சுகர் ஏறாமல் இருக்க உதவும் சூப்பர் டீ.. சர்க்கரை நோயாளிக்கு உதவும் அற்புத மூலிகைகள்.. பயனுள்ள இலைகள்
சென்னை: சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க இயற்கையான எத்தனையோ மூலிகைகள் நமக்கு கைகொடுத்து உதவுகின்றன. பக்கவிளைவுகள் இல்லாத இந்த இலைகளை சமையலில் பயன்படுத்தி வருவதால், நீரிழிவு நோயின் ஆபத்துகளும் குறைய வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள்.
இன்று உலகையே மிகப்பெரிய அளவில் அச்சுறுத்தி வருவது நீரிழிவு நோயாகும்.. NCBI-ன் அறிக்கையின்படி, உலகின் மக்கள் தொகையில் 5 சதவீதம் பேர் இந்த நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்... உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிவரங்களின்படி, கிட்டத்தட்ட சுமார் 422 மில்லியன் மக்கள், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்களாம்.

சர்க்கரை நோய்: தற்சமயம் சுமார் 8 கோடி பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.. நம்முடைய இந்தியாவிலும் சர்க்கரை நோய் கலக்கத்தை தந்து வருகிறது. வரும் 2045ம் ஆண்டில், நம்முடைய நாட்டில் 13 கோடிக்கும் அதிகமானோர் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவார்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு அதிகரிப்பதே நீரிழிவு நோயாகும். இது கணையம் சம்பந்தப்பட்ட பிரச்சினை.. கணையத்தில் இன்சுலின் சுரப்பில் குறைபாடு ஏற்படுவது தான் நீரிழிவு நோய் என்கிறோம். இதனால், இதயம், சிறுநீரகம், கண், ரத்த நாளங்கள், எலும்புகள் போன்றவைகளுக்கு பாதிப்புகள் வருகின்றன. எனவே, சர்க்கரையை எப்போதுமே கட்டுக்குள் வைக்க, மருத்துவர்களின் முறையான ஆலோசனையை பெற்று வர வேண்டும்.
மூலிகைகள்: அதேசமயம், சர்க்கரை நோய்க்கு சிகிச்சை அளிப்பதில், இயற்கை மூலிகைகளுக்கும் நிறைய பங்குள்ளன.. மருத்துவ குணம் நிறைந்த சிலஇலைகளை மருந்தாக சாப்பிடுவதன் மூலம், சர்க்கரையும் கட்டுப்பாட்டுக்குள் வரும்.
உதாரணத்துக்கு சர்க்கரையை கட்டுக்குள் வைப்பதில் கற்றாழைகளும் பயன்படுகின்றன. அமெரிக்காவில் உள்ள NCBI (National Center for Biotechnology Information) என்ற ஆய்வில் கற்றாழையில் ஹைப்போகிளேசமிக் பண்பு இருப்பதால், ரத்த சர்க்கரை அளவை குறைப்பதாகவும் கண்டறிந்துள்ளனர். எனவே, கற்றாழை இலைகளை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் சர்க்கரை கட்டுக்குள் வரும்.
கொய்யா இலைகள்: இதில் கொய்யாப்பழம் இலைகள், சீதாப்பழம் இலைகளையும் சேர்த்து கொள்ளலாம். இவைகள் கணையத்தில் இன்சுலின் அளவை அதிகரிக்க செய்வதுடன், ரத்த சர்க்கரையையும் குறைக்கிறது. கொய்யா இலைகளில் ஃபிளாவனாய்டுகள், டானின்கள் மற்றும் பாலிபினால்கள் போன்ற ரசாயனங்கள் உள்ளன.. இவை நீரிழிவு எதிர்ப்பு பண்புகளையும் கொண்டிருக்கின்றன. எனவே, கொய்ய இலைகளில் டீ தயாரித்து குடிக்கலாம்.
அதேபோல, தெய்வீக மூலிகை என்று சொல்லக்கூடிய மருந்தினை நாம் வீட்டிலேயே தயார் செய்யலாம். வேப்பிலை, வில்வம், அத்தி இலை, முருங்கையிலை, அருகம்புல், நெல்லி, நாவல், சிறுகுறிஞ்சான், கீழா நெல்லி, மாவிலை, வெற்றிலை, தும்பை இந்த இலைகள் எல்லாவற்றையும் சமமாக எடுத்து, நிழலில் உலர்த்தி இடித்து, தூள் செய்து, ஒரு பாட்டிலில் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
கட்டுக்குள் வரும்: தினமும் உணவுக்கு முன்பாக கால் டீஸ்பூன் அளவு இதை எடுத்து தண்ணீரில் கலந்து குடிக்கலாம்.. இப்படி 3 வேளை உணவுகள் எடுப்பதற்கு முன்பும் இந்த பவுடரை சாப்பிட்டு வந்தால், சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும் என்கிறார்கள். எனினும், இந்த மருந்தை டாக்டர்களின் முறையான ஆலோசனையை பெறாமல் சாப்பிடக்கூடாது.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications