Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"குழந்தையின்மை".. செயற்கை கருத்தரிப்பு எனும் "பணக்கார விளையாட்டு".. Dr. விஜய் சக்கரவர்த்தி வார்னிங்

Subscribe to Oneindia Tamil

சென்னை: முறையான உணவுப்பழக்கம், ஆரோக்கியமான வாழ்க்கை முறை இருந்தாலே போதும், செயற்கை கருத்தரிப்புகளை கட்டுப்படுத்தலாம் என்று அறிவுறுத்துகிறார் டாக்டர் விஜய் சக்கரவர்த்தி.. !!

பொதுவாக, கருத்தரித்தலுக்கு தடையாக எத்தனையோ காரணங்கள் சொல்லப்படுகின்றன.. முக்கியமாக, உடல் பருமன்.. இதனால், பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம் (Polycystic Ovarian Syndrome) என்ற சினைப்பை நீர்க்கட்டிப் பிரச்சனைக்கு ஆளாகிவிடுவதால், அது கர்ப்பம் தரிப்பது வரை தடையாகி விடுகிறது.

Health: whats the reason behind increasing of artificial fertility centres and how to Prevent infertility

குழந்தையின்மை: கருப்பை அகப்படல பாதிப்புகளாலும், கருப்பைக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு, பல பெண்களுக்கு குழந்தையின்மை பிரச்சனை ஏற்படுகிறது.. காலம் தாழ்த்தி திருமணம் முதல் கருப்பையில் தொற்று பாதிப்பு வரை, இன்னும் எத்தனையோ வித காரணங்களால் செயற்கை கருத்தரிப்புகள் பெருகி கொண்டிருக்கின்றன..

காணாமல்போன நம் பாரம்பரிய உணவுப்பழக்கம், மதுப்பழக்கம், சிகரெட், இதுபோன்ற காரணங்களும், ஆண்களுக்கு பெரும்பிரச்சனையாகி விடுகிறது. ஆக, கருத்தரிப்பதில் இரு தரப்பினருக்குமே சிக்கல்கள் இருக்கத்தான் செய்கின்றன.

செயற்கை கருத்தரிப்பு: மாறி வரும் நவீன உலகில், இத்ததகைய செயற்கைக் கருத்தரிப்புகளும் அதிகரித்து கொண்டே போகின்றன.. இயற்கையாக கருத்தரிப்பது குறைந்து கொண்ட போவதுடன், கல்யாணமான ஒரு வருஷத்துக்குள்ளேயே, எப்படியாவது கருத்தரித்து விட வேண்டும் என்ற அவசரமும்தான், இந்த செயற்கை கருத்தரிப்புகளுக்கு மூலகாரணமாகும். இதுபோன்றவர்களை குறிவைத்தே, செயற்கைக் கருத்தரிப்பு மையங்களும் புற்றீசல்போல பெருகி கொண்டிருப்பது கவலைக்குரியதாகும்.

கல்யாணமாகி பல வருடம் குழந்தையில்லாமல் இருக்கும் தம்பதிகளுக்கு, இந்த செயற்கை கருத்தரிப்பு என்பது ஒரு வரப்பிரசாதம்தான் என்பதை மறுக்க முடியாது..

Health: whats the reason behind increasing of artificial fertility centres and how to Prevent infertility

கல்யாணம்: அதற்காக, கல்யாணம் ஆன சில மாதங்களிலேயே குழந்தையை பெற்றுவிட வேண்டும் என்ற எண்ணமே, அவர்களுக்கு பிரச்சனையாகிவிடுகிறது.. இதனால் கருத்தரிப்பு மையங்கள் நல்ல காசு பார்க்கவும் துவங்கிவிட்டன. சில செயற்கைக் கருத்தரிப்பு மையங்களில் மோசடிகள் கூட நடந்திருக்கின்றன.. இதுபற்றின செய்திகளும் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதனால்தான், செயற்கை கருத்தரிப்பு மையங்களை, அரசு தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வெடிக்க துவங்கி உள்ளன..

இப்படிப்பட்ட சூழலில், பொது மருத்துவம் மற்றும் தீவிர சிகிச்சை நிபுணர்டாக்டர் விஜய் சக்கரவர்த்தி ஒரு ட்வீட்டினை பதிவு செய்துள்ளார்.. பொதுமக்களுக்கு ட்வீட்களை பதிவிட்டு, அவ்வப்போது விழிப்புணர்வை ஏற்படுத்தி கொண்டிருப்பவர் விஜய் சக்கரவர்த்தி.. நம்முடைய "ஒன் இந்தியா" சேனலுக்கும் இவர் நிறைய முறை பேட்டிகளை தந்திருக்கிறார். நிறைய தகவல்களையும் அப்போது நம்முடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

ட்வீட்கள்: இன்றைய தினம் இவர் பதிவிட்டுள்ள இந்த ட்வீட்டானது பலரது கவனங்களை திருப்பியுள்ளது.. அத்துடன் பலரையும் யோசிக்கவும் வைத்து வருகிறது.

"இளம்வயதிலேயே சர்க்கரை நோய், உடல்பருமன், உணவுப்பழக்கம், ஆரோக்கியமான வாழ்க்கை முறை, ரத்த அழுத்தம், மன அழுத்தம் போன்ற காரணங்களால்தான், செயற்கை கருத்தரிப்புகள் அதிகரித்து வருவதாகவும், இதனால், நிறைய இடங்களில் காசு எக்கச்சக்கமாக வேட்டையாடப்படுவதாகவும் டாக்டர் குற்றஞ்சாட்டுகிறார்.. நல்ல உணவுப்பழக்கம் தேவை.. மன மன அழுத்தமும், மன இறுக்கமும் இல்லாமல் இருக்க வேண்டும்.. நெருங்கிய உறவுகளையும் தத்தெடுத்து கொள்ளலாம் என்றும் தீர்வாக சொல்கிறார்.

முகத்திரை: அதுமட்டுமல்ல, குழந்தையின்மைன்னு பேசுகிற அக்கம் பக்கம் மக்களாகட்டும், சொந்தக்காரர்களாகட்டும், ஒருத்தருமே சிகிச்சைக்காக ஒரு ரூபாய் கூட கொடுக்காதவர்கள். அவர்களுக்கு பயந்துகொண்டு, ஹாஸ்பிடல்களுக்கு கடன்வாங்கி வாரி கொடுக்கிறார்களே என்றும், போலி நபர்களின் முகத்திரையையும் குத்திக்கிழித்து, விழிப்புணர்வை தந்துள்ளார் டாக்டர் விஜய் சக்கரவர்த்தி.

இதோ.. டாக்டர் பதிவிட்டுள்ள அந்த விரிவான ட்வீட்கள் இவைகள்தான்:

செயற்கை கருத்தறிப்பு எனும் பணக்கார விளையாட்டு: 34 வயது பெண் நோயாளி ஒருவருக்கு இரண்டு நாளாக தலைவலி-> migraine என தலைவலி மாத்திரை போட்டாங்க->கேட்கவில்லை->திடீர் fits, சுயநினைவு இல்லாமல் வந்தாங்க.. மூளைக்கு போகின்ற veins ரத்த அடைப்பு, ஒருவகையான stroke.. காரணம்: குழந்தையின்மையினால் IVF

Treatmentல் பல நாட்களாக கொடுக்கப்பட்ட hormonal tablets.. young age sugar,obesity, food habits,hypertension, stress போன்ற காரணங்களால் நாளுக்கு நாள் infertility(ஆண்&பெண்) அதிகமாகிட்டே போகுது..செயற்கை கருத்தரிப்பு,IVFங்குற பேர்ல நிறைய இடத்துல காசு எக்கச்சக்கமா வேட்டையாடப்படுகிறது!

Health: whats the reason behind increasing of artificial fertility centres and how to Prevent infertility

லட்சக்கணக்கில் செலவு செய்து IVF--> treatment--> failure--> depression--> again IVFலட்சம் என்று போகிறது..
Solution:

1.நல்ல உணவு பழக்கம் & healthy lifestyle சிறுவயதுமுதல் இருந்தால் infertility குறைக்கலாம்
2.avoid depression, stress
3.adoption செய்யலாம் but relatives

social pressureல பலர் பயந்துகொண்டு இன்னும் ஹாஸ்பிடல்களுக்கு கடன்வாங்கி வாரி கொடுக்கிறார்கள்..குழந்தையின்மைன்னு அக்கம் பக்கம் பேசுற மக்கள், relatives யாரும் treatmentக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்காதவர்கள் ..

*Prevent infertility
*treated once r twice
*if stil not successful,adopt

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+