இட்லியில் உள்ள அதிக சத்துக்கள்.. இட்லி மாவு அரைக்கறீங்களா? காலை உணவின் பெஸ்ட் சாய்ஸ்.. ஏன்னு பாருங்க
சென்னை: இட்லியில் உள்ள சத்துக்கள் என்னென்ன? அறிவியல் ஆய்வுகளில் இட்லி பற்றி சொல்லப்பட்டுள்ள தகவல்கள் என்னென்ன? மிகச்சிறந்த உணவாக இட்லி கருதப்பட்டு வருவதற்கு என்னென்ன காரணம்? அதனை சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
ஒரு இட்லியை எடுத்துக் கொண்டால், வெறும் 35-40 கலோரிகள் மட்டுமே உள்ளன.. அதாவது, 2 கிராம் புரோட்டீன், 2 கிராம் நார்ச்சத்து, 8 மில்லிகிராம் இரும்புச் சத்து, மற்றும் 8 கிராம் கார்போஹைட்ரேட் நிறைந்திருக்கிறது.. ஆனால், கொழுப்பு என்பது சுத்தமாக கிடையாது. எண்ணெய் உபயோகப்படுத்தப்படுவதில்லை.. எனவே, ஆரோக்கிய உணவாக இட்லி கருதப்படுகிறது.
நார்ச்சத்து அதிகம் என்பதால், எளிதில் செரிமானக்கூடிய உணவாக இட்லி உள்ளது.. சமச்சீரான உணவாகவும் கருதப்படுகிறது.. செரிமானக்கோளாறு இருப்பவர்களும் இந்த இட்லியை காலை உணவாக தேர்வு செய்யலாம். எந்தத் தட்பவெப்ப நிலையிலும் இட்லி மக்களுக்கு ஏற்ற உணவாக உள்ளது..

சிறு தானியங்கள்: இட்லியில் நிறைய வகைகளை நாம் உருவாக்க முடியும்.. வெறும் அரிசியை தவிர்த்து, கம்பு, கேழ்வரகு, திணை, சாமை போன்ற தானியங்களையும் சேர்த்து கொள்ளலாம்.. அதேபோல, பச்சை பயிறு, கொள்ளு, பாசிப்பருப்பு, அவல் போன்றவற்றை சேர்த்தும் மாவு அரைக்கலாம்.. இதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள், உடல் எடை குறைக்க விரும்புபவர்களுக்கு இதுபோன்ற வெரைட்டி இட்லிகள் பேருதவி புரிகின்றன.
நொதித்தல் முறையில் இட்லி மாவு கிடைக்கிறது. அரிசி, உளுந்து இரண்டையும் 12 மணி நேரம் ஊற வைப்பதால், மாவாகி புளித்த பிறகு, "புரோ பையோடிக்ஸ்" என்ற நுண்ணுயிர் கலந்த உணவாக மாறி விடுகிறது. இது நன்மை செய்யும் பாக்டீரியா என்பதால் உடலுக்கு அதிக நன்மைகள் கிடைக்கிறது.
இந்த புளிப்பு மாவில், வைட்டமின் B12 உருவாவதால், இது நமக்கு தேவையான வைட்டமின் சத்துகளில் ஒன்றாகும். குடலில் தோன்றும் கெட்ட பாக்டீரியாக்களை அழித்து, செரிமான உறுப்புகள் சீராக இயங்க இட்லி உதவுகிறது. வீட்டில் அரைத்த மாவு என்றாலும், அதிகம் புளித்த மாவை உபயோகப்படுத்தக் கூடாது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
உளுந்து பருப்பு: இட்லியில் சேர்க்கப்படும் உளுத்தம் பருப்புகள், ஆரோக்கியமான மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. அல்சைமர், டிமென்ஷியா போன்றவற்றை இந்த உளுந்து தடுப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன.. அதுமட்டுமல்ல, சர்க்கரையின் அளவை உளுந்து கட்டுப்படுத்துகிறது.. கால்சியம் நிறைந்த பருப்பு என்பதால், எலும்புகள், பற்கள்,. நரம்பு மண்டல உறுதிக்கும், தோல், தலை முடி வளர்ச்சிக்கும் பேருதவி புரிகிறது.
ஆண்களின் பாலியல் ஹார்மோனான டெஸ்டோஸ்டெரோன் அளவை அதிகரிக்கக்கூடிய தன்மை உளுந்து பருப்புகளுக்கு இருக்கிறது.. இதனால் பாலியல் ஆரோக்கியம் காக்கப்படுகின்றன.. எனவே, அரிசியுடன் உளுந்து இணைக்கப்படும்போது, புரத சமநிலையும், தரமான புரதமும் கிடைக்கின்றன..
சத்தான இட்லி: அதேபோல, ஊறவைத்த அரிசியின் மூலம் கார்போஹைட்ரேட்டும், பருப்பின் மூலம் புரதச்சத்தும் ஒன்றாக சேர்ந்து இட்லி மூலம் நமக்கு கிடைக்கின்றன. இவ்வளவு சத்துக்கள் உள்ளதால்தான், இங்கிலாந்தின் தேசிய உணவுத் திட்டத்தின் கீழ் இட்லி கொண்டு வரப்பட்டுள்ளதாம்..
இட்லி புரோ பையோடிக்ஸ் உணவு என்பதால், மூளையுடன் தொடர்பு கொண்டு பதற்றத்தை தவிர்க்க உதவுவதாகவும், நாம் எடுத்துக்கொள்ளும் மருந்துகளின் நோய் எதிர்ப்பாற்றலை உடல் எளிதில் கிரகிக்க செய்ய தூண்டுவதாகவும், மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications