ஒல்லிக்குச்சியா ஆகணுமா.. அப்ப இந்த 2 மேட்டரையும் ட்ரை பண்ணி பாருங்க.. சர்ரென குறைஞ்சிடுதாமே வெயிட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: உடல் எடை குறைய வேண்டுமானால், என்னென்ன சாப்பிட வேண்டும், என்னென்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று பரவலாக தெரியும். ஆனாலும், உடல் எடை எதிர்பார்த்த அளவுக்கு சிலருக்கு குறைவதில்லை. அதுபோன்றவர்கள், இந்த 2 ஜூஸையும் முயற்சித்து பார்க்கலாம்.

உடல் எடை குறைய என்ன செய்யலாம் என்பதைவிட, என்னென்ன செய்யக்கூடாது என்பதை அறிந்திருப்பது அவசியம்.. சின்ன சின்ன தவறுகளிலும், பெரிய பெரிய விளைவுகள் வந்துவிடக்கூடும்.. இதோ சில டிப்ஸ்கள்:

உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால், காலை உணவை தவிர்க்கக்கூடாது.. காலை உணவுதான் நம்முடைய அன்றைய நாளின் முதல் உணவு.. நாளெல்லாம் உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுவது இந்த காலை உணவுதான்.. காலையில் சோம்பு தண்ணீரை குடித்துவிட்டு, முட்டை, பழ சாலட், ஸ்மூதி, காய்கறி சாலட் போன்றவற்றை சாப்பிடலாம்.

 Health Tips for Weight Loss and do you know Cinnamon Juice is the Fantastic Health Juice for weight loss

புரதச்சத்து : புரோட்டீன் உணவு அதிகமாக இருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும்.. குறிப்பாக, கோழியின் மார்பகம், சிக்கன், மீன்களில் நிறைய புரோட்டீன்கள் உள்ளன. ABC ஜூஸ் எனப்படும் ஆப்பிள், பீட்ரூட், காரட் வகை ஜூஸ்கள் + உணவுகளை சாப்பிடலாம்.. அடிக்கடி எலுமிச்சை சாறு குடிக்க வேண்டும்.. இதெல்லாம் அடிப்படை விஷயங்கள் என்றாலும், சில பானங்களை நாம் தெரிந்தே தவிர்த்துவிடுகிறோம்.

குறிப்பாக, பிளாக் டீயை சொல்லலாம்.. கிட்டத்தட்ட க்ரீன் டீ போலவே, இதிலும் நிறைய ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸ்கள் உள்ளன.. உடல் பருமனை குறைக்க உதவும், பாலிஃபினால்ஸ் என்ற பொருள் இந்த பிளாக் டீயில் நிரம்பி உள்ளது.. அதனால், கொழுப்பு மற்றும் கலோரிகளை கரைப்பதில் இந்த ப்ளாக் டீ முக்கிய பங்காற்றுகிறது..

உடல் எடை: தொடர்ந்து 3 மாதங்களுக்கு தினசரி 3 கப் அளவு பிளாக் டீ குடித்து வந்தால் உடல் எடை குறிப்பிடத்தக்க அளவில் குறையும் என்கின்றன ஆய்வுகள். ஆப்பிள் சைடர் வினிகரும் பயன்படத்தலாம்.. தினமும், 1 அல்லது 2 டீ ஸ்பூன் எடுத்துக்கொண்டால் உடல் எடை குறையும்... வினிகரை தண்ணீரில் கரைத்து குடிக்கலாம். ஒருவேளை அசிடிட்டி பிரச்சினை இருந்தால், இதை எடுத்து கொள்ள வேண்டாம்.

அதேபோல, இளநீரை நாம் வெயில் காலத்தில், உடல்சூட்டை நீக்கும் பானமாகவே ஒதுக்கிவிடுகிறோம்.. இளநீரை தினமும் குடிக்கலாம்.. இளநீர் தித்திப்பாக இருககிறது என்றாலும, அதிலுள்ள கலோரிகள் மிகவும் குறைவுதான்.. மேலும் இதிலுள்ள வைட்டமின் C, பொட்டாசியம், சோடியம், மெக்னீசியம் போன்ற சத்துக்கள், உடலுக்கு தேவையான ஆற்றலையும், எனர்ஜியையும் தரக்கூடியது.

மூலிகை தண்ணீர்: இவைகளுடன 2 ஜூஸ்களையும் சேர்த்து கொள்ளலாம்.. வெறும் தண்ணீர் குடித்தாலே உடல் எடை குறையும் என்பார்கள்.. அத்துடன் மூலிகை தண்ணீர் குடித்தால் இன்னும் பலன் கிடைக்கும்.

லவங்கப்பட்டை + வெந்தயம் + சோம்பு + கல் உப்பு + துண்டு இஞ்சி + இவைகளை எல்லாம் தனித்தனி பொடியாக்கி, அவைகளில் இருந்து தலா 2 ஸ்பூன் எடுத்து கொள்ள வேண்டும். எலுமிச்சம் சாறுடன் இந்த பவுடர்களை எல்லாம் ஒன்றாக கலக்க வேண்டும். பிறகு, அதிலிருந்து அரை டீஸ்பூன் மட்டும் எடுத்து, வெதுவெதுப்பான நீரில், 3 வேளையும் உணவுக்கு முன் சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும்.

இதில், லவங்கப்பட்டை வெந்தயம், சோம்பு இவைகள் முழுக்க முழுக்க மருத்துவ குணம் வாய்ந்தவை.. எடையையும், கொழுப்பையும் குறைக்கக்கூடியவை. தண்ணீர் குடிக்கும்போதெல்லாம், இந்த மூன்றில் ஏதாவது ஒன்றை கலந்து ஊற வைத்து குடித்தாலும் பலன் கிடைக்கும்.

அதேபோல வெள்ளை பூசணி ஜூஸ் பயன்படுத்தலாம்.. இதில், நார்ச்சத்து அதிகமாக இருக்கிறது. அதனால், உடல் பயிற்சி செய்துவிட்டு, இந்த பூசணிக்காயை சாப்பிடலாம்.

வெள்ளைப்பூசணி: வெள்ளை பூசணியில் உள்ள தோல்கள், விதைகளை நீக்கிவிட்டு, அதில் உள்ள சதைகளை மட்டும் சின்ன சின்ன துண்டுகளாக்கி கொள்ள வேண்டும்.. ஒரு கிண்ணம் அளவுக்கு இப்படி எடுத்துக்கொண்டு, மிக்ஸியில் அரைக்க வேண்டும்.. ஒரு டம்ளர் அளவுக்கு கிடைக்கும் ஜூஸை அப்படியே குடித்துவிட வேண்டும்.. வெறும் வயிற்றில் இப்படி குடித்துவந்தால், உடலில் உள்ள ஊளை சதைகள் காணாமல் போகும்..

சிலர் இந்த வெள்ளை பூசணி ஜூஸை, ஒருவேளை உணவாகவே சேர்த்து கொள்வார்கள்.. பூசணியை விதை நீக்க துண்டுகளாக்கி, அத்துடன் தோல் சீவப்பட்ட கேரட்டை துண்டுகளாக நறுக்கி போட்டு, ஒரு முழு ஆப்பிள் பழத்தையும் தோல் நீக்கி துண்டுகளாக நறுக்கி போட்டு, சிறிது இஞ்சி, சிறிது லவங்கப்பட்டையையும் சேர்த்து கொள்ளவும், இப்போது அனைத்தையும் மிக்ஸியில் சேர்த்து அரைத்து குடித்தால் பூசணிக்காய் ஜூஸ் ரெடி.

கொழுப்புகள்: சுருக்கமாக சொல்லப்போனால், உடல் எடை குறைய நினைப்பவர்கள், 80 சதவீதம், முழு தானியங்கள், புரோட்டீன்கள், நல்ல கொழுப்புகள், பால் பொருட்கள், பழங்கள் பச்சை காய்கறிகளையும், 20 சதவீதம் நீங்கள் விரும்பும் உணவுகளையும் சாப்பிடலாம்.. ஆனால், டயட்டீஷியன் உதவியுடன் உடல்எடையை குறைப்பதற்கான முயற்சியில் இறங்குவது, இன்னும் ஆரோக்கியமானது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+