"குபேர மூலை".. இதை வீட்டில் அவசியம் வைங்க.. தே.எண்ணெய் + பச்சை கற்பூரம்.. வாவ்.. பாசிட்டிவ் நலன்
சென்னை: நம் வீட்டில் பெரியவர்கள் எப்போதுமே வைத்திருக்கக்கூடிய, வைத்திருக்க வேண்டிய ஒரு பொருள்தான் கற்பூரம்.. அதிலும் இந்த பச்சை கற்பூரம் அபார சக்தி உடையது.
பொதுவாக, இந்துக்கள் வழிபாடுகளில் கற்பூரங்கள் பிரதான இடத்தை வகிக்கும்.. அதேபோல, வீட்டில் துர்சக்தி இருந்தால், பச்சை கற்பூரத்தை ஏற்றி வைப்பார்கள்.. காரணம், இந்த வாசனையினாலும், மகிமையினாலும் வீட்டில் இருக்க கூடிய கெட்ட சக்திகள் அல்லது கண் திருஷ்டிகள் அல்லது நெகட்டிவ் வைபரேஷன் ஏதாவது இருந்தால், வீட்டை விட்டு போய்விடும் என்பார்கள்.

கண்திருஷ்டி: அதுமட்டுமல்ல, பச்சை கற்பூரத்திற்கு பணத்தை ஈர்க்கும் தன்மை அதிகமாக உள்ளதாகவும் நம்பப்படுகிறது. அதனால், பச்சை கற்பூரத்தை ஒரு மஞ்சள் துணியில் முடிச்சு போல கட்டி, குபேர மூலையில் வைத்து தூபம் காண்பித்து வழிபடுவார்கள்.. இதனால் மன நிம்மதி கிடைப்பதுடன், நேர்மறையான செயல்பாடுகள் அதிகம் நடக்க வாய்ப்புள்ளதாகவும் சொல்பார்கள்.
சிலர் கைப்பைகளில் அல்லது பீரோக்களில் அல்லது பணம் புழங்கக்கூடிய இடங்களில் நான்கைந்து பச்சை கற்பூரத்தை ஒரு டப்பாவில் போட்டு வைப்பார்கள்.
குழந்தைகள்: இதுஒருபக்கம் இருந்தாலும், மருத்துவ குணங்கள் இந்த பச்சை கற்பூரத்தில் நிறைந்து காணப்படுகிறது.. மிகச்சிறந்த கிருமி நீக்கி இந்த பச்சை கற்பூரம்.. அதனால்தான், குழந்தைகளுக்கு சளிப்பிடித்தால், தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து இந்த பச்சை கற்பூரத்தை நெஞ்சு பகுதியில் லேசாக தேய்த்து விடுவார்கள்.. இதனால், சளி தொல்லை குணமாக்கும்.. அத்துடன், சுவாச கோளாறுகள் இருந்தாலும் அதுவும் சரியாகும்..
அதேபோல, பாதவெடிப்புகள் இருப்போருக்கு அருமருந்தாக இந்த பச்சை கற்பூரம் பயன்படுகிறது.. தேங்காய் எண்ணெயில் காய்ச்சி, பாதத்தை லேசாக மசாஜ் போல செய்து வந்தால், நிவாரணம் கிடைக்கும்..
இனிப்புகள்: அதுமட்டுமல்லாமல், சில உணவுகளில் பச்சை கற்பூரத்தை பயன்படுத்துவார்கள்.. காரணம், அந்த காலத்தில் அடிக்கடி இனிப்புகளை செய்ய மாட்டார்கள்.. எப்போதாவது பண்டிகை நேரங்களில் செய்து, சில காலத்துக்கு எடுத்து வைத்து கொள்வார்கள்..
ஆனால், இனிப்பு போன்றவை விரைவில் கெட்டுப்போய்விடக்கூடும் தன்மை உடையவை.. அதனால்தான், கெட்டுப்போக கூடிய உணவுகள் செய்யும்போது பச்சை கற்பூரத்தையும் சேர்த்து வந்தார்கள். இப்படி உணவில் சேர்ப்பதால், உணவுப்பொருளில் கிருமிகள் ஏதாவது இருந்தாலும் அதை அழித்துவிடும்.. சுவையும் கூடும். நீண்ட காலம் பலகாரங்கள் கெடாமல் இருக்கும்.
அதிலும் பூந்தி செய்யும்போது, கண்டிப்பாக பச்சை கற்பூரம் சேர்ப்பார்கள்.. பாயாசம் செய்தாலும் பச்சை கற்பூரம் கட்டாயம் சேர்ப்பார்கள்..
உணவுப்பொருட்கள்: ஆனால், எந்தவகையாக கற்பூரமாக இருந்தாலும், அதை குழந்தைகளுக்கு எட்டாத வகையில் தூரமாக வைக்க வேண்டும்.. உணவுப்பொருள் என்று நினைத்து சாப்பிட்டாலோ அல்லது தெரியாமல் சாப்பிட்டாலே பேராபத்துதான்.. கோமா நிலைமையில் கொண்டுபோய் விட்டுவிடுமாம்.. அதேபோல வீட்டில் பெரியவர்கள் உட்கொள்ளும் மாத்திரைகளுடன் இந்த கற்பூரத்தையும் சேர்த்து வைக்க கூடாது. தெரியாமல் எடுத்து சாப்பிட்டுவிட வாய்ப்பு உள்ளது..!!
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications