"சிவப்பு" மிளகாய் + "பச்சை" மிளகாய்.. நீங்க உடல் எடையை குறைக்கணுமா.. அப்ப இதை அவசியம் படிங்க.. ஹெல்த்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பச்சை மிளகாய் நல்லதா? கெட்டதா? அதிலும் சிவப்பு மிளகாய் + பச்சை மிளகாய் இவைகளில் எது நல்லது என்ற குழப்பங்கள் இருந்தபடியே உள்ளன..

இதோ அதுகுறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.. அதிலும் உடல் எடை குறைப்போருக்கு, பச்சை மிளகாய் அருமருந்து என்பது தெரியவந்துள்ளது, மகிழ்ச்சியை கூட்டி வருகிறது

Health tips: how green chilli can help your weight loss and what are the benefits

ஊட்டச்சத்துக்கள்: இப்போதைக்கு நடைமுறையில், பச்சை மற்றும் சிவப்பு நிற மிளகாய்கள் மார்க்கெட்களில் எப்போதுமே கிடைக்ககூடிய உணவுபொருளாகும். இவற்றில் வைட்டமின் ஏ, பி 6, சி, இரும்பு, தாமிரம், பொட்டாசியம், புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன...

முக்கியமாக, பீட்டா கரோட்டின், கிரிப்டோக்சாண்டின், லுடீன்சாந்தின் போன்றவை இவைகளில் நிறைந்து உள்ளன.. காரமான உணவு வேண்டும் என்பவர்கள், இந்த மிளகாயை சமையலுக்கு பயன்படுத்துவார்கள்.. ஆனாலும், பல்வேறு உடல்நல பிரச்சினைகளுக்கு இந்த பச்சை மிளகாய் தீர்வாக இருந்து வருகிறது என்கிறார்கள்..

பச்சை மிளகாய்: பச்சை மிளகாய், செரிமானத்தை மேம்படுத்தும் தன்மை கொண்டதாகும்.. நார்ச்சத்தும் அதில் அதிகமாக உள்ளது.. அதனால், செரிமான செயல்முறை எளிதாக நடைபெற இது உதவுகிறது.. எளிதான செரிமானத்தினால், குடலும் ஆரோக்கியமாக இருக்கிறது.. பச்சை மிளகாய் எடையை குறைக்கவும் உதவுகிறது.. காரணம், இதில் கலோரிகள் எதுவும் இல்லை.. எனவே, வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் துணை புரிகிறது..

இதிலுள்ள வைட்டமின் ஏ, கண்களுக்கும், சருமத்திற்கும் பேருதவி புரிகின்றன.. பீட்டா கரோட்டின் இந்த பச்சை மிளகாயில் அதிகம் உள்ளது..

இது இதயம் நன்றாக செயல்படவும் துணை புரிகிறது.. பச்சை மிளகாயில் வைட்டமின் சி - அதிகம் நிரம்பி உள்ளதால், மிகச்சிறந்த ஆக்ஸிஜனேற்றியாக திகழ்கிறது. இதிலுள்ள ஆன்டி ஆக்சிடெண்ட் நுரையீரல் புற்றுநோய், வாய்வழி புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய் ஏற்படும் அபாயங்களை குறைக்க உதவுகிறது.. அதிலும், நுரையீரல் புற்றுநோய்க்கு எதிராக இந்த பச்சை மிளகாய் நிறையவே செயல்படுகிறதாம்.
அதேபோல, மெட்டபாலிசம் கொழுப்புச்சத்தை வேகமாகக் குறைக்க உதவுகிறது. பச்சைமிளகாய் போன்ற காரமான உணவுகளைச் சாப்பிட்டால் 3 மணி நேரம் வரைக்கும் மெட்டபாலிசம் அளவு அதிகமாக இருந்து உங்கள் கொழுப்புச்சத்தைக் குறைக்கும் வேலையைச் செய்து கொண்டிருக்கிறதாம்.. பச்சை மிளகாய் போன்ற காரம் அதிகம் சேர்த்து சாப்பிடும்பொழுது நமக்கு சாப்பாடு முழு திருப்தியையும் தருகிறது.

குடை மிளகாய்: அமெரிக்காவை சேர்ந்த ஜர்னல் கிளினிக்கல் நியூட்ரிஷன், கடந்த 2008ல் ஒரு கட்டுரையில் கூறுகிறார், "பச்சை மிளகாய் அல்லது குடைமிளகாயில் உள்ள சில காரணிகள் உடல் எடையைக் குறிப்பாக வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்புச் சத்தை குறைக்கப் பெரிதும் உதவி செய்கிறது" என்கிறார்.. அந்த அளவுக்கு வெயிட் லாஸ்க்கு அருமருந்தாக பச்சை மிளகாய் உள்ளது.

ஆனால், சிவப்பு மிளகாயை பொறுத்தவரை, இதைதான் பெரும்பாலும் சமையலுக்கு பயன்படுத்தி வருகிறோம்.. இனால் உணவின் சுவை + நிறம் கூடுகிறது.. சிவப்பு மிளகாயில் உள்ள கேப்சைசின், உடலில் உள்ள கொழுப்பை எரிக்க உதவுகிறது.. மகிழ்ச்சியான ஹார்மோன்கள் உருவாக உதவுகிறது.. நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்க உதவுகிறது. இதிலுள்ள பொட்டாசியம், ரத்த அழுத்த அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. ரத்த சர்க்கரையை குறைக்கவும் உதவுகிறது.. இதய நோய்களின் அபாயத்தையும் குறைக்கிறது.

உலர் மிளகாய்: இப்படி 2 மிளகாய்களுமே ஆரோக்கியத்துக்கு துணைபுரிகின்றன என்றாலும், அவற்றை முறையாக உட்கொள்ள வேண்டும்... சிவப்பு மிளகாயை தூளாக பயன்படுத்துவதை விட, நேரடியாக உலர்ந்த மிளகாயாக பயன்படுத்துவது நல்லது என்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+