வெறும் "இந்த" 4 பொருள் மட்டுமே போதும்.. டோட்டலா சேஞ்ச் ஆகிடும் உங்கள் தோற்றம்.. "கொலாஜன்" அற்புதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இளம் வயதிலேயே சிலருக்கு வயதான தோற்றம் வந்துவிடுகிறதே ஏன் தெரியுமா? இவைகளை வெகு சில பொருட்களை வைத்தே, ஆரோக்கியமான முறையில் சரி செய்வது எப்படி தெரியுமா?

முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மிகப்பெரிய கவலையை சிலருக்கு தந்துவிடும். இதை சரி செய்ய, உதவுவதுதான், கொலாஜன்.. நம்முடைய உடலில் இருக்கும் ஒரு வகையான புரதத்தின் பெயர்தான் கொலாஜன்..

ஒருவருடைய சருமம் பளபளப்பிற்கு காரணமே இந்த கொலாஜன்தான்.. சருமம் மட்டுமல்லாமல், எலும்பு மூட்டுகள், ரத்த குழாய்கள், செரிமானப் பாதையிலும் இந்த கொலாஜன் உற்பத்தியாகிறது.

Healthy Foods to Boost your Skins Collagen Production and what are the Health benefits of Collagen

சுருக்கங்கள்: உடலுக்கும், அழகுக்கும், இந்த கொலாஜன் மிகவும் தேவை.. உணவுமுறைகளிலேயே இந்த கொலாஜனை இயற்கையாகவே நாம் கொண்டுவந்துவிடலாம்..

சரியான முறையில், சரியான உணவை மேற்கொள்ளும்போது, கொலாஜன் உற்பத்தி அதிகரிக்கும். முக சுருக்கங்கள், முதுமைத்தோற்றம் போன்றவைகளை நீக்கவும், சருமத்தை மிருதுவாகவும், ஈரப்பதத்துடனும், இறுக்கமாகவும், கடின தன்மையை குறைக்கவும், ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் வைத்திருக்கவும் கொலாஜன் உதவுகிறது..

கண்கள்: இந்த கொலாஜன் உற்பத்தி, குறைந்துவிடும்போதுதான், கண்கள், கைகள், முகங்கள், நெற்றியை சுற்றி சுருக்கங்களும், சிறு சிறு கோடுகளும் தோன்றுகிறது.. இந்த சுருக்கங்கள்தான், முதுமை தோற்றத்தையும் தருகிறது. சுருக்கங்களை நீக்கினாலே, முதுமை தோற்றமும் நீங்கிவிடும். அதற்கு கொலாஜனை அதிகப்படுத்த வேண்டும்.

மாய்சரைஸர்கள், லோஷன்களில் கொலாஜன் கிடைக்கும்.. அதேபோல, மாத்திரைகளும் உண்டு.. ஆனால், இதையெல்லாம் டாக்டர்களின் அட்வைஸ் இல்லாமல் எடுத்து கொள்ள கூடாது.. கடைகளில் சில தவறான கொலாஜன் உற்பத்தி மாத்திரைகளும் கிடைப்பதால், அதையெல்லாம் வாங்கி உபயோகப்படுத்தாமல், முடிந்தவரை வீட்டிலேயே எந்தவித பக்க விளைவும் இல்லாமல், சத்தான உணவு மூலம், கொலாஜன் உற்பத்தியை நாம் அதிகப்படுத்தலாம்.

காய்கறிகள்: பச்சைக் காய்கறிகள், கீரைகள், ப்ரொக்கோலி, குடை மிளகாய், தக்காளி, பூண்டு இவைகள் அனைத்துமே நிறைய கொலாஜனை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை.

வைட்டமின் சி நிறைந்துள்ள சிட்ரஸ் பழங்கள், அதாவது, ஆரஞ்சு, லெமன், ஸ்ட்ராபெர்ரி, ப்ளுபெர்ரி, கொய்யா போன்ற பழ வகைகளை தொடர்ந்து சாப்பிட்டால், கொலாஜன் உற்பத்தி தூண்டப்படும். முட்டையின் வெள்ளைக்கரு, மீன் வகைகளிலும், கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கும். ஆட்டுக்கால் சூப்பில் நிறைய கொலாஜன் கிடைக்கும்..

அரிசி, மைதா, கார்போஹைட்ரேட் உணவுகள், இனிப்புகள், வெள்ளை சர்க்கரை இதையெல்லாம் சாப்பிடும்போது, நம் உடலில் உள்ள கொலாஜன் உற்பத்தி அளவு குறைந்துவிடுமாம்.. அதனால், முடிந்தவரை இந்த உணவுகளை தவிர்க்க சொல்கிறார்கள். அதேபோல, மாம்பழம், கிவி, அன்னாசி, கொய்யா போன்ற வெப்பமண்டல பழங்களில் வைட்டமின் சி- நிறைய உள்ளது.. கொலாஜனை அதிகரிப்பதில் இந்த பழங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

சோயா: உணவில் அதிக அளவு பூண்டு சேர்த்து கொண்டால், சருமத்துக்கு அவ்வளவும் நல்லதாகும்.. பூண்டில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் சருமத்தில் கொலாஜனை உருவாக்க உதவுகிறது.. மேலும் சுருக்கங்களை எதிர்த்து போராடவும் உதவுகிறது. அதேபோல, சோயாவிலும் கொலாஜன் அதிகம் உள்ளது. சருமத்தின் வயதாவதற்கு வழிவகுக்கும் என்சைம்களை இந்த சோயா தடுக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+