வீகன் மட்டுமே சாப்பிட்டா இதுதான் கதி.. உடல் மெலிந்து பலியான பெண்.. பின்னணியில் அந்த ஒரு வைட்டமின்?
சென்னை: வீகன் உணவு செயற்பாட்டாளர் ஜன்னா டி ஆர்ட் என்ற பெண் உடல் மெலிந்து, புரத குறைபாடு, பல நோய் பாதிப்புகள் காரணமாக பலியாகி உள்ளார். அவரின் மரணம் வீகன் உணவு விரும்பிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உலகம் முழுக்க வெஜிட்டேரியன் உணவு உண்ணும் மக்கள் அசைவ உணவு உண்பவர்களை கொஞ்சம் ஏளனமாக பார்ப்பது உண்டு. எங்கள் உணவுதான் தூய்மையானது, ஆரோக்கியமானது என்று கூறுவது உண்டு. ஆனால் அசைவத்தில் இருக்கும் பல சத்துக்கள், புரதங்களை சைவ உணவுகள் கொடுக்க முடியாது என்பதே காலம் காலமாக மறுத்து ஆராய்ச்சிகள் சொல்லி வருகின்றன.

சைவமே போதிய சத்துக்களை கொடுக்க முடியாத போதுதான் கூடுதலான வீகன் என்ற உணவு பழக்கம் கடந்த சில வருடங்களாக உலகம் முழுக்க பரவி வருகிறது. வீகன் என்றால் .. விலங்கில் இருந்து வரக்கூடிய எதையும் உட்கொள்ள மாட்டார்கள். அதாவது மாட்டுப்பால், ஆட்டுப்பால், பால் பொருட்கள், முட்டை, இறைச்சி, நெய் என்று எதையும் வீகன் உணவு வகையினர் உட்கொள்ள மாட்டார்கள்.
இந்த வீகன் உணவு முறை கடந்த சில வருடங்களாக உலகம் முழுக்க தீவிரமாக பரவி வருகிறது. இந்த நிலையில்தான் வீகன் உணவு செயற்பாட்டாளர் ஜன்னா டி ஆர்ட் என்ற பெண் நேற்று முதல்நாள் பலியானார். வாழ வேண்டிய வயதில்.. 39 வயதில் அந்த பெண் பலியாகி உள்ளார். உடல் மெலிந்து, புரத் குறைபாடு, பல நோய் பாதிப்புகள் காரணமாக பலியாகி உள்ளார். அவரின் மரணம் வீகன் உணவு விரும்பிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஜன்னா டி ஆர்ட் 6 வருடங்களாக தீவிரமாக இந்த வீகன் உணவு வழக்கத்தை கடைப்பிடித்து வந்துள்ளார். தீவிர வீகன் டயட் என்றால் மேலே குறிப்பிட்ட விலங்கு தொடர்பான எந்த பொருளையும் உட்கொள்ள மாட்டார். அதோடு இவர் கூடுதலாக தண்ணீரும் குடிக்காமல் இருந்துள்ளார். சுமார் 6 வருடம் இவர் தண்ணீர் குடிக்கவில்லை. காய்கறிகள், பழங்களை மட்டுமே தின்று உயிர்வாழ்ந்து வந்துள்ளார்.
இதனால் ஜன்னா டி ஆர்ட்க்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு உள்ளது. அடிக்கடி கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டு உள்ளார். உடல் மெலிந்து 25 கிலோ வரை சென்றுள்ளார். தன்னை போலவே பலரும் வீகன் உணவு முறைகளை பின்பற்ற வேண்டும் என்று கடுமையான பிரச்சாரங்களை செய்து வந்துள்ளார். அதோடு தான் சாப்பிடும் உணவுகளின் ரெசிபிக்களை பகிர்ந்து இதையும் நீங்கள் சாப்பிடுங்கள் என்று பலருக்கு ஊக்கம் அளித்துள்ளார்.
நீ சாக போடா.. என்னை ஏன் துணைக்கு அழைக்கிற என்று சொல்லும் அளவிற்கு இவர் பலரை தனது வார்த்தைகள் மூலம் இன்ப்ளூயன்ஸ் செய்துள்ளார். இந்த நிலையில்தான் ஜன்னா டி ஆர்ட் காலரா போன்ற உடல்நலக்குறைபாடு காரணமாக பலியாகி உள்ளார். உடல் எடை மொத்தமாக குறைந்து, மெலிந்து போய், இவர் பலியாகி உள்ளார்.

அவர் புரதம், இரும்பு, கால்சியம் மற்றும் வைட்டமின் பி12 ஆகியவற்றின் கடுமையான குறைபாட்டால் தெளிவாக பாதிக்கப்பட்டிருந்தார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். முக்கியமாக அவரின் மரணத்திற்கு வைட்டமின் பி12 குறைபாடு ஒரு காரணம் என்கிறார்கள். வைட்டமின் பி12 குறைபாடு இருந்தால் பின் வரும் பிரச்சனைகள் ஏற்படும்.
சுவாச பிரச்சனை அல்லது மூச்சுத் திணறல்
தலைவலி
அஜீரணம்
பசியிழப்பு
படபடப்பு
பார்வையில் சிக்கல்கள்
பலவீனமாக அல்லது சோர்வாக உணர்வது.
வயிற்றுப்போக்கு
உடல் புண் அல்லது சிவப்பு நாக்கு, சில நேரங்களில் வாய் புண்கள்
நினைவு பாதிப்பு
நரம்பு பாதிப்பு ஏற்படும்.
இந்த வைட்டமின் பி12 என்பது சைவ உணவு எதிலும் இல்லை, அசைவ உணவில் மட்டுமே இருக்கும். அப்படி இருக்க முற்றிலுமாக வைட்டமின் பி12 குறைபாடு என்பது ஒருவரை கொல்லக்கூட வாய்ப்பு உள்ளது. வைட்டமின் பி12 குறைபாடு இவரின் மரணத்திற்கு முக்கிய காரணமாக இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications