டேனியல் பாலாஜி மரணம்! இளம் வயது மாரடைப்பு தடுக்க தினமும் கருஞ்சீரகம்! ஹோமியோபதி டாக்டர் அட்வைஸ்
சென்னை: நடிகர் டேனியல் பாலாஜி போன்ற இளைய தலைமுறையினருக்கு மாரடைப்பு வரும் நிலையில் அதை தடுக்க கருஞ்சீரகத்தை அனைவரும் எடுத்துக் கொள்ள வேண்டும் என ஹோமியோபதி மருத்துவர் ஆஷா லெனின் அறிவுறுத்தியுள்ளார்.
நடிகர் டேனியல் பாலாஜிக்கு நேற்று இரவு மாரடைப்பு ஏற்பட்டு அவர் கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டும் அவர் உயிரிழந்தார்.

அவருக்கு வயது 48. அவருடைய உடல் புரசைவாக்கத்தில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. சிறிய வயதிலேயே மாரடைப்பு ஏற்பட்டு டேனியல் பாலாஜி இறந்தது திரைத்துறையினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டேனியல் பாலாஜியின் இறப்புக்கு திரைத்துறையினர், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் இதுகுறித்து ஹோமியோபதி மருத்துவர் ஆஷா லெனின் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியதாவது: டேனியல் பாலாஜியின் இறப்புக்கு ஆழ்ந்த இரங்கல். இளம் வயதினருக்கு மாரடைப்பு ஏற்படுவது அதிர்ச்சியாக இருக்கிறது.
மக்கள் கவனமாக இருக்க வேண்டும். மாரடைப்பை கட்டுப்படுத்த கருஞ்சீரகத்தை தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த கருஞ்சீரகம் ரத்த உறைதலை தடுக்கும். இவ்வாறு கருஞ்சீரகத்தின் பயன்களை டாக்டர் ஆஷா தெரிவித்திருந்தார். கருஞ்சீரகம் என்பது Black Cumin, Small Fennel என அழைக்கப்படுகிறது. இந்த பொருளை நாம் மறந்துவிட்டாலும் அரபு நாடுகளில் அன்றாடம் உணவுகளில் சேர்த்துக் கொள்கிறார்கள். மருத்துவக் குணங்கள் கொண்ட கருஞ்சீரகத்தில் தைமோகுயினைன் என்ற வேதிப்பொருள் உள்ளது.
இது வேறு எந்த பொருளிலும் இல்லை. இது நோய் எதிர்ப்பு சக்தியை தரவல்லது, அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், கால்சியம், இரும்புச் சத்து போன்றவை உள்ளன. ஆஸ்துமா, சுவாச பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுக்கும். இதயநோய் வராமல் தடுக்கிறது. புற்றுநோய் வராமல் தடுப்பதில் கருஞ்சீரகத்திற்கு முக்கிய பங்கு உள்ளது. இது எலும்பு மஜ்ஜை உற்பத்தியை சீராக்கி, புற்றுநோய் கட்டிகள் வராதபடி பாதுகாக்கிறது.
சோரியாசிஸ் நோய்க்கு மிகவும் நல்ல மருந்து. மாதவிடாயின் போது வயிற்று வலி, அதிக உதிரப்போக்கை தடுக்கும். இதை வறுத்து பொடித்து வைத்துக் கொண்டு தேன் அல்லது கருப்பட்டியுடன் கலந்து மாதவிடாய் தேதிக்கு 10 நாட்களுக்கு முன்னர் முதல், ஒரு டேபிள் ஸ்பூன் சாப்பிடலாம். கருப்பையில் உள்ள அழுக்கை நீக்கும்.
நீரிழிவு நோய், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும், வராமலும் தடுக்கும். தலைவலிகளுக்கு தீர்வு அளிக்கிறது. மாரடைப்பை தடுக்கும் ஆற்றல், கருஞ்சீரகத்திற்கு இருக்கிறது என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications