைய வேண்டும் என்றால், பச்சை காய்கறிகளும், கீரைகளும், தினம் ஒரு பழமும், போதுமான உடற்பயிற்சியும் மிக மிக அவசியம்.. இவைகளை தவிர்த்துவிட்டு, உடல் எடையை குறைப்பது என்பது கொஞ்சம்கூட சாத்தியம் கிடையாது. அதேசமயம், சின்ன சின்ன விஷயங்களில் நாம் கவனம் செலுத்தினால், உடல் எடை குறைய அவை பெரிதும் துணைபுரியும்.
தொப்பை: தொப்பையை குறைக்க வேண்டுமானால், முதலில் குறைக்க வேண்டியது அல்லது தவிர்க்க வேண்டியது உப்புதானாம்.. உப்பு, மைதா, சர்க்கரையை தவிர்த்தாலே பெரிய பாரம் குறைந்துவிடுகிறது. அடுத்ததாக, புரோட்டீன் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்த உணவை காலையிலேயே சாப்பிட்டுவிட வேண்டுமாம். இதுதான் அன்றைய நாள் முழுவதும் ஆற்றலை தரக்கூடியது. அத்துடன் நீண்ட நேரத்துக்கு பசி எடுக்காமலும் தடுக்கப்பட்டுவிடும்.

இந்த புரோட்டீன் உணவில், முக்கியமாக, முட்டை, தயிர், பருப்பு வகைகள் இருக்குமாறு காலை உணவை பார்த்து கொள்ள வேண்டும். ஸ்நாக்ஸ் நேரத்தில் பாப்கார்ன் சாப்பிட சொல்கிறார்கள்.. இது நார்ச்சத்து நிறைந்த உணவு என்பதால், பசியையும் தள்ளிப்போடக்கூடிய தன்மை உடையது.. அதேசமயம், க்ரீன் டீயையும் தவறாமல் குடித்துவிட வேண்டும்.
சிறப்பு தண்ணீர்: உணவில் நிறைய பூண்டு + புதினா + இஞ்சி இவைகளை கட்டாயம் சேர்க்க வேண்டும். அல்லது இவைகளை மட்டும் சேர்த்து துவையல், சட்னி அரைத்து சாப்பிடலாம். இதைத்தவிர வெறும் வயிற்றில் நிறைய தண்ணீரை கட்டாயம் குடிக்க சொல்கிறார்கள்.. இந்த தண்ணீர் வெறும் தண்ணீராக இல்லாமல் மூலிகை தண்ணீராக இருந்தால் இன்னும் சிறப்பு..
அல்லது, கால் டீஸ்பூன் வெந்தயம், கருஞ்சீரகம், 2 சிட்டிகை ஓமம் சேர்த்து கொதிக்க வைத்து 15 அல்லது 20 நாட்கள் குடித்தால், தொப்பை குறைய துவங்கும். ஆனால், கருஞ்சீரகம் உள்ளதால், இதை நீண்ட நாள் எடுக்கக்கூடாது.
வெந்தயம்: அல்லது வெந்தயத்தை இரவில் ஊறவைத்து காலையில் அந்த தண்ணீரை சூடாக்கி குடித்தாலும், தொப்பை குறைய துவங்கும்.. அல்லது காலையில், சிறிய வெள்ளரிக்காயை துண்டுகளாக்கி, அதை சொம்பு நீரில் சேர்த்து, எலுமிச்சை சாறு, ஒரு கைப்பிடி புதினா இலை, 2 ஸ்பூன் இஞ்சித்துருவல் சேர்த்து, 2 மணி நேரம் ஊறவைத்துவிட வேண்டும். அதற்கு பிறகு அந்த தண்ணீரை குடித்தால், விரைவில் உடல் எடையில் மாற்றம் தெரிய ஆரம்பிக்குமாம்.
அல்லது மதிய நேரத்தில், மோர் + புதினா, இஞ்சி, வெள்ளரிக்காய் என அனைத்தையும் அரைத்து குடிக்கலாம். அல்லது காபி, டீ குடிக்கும்போது, அதனுடன் சிறிது பட்டை தூளை சேர்த்து குடிப்பது உடல் எடை குறைய உதவும்.
வெந்தய விதைகள்: உடல் எடையை குறைக்க வெந்தயத்தை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். வெந்தய விதைகள் பல நூற்றாண்டுகளாக மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நார்ச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் A, D போன்ற சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. இந்த விதைகளை சரியாக உட்கொண்டால், அவை எடையைக் குறைக்கவும் உதவும்.
ஆயுர்வேதத்தின் படி, வெந்தயம் எடை இழப்புக்கு நன்மை பயக்கும் என்று கூறப்படுகிறது. வெந்தய விதையில் கரையாத நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது செரிமானத்திற்கு நல்லது மற்றும் உடலில் சேரும் நச்சுக்களை இது வெளியேற்றும். இந்த சூப்பர்ஃபுட் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. இவை வளர்சிதை மாற்றத்தையும் துரிதப்படுத்துகின்றன. ஒட்டுமொத்தமாக, வெந்தயத்தில் காணப்படும் ஊட்டச்சத்துக்கள் எடை குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும்.
வெந்தய டீ: வெந்தயத்தில் டீ போட்டுக் குடிக்கலாம்.. ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி, ஒரு டீஸ்பூன் வெந்தய விதைகள், ஒரு சிறிய துண்டு இலவங்கப்பட்டை, சிறிய துண்டு இஞ்சி போட்டு 5 நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும். இஞ்சி, இலவங்கப்பட்டையில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்திருப்பதால், உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.
அல்லது சீரகத்தில் டீ போட்டு குடிக்கலாம்.. சீரகம் வயிற்றை குளிர்விக்கும் தன்மை கொண்டது.. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.. எடை இழப்புக்கு பெரிதும் உதவுகிறது... வெறும் வயிற்றில், சீரக தண்ணீரை கொதிக்க வைத்து குடித்தால் பெரும்பலன் கிடைக்கும்.. வெறும் வயிற்றில் குடிப்பதோடு, சீரகத் தண்ணீரை எப்போது வேண்டுமானாலும் குடிக்கலாம்.
வேப்பம்பூக்கள்: வேப்பம்பூவை தேனுடன் கலந்து வெறும் வயிற்றில் சாப்பிட்டால், உடல் எடை குறையும் என்கிறார்கள். அல்லது வேப்பம் பூக்களை ஒரு கைப்பிடி எடுத்து, நீரில் ஊற வைத்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தாலும் உடல் பருமன் குறைய வாய்ப்புள்ளது.. முருங்கைக்கீரையை சூப் வைத்து குடித்து வந்தாலும் பலன் கிடைக்கும்.
சின்ன வெங்காயத்தை தேனில் ஊற வைத்து சாப்பிட்டால், ஊளைச்சதை குறையுமாம்.. குறிப்பாக, அடி வயிறு மற்றும் இடுப்பை சுற்றியுள்ள கெட்ட கொழுப்புகளை குறைக்கவும் தேன் வெங்காயம் உதவியாக உள்ளது.. காரணம், சின்ன வெங்காயம், தேன், இந்த இரண்டிற்குமே நச்சுக்களை முறிக்கும் தன்மை உண்டு. அதாவது, சின்ன வெங்காயங்களை தோல் உறித்து, ஒரு பாத்திரத்தில் போட்டு, அவை மூழ்கும்வரை தேன் ஊற்றி 2 நாட்கள் அப்படியே வைத்துவிட்டு 3வது நாள் பயன்படுத்த துவங்கினால், கெட்ட கொழுப்பு நீங்கும்.
பிளாக் காபி: தினமும் 2 கப் பிளாக் காபி குடித்தாலே போதும் என்கிறார்கள்.. பிளாக் காபியை குடித்தால், உடல் எடை குறைகிறது.. கலோரிகளும் குறைவு என்பதுடன், குளுக்கோஸ் உற்பத்தியும் மெதுவாக்குவதற்கு இது துணை புரிகிறது.
இப்படியான தண்ணீர் நம் உடலில் நிறைய இருந்தாலே தேவையற்ற கொழுப்புகள் கரைய துவங்கும் என்கிறார்கள். மொத்தத்தில், சீரான உணவும், முறையான தூக்கமும், ஆரோக்கியமான உடற்பயிற்சியும், 3 லிட்டர் தண்ணீரும் இருந்தாலே போதும்.. தொள தொள தொப்பை, கரைய துவங்கிவிடும்.
(இது பொதுவான தகவல்களை அடிப்படையாக கொண்டது. உங்கள் பிரச்சனைக்கு மருத்துவரை அணுகுவதே சிறந்தது. இந்த தகவலுக்கு "One India Tamil News" பொறுப்பேற்காது)
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு!












Click it and Unblock the Notifications