Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தூதுவளை.. துயரத்தை துரத்தும் தூதுவன்.. ஆண்களின் அருமருந்து.. இப்படி சாப்பிட்டால், ஆச்சரியம் தெரியும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆண்மை சக்தியை அதிகரித்து, உடலில் வலு பெற வேண்டுமானால், அதற்கு உறுதுணையாக இருப்பது தூதுவளை என்பதை மறுக்க முடியாது.

தூதுவேளை அல்லது சிங்கவல்லி அல்லது அளருகம் அல்லது தூதுணை இப்படி பல பெயர்களில் அழைக்கப்படுவதுதான் இந்த தூதுவளை.. முழுக்க முழுக்க இது ஒரு மூலிகை செடியாகும். மருத்துவமும், மகத்துவமும் சேர்ந்து இதற்குள் ஒளிந்து கொண்டிருக்கின்றன என்றே சொல்லலாம்.

தூதுவளை செடிகள்: கிட்டத்தட்ட ரோஜா செடி குணம்தான் இதற்கும்.. இந்த செடியில் முட்கள் நிறைந்திருக்கும்.. ஆனாலும் பூரண சுகத்தை தரும் நம்முடைய நண்பன் ஆவான்.. பக்கத்தில் வேலிகள் இருந்தாலும்சரி, மற்ற செடிகள் இருந்தாலும், கடகடவென பற்றிக்கொண்டு, வளர்ந்துவிடும் தன்மை கொண்டது இந்த தூதுவளை.

Health Uses of Thuthuvalai Leaf and What are the Medicinal benefits in Solanum Trilobatum

தூதுவளை செடியின் இலை, பூ, காய், வேர் எல்லாமே பயன்தரக்கத்தக்கது. இதன் மருத்துவ குணங்களை பார்த்தால், இருமல், சளியை விரட்டியடிக்கக்கூடியது இந்த தூதுவளை.. காது நோய்களுக்காக சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ள மூலிகைகளுள் தூதுவளையும் முக்கியமான ஒன்று..

இருமல், சளி: தண்ணீரில் தூதுவளை இலைகளை போட்டுக் காய்ச்சி குடித்துவந்தால், நம்மை சளி, காய்ச்சல் என்றுமே அண்டாது. குறிப்பாக மழைக்காலங்களிலும், குளிர்காலங்களிலும் இந்த செடியின் தேவை நிச்சயம் இருக்கும்.. இந்த இலையின் சாற்றை எடுத்து, அதனுடன் சிறிது மிளகுத்தூள் சேர்த்து குடித்தால், சளி, இருமல் குணமாகும். தூதுவளை இலைகளை தண்ணீரில் சேர்த்து குடித்தால், பசி உணர்வு அதிகமாகும்.. உடலின் கெட்ட கழிவுகளும் நீங்கும்...

இது ஒரு சிறந்த விஷமுறிவு மூலிகையாகும்.. தேள், பூரான், தேனி, வண்டுகள், பூச்சிகள் இப்படி விஷபூச்சிகள் கடித்துவிட்டால், இந்த தூதுவளை அவர்களின் உயிரை காப்பாற்றும்.. அவ்வளவு ஏன், பாம்பு கடித்தால்கூட, தூதுவளையின் பழம் அருமருந்தாக நின்று காக்கும்.. தூதுவளை இலை பொடியை தண்ணீரில் கலந்து சாப்பிட்டால், பாதிக்கப்பட்ட நபருக்கு விஷ முறிவு ஏற்படும்.

மலைவாசிகள்: அதனால்தான் பாம்பு கடித்துவிட்டால் நஞ்சை முறிக்கும் வேறு சில மூலிகைகளோடு சேர்த்து, தூதுவளை பழங்களையும் உடனடியாக சாப்பிடுவார்களாம் மலைவாசிகள்.

அதைவிட முக்கியமாக நரம்புத் தளர்ச்சி பாதிப்புகளை இந்த தூதுவளை போக்கக்கூடியது.. குறிப்பாக, ஆண்மை குறைபாடுகளை நீக்கி நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளையும் இந்த தூதுவளை நீக்குகிறது..

அதேபோல, நுரையீரல் பிரச்சனை, அல்லது தொற்று இருந்தாலும் இந்த தூதுவளை பயன்படுத்தினால் நிவாரணம் கிடைக்கும்.. முக்கியமாக ஆஸ்துமா நோயாளிகளுக்கு சிறந்த மருந்து இந்த இலையாகும்.. தூதுவளை இலையில் சாறு பிழிந்து தேன் சேர்த்து குடித்தால் ஆஸ்துமா நோயாளிகளுக்கு நல்லதாம்.

கண் எரிச்சல்: கண் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு தூதுவளை சிறந்த தீர்வாகும்... கண் எரிச்சல் நீங்குவதுடன், கண் வலி இருந்தாலும் சரியாகிவிடும்.. கண் பார்வை குறைபாடுகளும் காணாமல் போகும். கிருமிகள் தாக்கத்தினல், நம் உடலில் எதிர்ப்பு சக்தி குறைபாடு ஏற்படும்.. இதற்கு தூதுவளை உணவில் சேர்த்து வந்தால், உடல் இயற்கையாகவே எதிர்ப்பு சக்தியை பெற்றுவிடும்.

தூதுவளை பூக்கள், மொட்டுக்கள் போன்றவற்றை நெய்யில் வதக்கி, பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைத்து ஆறவைத்து காய்ச்சிய பால் சேர்த்து சாப்பிடலாம்.. கருப்பை புற்றுநோய் முதல் எந்த புற்றுநோயும் வராமல் தடுக்கலாம்.

சர்க்கரை நோய்: இந்த தூதுவளை சர்க்கரை நோய்க்கு சிறந்த மருந்து பொருளாக பயன்படுகிறது.. இதனை சாப்பிட்டால், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுக்குள் வர ஆரம்பிக்கும்.. தூதுவளையை தினசரி சில இலைகளை மென்று தின்றாலே ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறையுமாம். சர்க்கரை நோயாளிகள், மருத்துவரின் அனுமதியுடன் இந்த இலையைப் பொடி செய்து தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்.

இந்த இலைகளை சுத்தம் செய்து காயவைத்து, பொடியாக அரைத்து கொண்டு, கலந்து சாப்பிட்டு வர ரத்த சிவப்பு அணுக்கள் விருத்தி அடைந்து, ரத்த சோகை நோய் தீர்ந்துவிடும். நினைவாற்றலை அதிகரிக்கிறது. உடல் வலி, தலை பாரம் வந்தால், இந்த பொடியை அரை டம்ளர் வெந்நீரில் கலந்து குடித்தால் போதும்.

எப்படி சாப்பிடலாம்: தூதுவளையில் கால்சியம் சத்து அதிகளவு இருப்பதால், குழந்தைகள் முதல் பெரியவர்களின் வரை இதை சாப்பிடலாம்.. இந்த தலை சற்று கசப்பு தன்மை கொண்டதாக இருக்கும். அதனால், துவையல் போல பலர் செய்து சாப்பிடுவார்கள்.. இலையுடன் மிளகு, சின்னவெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கி துவையலாக செய்வார்கள். தூதுவளை பொடியை மோரில் கலந்தும் சாப்பிடலாம். இந்த இலையை அரைத்து அடை போல் செய்தும் சாப்பிடலாம். தூதுவளை இலையை வைத்து ரசம் செய்வார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+