"ஜிம் ஒர்க்அவுட்.." கோவை இளைஞருக்கு மாரடைப்பு.. சுருண்டு விழுந்து துடிதுடித்து பலி.. அலறிய குடும்பம்
கோவை: எப்போதும் பிட்டாக இருக்க வேண்டும் என்பது நல்லதொரு ஆசை தான். ஆனால், அதற்காகத் தவறான வழியைத் தேர்ந்தெடுத்தால் அது மோசமான இழப்பை ஏற்படுத்தும் என்பதைக் காட்டும் வகையிலான சம்பவம் கோவையில் நடந்துள்ளது.
மாறி வரும் வாழ்க்கை முறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உடலில் புதுப்புது மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியுள்ளன. இதனால் முன்பு அரிதாக ஏற்பட்ட நோய்ப் பாதிப்புகளும் கூட பரவலாக ஏற்படத் தொடங்கியுள்ளன.

இதனால் நாம் முன்பை காட்டிலும் பாதுகாப்பாகவும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டியது அவசியமாகிறது. மைக்ரோ பிளாஸ்டிக் எனப்படும் நுண் பிளாஸ்டிக்குகள் இப்போது எல்லா இடங்களிலும் காணப்படுகிறது.
மாத்திரைகள்: மேலும், முன்பு மருந்து மாத்திரைகள் என்றாலே சாப்பிட வேண்டும் என்ற நிலை மாறி, அனைத்திற்கும் மாத்திரைகளை எடுத்து வருகிறோம். அதிலும் குறிப்பாகப் பல நேரங்களில் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மருந்துகளை எடுத்துக் கொள்கிறோம். மருத்துவர் பரிந்துரை இல்லாமல் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளக் கூடாது என்று தொடர்ந்து பலரும் அறிவுறுத்தினாலும் இதுபோல அனுமதியில்லாமல் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளும் போக்கு அதிகரித்தே வருகிறது.
அதுபோன்ற ஒரு மோசமான சம்பவம் தான் கோவையில் நடந்துள்ளது. கோவையில் கணபதி என்ற இடத்தில் 30 வயது இளைஞர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அந்த நபர் பி.தினகர் (30) என்றும் அவர் கோவை மணியகாரன்பாளையம் ரவீந்திரநாத் தாகூர் சாலையைச் சேர்ந்தவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
உடற்பயிற்சி செய்வதில் அதீத ஆர்வம் கொண்டிருந்த அவர், அங்கிருந்து உள்ளூர் ஜிம் ஒன்றில் தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்து வந்துள்ளார். மேலும், இவர் உடலை ஏற்ற டயட் உணவாக இறைச்சி சாப்பிட்டுள்ளார். அத்துடன் அவர் சில புரதச் சத்து மாத்திரைகளையும் எடுத்துக் கொண்டிருக்கிறார்.
மேலும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவருக்குச் சிறுநீரகக் கல் சிகிச்சையும் அளிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அதன்படி கடந்த வியாழக்கிழமை வழக்கம் போலச் சாப்பிட்டுவிட்டு, புரதச் சத்து மாத்திரைகளை எடுத்துக் கொண்டிருக்கிறார்.
இருப்பினும், அதைச் சாப்பிட்டு சற்று நேரத்தில் அவருக்கு திடீரென வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஏற்பட்டுள்ளது. அவரது தந்தை பழனிசாமி அருகே உள்ள மருந்துக் கடையில் இருந்து மருந்து வந்துள்ளார். இதற்கிடையே இரவு 11 மணியளவில், அவருக்குக் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் வலி நிவாரணி மாத்திரைகளைச் சாப்பிட்டுள்ளார்.
வலி நிவாரணி மாத்திரைகளைச் சாப்பிட்ட கொஞ்ச நேரத்தில் அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்துள்ளது. இதையடுத்து அவர் உடனடியாக அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும், அங்கே அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள்.. அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
எதிர்பாராத விதமாக அவருக்கு மாரடைப்பு ஏற்பட அவர் உயிரிழந்துள்ளார். இருப்பினும், அவரது குடும்ப உறுப்பினர்கள் இது குறித்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்,,
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சரவணம்பட்டி போலீஸார் விசாரணையைத் தொடங்கினர். அதில் அதிகப்படியான புரதச் சத்து மாத்திரைகளை எடுத்துக் கொண்டதே மாரடைப்புக்குக் காரணம் என்பதை போலீசார் கண்டுபிடித்தனர். அவர் எடுத்துக் கொண்ட மாத்திரைகள் குறித்து விசாரிக்க உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications