தொள தொளா தொந்தி.. தொங்கும் ஊளைச்சதையை விரட்ட இது ஒன்னே போதும்.. ஈஸியா கரைந்தோடிரும்.. ட்ரை பண்ணுங்க
சென்னை: வெறும் வயிற்றில் நாம் எடுத்து கொள்ளும் பானங்கள்தான், அன்றைய நாளுக்கான ஒட்டுமொத்த புத்துணர்ச்சியை தருவதுடன், உடல் எடை குறைவதிலும் முக்கிய பங்காற்றுகிறது. அவை என்னென்ன?
வீட்டிலுள்ள பொருட்களை வைத்தே, எளிமையான முறையில், இயற்கையான முறையில் உடல் எடையை குறைக்கலாம்.. இவைகளில் ஏதாவது ஒன்றை முறையாக பயன்படுத்தினாலே, பெரும்பலன் கிடைக்கும் என்கிறார்கள்.

வெறும் வயிற்றில் பானங்கள்: கால் டீஸ்பூன் வெந்தயம், கருஞ்சீரகம், 2 சிட்டிகை ஓமம் சேர்த்து கொதிக்க வைத்து 15 அல்லது 20 நாட்கள் குடித்தால், தொப்பை குறைய துவங்கும். ஆனால், கருஞ்சீரகம் உள்ளதால், இதை நீண்ட நாள் எடுக்கக்கூடாது. அல்லது வெந்தயத்தை இரவில் ஊறவைத்து காலையில் அந்த தண்ணீரை சூடாக்கி குடித்தாலும், தொப்பை குறைய துவங்கும்..
காலையில், சிறிய வெள்ளரிக்காயை துண்டுகளாக்கி, அதை சொம்பு நீரில் சேர்த்து, எலுமிச்சை சாறு, ஒரு கைப்பிடி புதினா இலை, 2 ஸ்பூன் இஞ்சித்துருவல் சேர்த்து, 2 மணி நேரம் ஊறவைத்து, அந்த தண்ணீரை மட்டும் குடித்தாலும் பலன் கிடைக்கும்.
வெந்தய டீ: வெந்தய டீ குடிக்கலாம்.. ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி, ஒரு டீஸ்பூன் வெந்தய விதைகள், ஒரு சிறிய துண்டு இலவங்கப்பட்டை, சிறிய துண்டு இஞ்சி போட்டு 5 நிமிடங்கள் கொதிக்கவிட்டு, வடிகட்டி குடிக்கலாம். அல்லது சீரகத்தில் டீ போட்டு குடிக்கலாம்.. சீரகம் வயிற்றை குளிர்வித்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.
பொட்டுக்கடலை சர்பத் குடிக்கலாம். அதாவது, பொட்டுக்கடலை மாவு ஒரு ஸ்பூன், ஒரு சிட்டிகை உப்பு + சீரகப்பொடி 1 ஸ்பூன் + துருவிய இஞ்சி கால் ஸ்பூன், ஒரு ஸ்பூன் லெமன் ஜூஸ்.. இதெல்லாம் சேர்ந்து ஜூஸ் போல போட்டு குடித்தாலே பலன் கிடைக்கும்.
மஞ்சள் டீ: அதேபோல, தொப்பையை கரைக்க மஞ்சள் டீயை உபயோகிக்கலாம்.. கிரீன் டீ, பிளாக் டீயைவிட, மருத்துவ குணம் நிறைந்த மஞ்சளை சேர்த்து இந்த டீ தயாரிக்கிறார்கள்.. .ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து கொண்டு, மஞ்சள், இஞ்சி, கருமிளகு சேர்த்து கொதிக்க வேண்டும்.. பாதியாக சுண்டும் வரை கொதிக்க வைத்து, பிறகு தேன் கலந்து குடிக்கலாம்.
அல்லது மதிய நேரத்தில், மோர் + புதினா, இஞ்சி, வெள்ளரிக்காய் என அனைத்தையும் அரைத்து குடிக்கலாம். அல்லது காபி, டீ குடிக்கும்போது, அதனுடன் சிறிது பட்டை தூளை சேர்த்து குடிப்பது உடல் எடை குறைய உதவும்.
முருங்கையிலை சூப்: வேப்பம் பூக்களை ஒரு கைப்பிடி எடுத்து, நீரில் ஊற வைத்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தாலும் உடல் பருமன் குறைய வாய்ப்புள்ளது.. முருங்கைக்கீரையை சூப் வைத்து குடித்து வந்தாலும் பலன் கிடைக்கும். வெறும் வயிற்றில் 2 டம்ளர் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை அதிகப்படுத்தி கொள்வதுதானாம்.. காரணம், அன்றைய நாள் முழுக்க ஆரோக்கியமாக உடலை வைத்திருக்க உதவுவதே இந்த அடிப்படை தண்ணீர்தானாம்..
தினமும் 2 கப் பிளாக் காபி குடித்தாலே உடல் எடை குறைகிறதாம்.. இப்படியான தண்ணீர்கள் நம் உடலில் நிறைய இருந்தாலே தேவையற்ற கொழுப்புகள் கரைய துவங்கும் என்கிறார்கள்.
மதிய நேரத்தில், மோர் + புதினா, இஞ்சி, வெள்ளரிக்காய் என அனைத்தையும் அரைத்து குடிக்கலாம். அல்லது காபி, டீ குடிக்கும்போது, அதனுடன் சிறிது பட்டை தூளை சேர்த்து குடிப்பது உடல் எடை குறைய உதவும். கிரீன் டீயை தவறாமல் குடிக்க வேண்டும்.
பெரும்பலன்: இதைத்தவிர, மொத்தத்தில், சீரான உணவும், முறையான தூக்கமும், ஆரோக்கியமான உடற்பயிற்சியும், 3 லிட்டர் தண்ணீரும் இருந்தாலே போதும்.. தொள தொள தொப்பை, கரைய துவங்கிவிடும். ஆக, வீட்டிலுள்ள பொருட்களை சரியாக நாம் பயன்படுத்தினாலே பெரும் பலனை பெற்றுவிடலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.
(இது பொதுவான தகவல்களை அடிப்படையாக கொண்டது. உங்கள் பிரச்சனைக்கு மருத்துவரை அணுகுவதே சிறந்தது. இந்த தகவலுக்கு "One India Tamil News" பொறுப்பேற்காது)
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications